Friday, October 16, 2026

 அவன் ரெம்பப் படிக்கவில்லை.வேலை தேடி பல நிறுவனங்கள் நடத்திய நேர்காணலுக்குச் சென்று ம் வேலை கிடைக்கவில்லை . வேலை தேடித் தேடி வயது அதிகமானது.வயிறு என்று ஒன்று  இருக்கே. எப்படியாவது ஒரு வேலை வாங்கிவிடவேண்டும் என்று  சாதாரண வேலை தேடி அலைந்தான்  .நாட்டின் பொருளாதாரம் பின் தங்கிவிடும் என்று அவனை வேலைக்கு யாருமே தேர்வு செய்யவில்லை. . இறுதியில் அவன் ஒரு முடிவு செய்து  தேர்தலில் நின்றான் MLA  ஆனான் . படிப்படியாக உயர்ந்து நாட்டின் ஜனாதிபதியாகவும் ஆனான் . இப்போதும் நாட்டின் பொருளாதாரம் பின் தாங்கித்தான் இருக்கின்றது. ஒரு சிறிய வேலைக்கு பெரிய கல்வி தேவையாய் இருக்கின்றது  ஆனால் ஒரு பெரிய பதவிக்கு  சிறிய கல்விக்கூட த் தேவையில்லை. மக்களின் பொருளாதாரம் பற்றிய சிந்தனை சுதந்திரமானதாக இருக்கவேண்டும் 

No comments:

Post a Comment