Thursday, November 24, 2011

vinveliyil ulaa

ரிஷப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்






ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் டாரஸ் (taurus ) ஆகும் .இது மேஷ ராசிக் குரிய
எரிஸ்சுக்கும்,மிதுன ராசிக்குரிய ஜெமினிக்கும் இடையில் உள்ளதுய். .நம் சூரியன்
இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.
கிரேக்க புராணத்தில் ஜீயஸ் என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை
பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து
கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார் .ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில்
நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின்
இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூடம் கற்பனை செய்யப்பட்டுள்ளது.




இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ் (pleiades ),ஹையாடெஸ் (Hyades ) என்ற

இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர். இதை ஒட்டியே
சைக்னேஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது .

No comments:

Post a Comment