Thursday, July 18, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 51

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
பிறர் அச்சப்படுமாறு பெற்றோர்கள் கையில் கத்தி ,அரிவாள் , தீப்பந்தம் என ஆபத்தான கொலைக்கருவிகள் இருந்தாலும் அவர்களுடைய  குழந்தைகள் அதைக்கண்டு பயப்படுவதில்லை. அதற்குக் காரணம் குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையே . இந்த நம்பிக்கையே  பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கற்றுக்கொண்டு பின்பற்ற காரணமாக இருக்கின்றது . அந்த நம்பிக்கைக்கு பெற்றோர்கள் முழுமையாகத் தகுதியுடைவர்களாக இருப்பது குழந்தையின் சிறப்பான, நேர்மறையான  வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.உரிமை தந்த அதிகாரத்தால் இந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளை அவர்களுக்காக வளர்க்காமல் தங்களுக்காக வளர்க்கும் போக்கால்  பெரும்பாலான குழந்தைகள் தங்கள் சுய சிந்தனைகளை இழந்து தனித்  திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தவறிவிடுகின்றன .   பெற்றோர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும் .சாகாத சமுதாயத்தை நிலைத்திருக்கச் செய்யவே எல்லோருக்கும்  பிள்ளைகளைப் பெறும் பாக்கியத்தை இயற்கை வழங்கியிருக்கின்றது. நமக்குத் பிறகு நம் குழந்தைகள் நம்மைப் போல வாழத் தகுதியும் திறமையும் உடையவனாக வளர்த்து ஆளாக வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கின்றது. இதில்  தவறு செய்யும் பெற்றோர்கள் சமுதாய நலனுக்கு கேடு செய்தவர்களாகின்றார்கள் எல்லாக் குழந்தைகளும்  பெற்றோர்களின் முயற்சியால் எதிர்காலத்தில் தங்கள்  தேவைகளைத் தாங்களே  நிறைவேற்றிக் கொள்ளும் தகுதியுடைவர்களாக வளர்ந்து விட்டால் சமுதாயத்தின் சீரழிவு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டு  விடும்.  சமுதாயம் சீர்கெட்டு வருகின்றது என்று வருத்தப்பட்டால் அதற்குத் தன் மகனைச் சான்றோன் என வளர்க்கத் தவறியதும் ஒரு காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் .
1.ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் குறைந்தது ஒரு மணிநேரமாவது குழந்தைகளுக்காகச் செலவிடவேண்டும் . அந்த நேரத்தில் நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது மனதில் ஆழமாகப் பதிய நீதிக் கதைகளை ச் சொல்லலாம் , குறும்படங்களைக் காட்டலாம் . விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுக்கலாம். இந்த விளையாட்டால்  பெறும் திறமை  எதிர்காலத்தில் அவனை அந்தத் துறையில் ஒரு தொழிலதிபராக்கிவிடலாம்.
2. சொல்வது எதுவானாலும் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது. எப்பொழுது கட்டாயப்படுத்துவதை எதிர்க்கின்றானோ அப்பொழுதிலிருந்து நம்பிக்கையை இழந்துவிடுவான்.காரணமின்றி கட்டாயப்படுத்தும் போது பெற்றோரின் அதிகாரத்தையும் ஆணவத்தையும் ஒரு குழந்தை தவறாக எடுத்துக் கொண்டுவிடுகின்றது . கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமை வந்தால் அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்த வேண்டும். வெறும் கட்டாயம் சுயநலமாகும். காரணத்தோடு கூடிய கட்டாயம் சமுதாய  நலமாகும்     

No comments:

Post a Comment