Monday, February 21, 2011

eluthaatha kaditham-20

எழுதாத கடிதம்



கடந்த ஒரு வாரத்தில் ,தமிழ் நாட்டில் மட்டும் நடந்தவைகளாகச்
செய்தித் தாள்களில் வெளிவந்த தகவல்கள் .

1 .சென்னையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டை உடைத்து
     150 பவுன் நகை மற்றும் 50000 ருபாய் கொள்ளை .

2 கோயிலுக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் கத்தியைக்
   காட்டி சங்கிலியை சில மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு
   ஓடினர்.

3 . ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாகப் பயணம்
    செய்த கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு ,ஓடும்
    வண்டியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு மரணம் .

4 . நகைக் கடையை உடைத்து 20 இலட்ச ருபாய்
     மதிப்புள்ள நகைகள் கொள்ளை .

5 . ATM மெஷினைக் கடத்தி அதிலுள்ள பணத்தை ஒரு
     மர்மக் கும்பல் கொள்ளை அடித்தனர்..

6 அரசு வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க
   முயற்சி. அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்புள்ள
    நகைகள் தப்பித்தன .

7 வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக க் கூறி
   பலரிடமிருது இரண்டு கோடி வசூலித்து ,பணத்தை சுருட்டிக்
   கொண்டு ஒரு கும்பல் மறைந்தது .

8 .விமான நிலையத்தில் 1000 ருபாய் கள்ள நோட்டை
    வைத்திருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 60 இலட்ச
    ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

9 .நூதன முறையில் திருட்டு . ஓய்வூதியர் வங்கியிலிருந்து
    எடுத்த தன பணத்தை இழந்தார்.

10 . வட்டி கூடத் தருவதாகக் கூறி பலருடைய வைப்புத்
      தொகையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை
      மூடியதால் பலர் ஏமாந்தனர்


செய்தித் தாள்களில் வெளிவந்தவை 10 சதவீதம் தான்.
90 சதவீதம் இழப்புகளை, பழக்கம் ,வழக்கம் காரணமாக்
மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவதால் வெளிவருவதில்லை .

கண்காணித்தல் ,கட்டுப்படுத்துதல் போன்ற வலிமையான
அமைப்புகள் இல்லாததால் தவறு செய்பவர்கள் இவற்றை
அனுகூலமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் . இது
இன்றைக்கு நிலைப்பட்டுவிட்டது . ஒன்று நிலைப்பட்டு
விட்டால் அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது
கூடுதல் சிக்கலானது. ஒவ்வொரு முறையும் கூடுதல்
சிக்கலானபிறகே பிரச்சினையை அலசுவது

என்பது ஒரு நல்ல நிர்வாகத்திற்கு அழகில்லை

நாட்டின் பாதுகாப்பு பற்றி முதல் அமைச்சர்கள்
மகாநாட்டில் பிரதமர் ஆலோசனை .
இதற்காக 1000 கோடியில் ஒரு திட்டம்

நல்ல மக்களும் நல்ல அரசும் !

2 comments:

  1. சார் இது போன்று நிறைய நடக்கிறது ,.,....
    இதையும் மக்களும் , காவல்துறையும்
    வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது ...
    இந்நிலை மாறவில்லையெனில் நிச்சயம் நாட்டின் முன்னேற்றம்
    தடைபடும்

    ReplyDelete
  2. சார் word verification எடுத்துவிட்டால் கருத்துரை வழங்க கொஞ்சம்
    வசதியா இருக்கும்

    ReplyDelete