Friday, September 4, 2020

God-19

God-19

சொர்க்க லோகம் போன்ற ஓரிடத்தில்  தனியறையில் ஓர் அழகான இளம் பெண்ணும் ,ஓர் இளைஞனும் மட்டும் இருக்கின்றார்கள் . அந்தப் பெண் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து விட்டு இறுதியில் முழு நிர்வாணமாக நிற்கின்றார் .மனப்போராட்டம் நடக்கின்றது. அதன் விளைவு மூன்று விதமாக இருக்கலாம். அந்த இளைஞன் காமத்தால் தூண்டப்பட்டு தவறு செய்யலாம். அல்லது கண்களை மூடிக்கொண்டு சலனப்படும் மணத்தைச் சமாதானப்படுத்தி திசை திருப்பலாம்.அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக இருக்கலாம்.இந்த மனா நிலையைத்தான் தமிழ்ச் சான்றோர்கள் மூன்று மனித நிலைகளாகச் சித்தரிக்கிறார்கள். மனதை அடக்கி ஆளமுடியாதவன் கணப்பொழுது சுகங்களுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிகிறான் .இவன் மனிதருள் அரக்க குலத்திச் சேர்ந்தவன்.தனக்கு உரிமையில்லாத பொருள் தன்னுடைமையாகாது என்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள  முடியாமல் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு  கவனத்தைத் திசை திருப்புபவன்  மனிதன் .நிர்வாணத்தைப் பார்த்தும் மனம் நிர்வாணமாகவே இருக்கின்றது என்றால் அவன் தேவன். இயற்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று குணங்களும் விகிதாச்சார வேறுபாட்டுடன் இருக்கவே செய்கின்றது 

Wednesday, September 2, 2020

god-18

 God-18

தேவர்கள் நல்லொழுக்கமும், நல்லெண்ணமும் கொண்டு ,ஆக்கச்  செயல்களைச்  செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால்  அவர்களுக்கு   சொர்க்கம் கிடைத்தது அசுரர்கள் தீயவொழுக்கமும் ,தீய எண்ணமும் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால் அவர்களுக்கு நரகமே கிடைத்தது.சொர்க்கமும், நரகமும் கொடுக்கப்படுவவ்தில்லை, அது வாழும் முறைக்கு ஏற்ப இயல்பாக அமைவது என்பதை அறிவுறுத்தவே தேவர்களும் அசுரர்களும் கற்பனைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டார்கள் .

மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவ குணங்கள் உறுதியளிக்கின்றன .தனி மனிதனின்   முதன்மை நற்குணங்களான  அறநெறி ,அன்பு ,நேர்மை ,வாய்மை ஈதல்  போன்றவை முழு சமுதாயத்திற்கும் பாதுகாப்பாய்  விளங்கின. இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆண்டார்கள் .அதனால் மனம் எப்போதும் உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டியது    மனிதர்களின் தீய வாழ்க்கைக்கு அசுர குணங்கள் காரணமாயிருக்கின்றன. தனி மனிதனின்   முதன்மைத்  தீய  குணங்களான தீவினை ,வெறுப்பு ,பேராசை .பொய்மை , கயமை போன்றவை சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. இவர்கள் மனதால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள் .மனம்போன போக்கிலே வாழ்ந்ததால் தானும் வாழாமல் பிறரை வாழவும்  விடாமல்  சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.

     வேண்டிய பொருளைப் பெறும் வழிமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேறுபட்டிருந்தது .விரும்பிய பொருளை உழைத்துப் பெறுவது தேவ குணம் அதை மற்றவரிடமிருந்து அபகரித்துக் கொள்வது அசுர குணம்,செய்யும் முயற்சியில் எவ்வளவு இடைத்தடைகள் வந்தாலும் அறநெறி பிறழாமை தேவகுணம். அறநெறி மீறுதலை இயல்பாகக் கொள்ளுதல் அசுரகுணம் .பொய் கூற அஞ்சுவது தேவ குணம், பொய் கூற அஞ்சாமை அசுரர் குணம் , எதையும் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்வது தேவ குணம். எதிர்பார்ப்புடன் செய்வது  அசுர குணம்.

ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியான குணத்துடன் எல்லா  நேரங்களிலும் இருப்பதில்லை ..உணர்வுகளின் தாக்கத்தினால் மாற்றம் பெறுவதுண்டு .அதனால் தேவர்கள் சில சமயங்களில் அசுரர்களாகவும் , அசுரர்கள் சில சமயங்களில் தேவர்களாகவும் தாற்காலியமாக தோற்றம் தருவதுண்டு .சூழ்நிலைகளுக்கு ஏற்ப குணங்கள் மனதளவில் மாறிக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் தேவனும் ,அசுரனும் இருப்பதுண்டு. முழுமையான தேவனோ ,முழுமையான அசுரனோ மனிதருள்ளும்  இல்லை கடவுளிடமுமில்லை. கடவுளைக்  கடவுளாக மட்டுமே  அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்டவராக வர்ணிக்கும் போது  முழுமையான தேவனாகவும் , மனிதனாகக் கற்பிக்கும் போது தேவனாகவும் அசுரனாகவும் தெரிவிப்பது இதனால்தான், கடவுள்களும் சில சமயங்களில் கோபப்பட்டு சண்டை போட்டுக் கொள்வது அதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது.

ஒரு நேர்மையான மனிதன் வறுமையால் அல்லலுற்றான் .வறுமையின் கொடுமை யைத் தாங்க முடியாமல் ஒரு நாள் ஒரு வருக்குச் சொந்தமான பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான் .அப்போது அவன் மனதிற்குள் ஒரு போராட்டம் நடக்கின்றது .திருடு அது தப்பில்லை  என்று ஒரு மனம் கத்துகின்றது திருடு ,அது தப்பில்லை என்று மற்றொரு மனம் கெஞ்சுகின்றது  ஏன் தயங்குகின்றாய் , வறுமையை விரட்ட  இது நல்ல சந்தர்ப்பம்  என்று ஒரு மனம் நச்சரிக்கும் .திருடாதே , அதனால் தண்டிக்கப்படுவாய் .ஒரு முறை கெட்ட பெயர் சம்பாதித்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல . வாழ்க்கை முழுதும் தொடரும் என மீண்டும் கெஞ்சுதல் தொடரும். போராட்டத்தின் முடிவு  மனிதன் தேவனாகவே இருக்கின்றானா அல்லது அசுரனாக இருக்கின்றானா என்பதைப் பொறுத்து அமைகின்றது .. மகாபாரதப் போர் என்பது 100 தீயவர்களுக்கும் 5 நல்லவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது  மனதிற்கும்  மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே . சூரசம்காரம் மனதில் குடியிருக்கும் தீய எண்ணங்களை வேரறுக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கின்றது .அசுரன் ஒருவன் தாங்கமுடியாத  கொடுமைகளைச் செய்தால்  அதை எதிர்க்க ஒரு சூரன் வருவான் என்ற உண்மையை சமுதாயத்திற்கு உணர்த்துவது புராணக் கதைகள். 

ஆக்கத்தில் அழிவுமுண்டு அழிவில் ஆக்கமுமுண்டு. மேட்டில் பள்ளமுண்டு ,பள்ளத்தில் மேடுமுண்டு ,இன்பத்தில் துன்பமுண்டு , துன்பத்தில் இன்பமுமுண்டு.பொருளுக்கு எதிர்ப்பொருளுண்டு ,எதிர்பொருளுக்குப் பொருளுமுண்டு . இறுதிச் சமநிலைக்கு இவை இரண்டும் தவிர்த்துக் கொள்ள முடியாதன.  என்பதை உலகிற்கு உணர்த்துவதே கடவுள் குடும்பம் 

Tuesday, September 1, 2020

God-17

 

கடவுள்-17

மனதின் மாயத் தோற்றத்தையே கடவுளாக வர்ணித்துக் கொண்டார்கள் என்பதற்குப் புராணங்கள் ஆதராமாய் இருக்கின்றன.மனதிற்கும் ,கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகள் இதற்கு உறுதியளிக்கின்றன .மனதை - தன் மனத்தைக் கூட ஒருவர் ஓர் உருவமாகக் காணமுடியாது.மனதிற்கு சுயஉருவமில்லை .மனதை ஒரு உருவமாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்  ஒருவர் அவரையே பார்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. அது   மட்டுமல்ல மனதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புரிந்து கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொண்ட பிறகே  மனதைப்  பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிகின்றது.அது போல கடவுளையும் கண்களால் காணவே முடியாது போதிய தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கடவுளை உணரமுடியும். கடவுளை உயிருள்ள ஒரு உருவமாகப் பார்க்க விரும்பினால் ஒருவர் அவரையே கடவுளாக நினைத்துக் கொள்ளவேண்டும். மனம் ஒன்றைப் பலவாகும் பலவற்றை ஒன்றாகும் . கடவுளும் இயற்கை வடிவில் இதைத்தான் செய்கின்றார் . மனதின் படைப்புத் திறன் அளவற்றது. அது அனுபவங்களைப் பதிவுசெய்து வைக்கின்றது,எண்ணுகின்றது , சிந்திக்கின்றது,  உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றது, செயல்படத்  தூண்டுகின்றது .அது போல கடவுளின் படைப்புத் திறனும் மதிப்பிட முடியாத அளவிற்கு  அளவற்றது .  மனம் ஆற்றலின்றி பொருள் சமைக்கும் ,பொருளின்றி ஆற்றலை விளைவிக்கும் .கடவுளை போல எந்தவொரு வாகனமோ அல்லது ஊர்தியோ இன்றி பல ஒளியாண்டுகள் தொலைவு நினைத்த நொடியில் கடக்கும்.எதை அடைய  விரும்பி முயற்சி செய்து ஈடுபாட்டுடன்  கூடிய உழைப்பைத் தொடர்ந்தால் அதை நிச்சியமாக அடையமுடியும். ஒன்றைப் பெறுவதற்கான வழி காட்டும் மனதைப்  போல  கடவுளும் தகுதியுடைய மனிதர்களுக்கு வழிகாட்டுகிறார். மனம் முயன்று சரியாகச் செயல்பட்டால் அளவற்ற செலவத்தை எவரும் ஈட்டலாம். கடவுளிடம் வேண்டிக் கொண்டால் பொன்னும் பொருளும் அள்ளித் தருவார் என்பதைப்போல , ஒருவர் தன் மனதை வேண்டிக்கொண்டாலும் அது போல நிகழும் .

எல்லையற்ற பிரபஞ்சத்தை உருவாக்கிக் காப்பதையும் ,பேரூழியில் அழிக்கவேண்டியதை அழிப்பதையும் இடைவிடாது செய்யும் முழுமுதற் கடவுள் சிவன் என்பார்கள்.மும்மூர்த்திகளில் முதல்வன் .சைவ சித்தாந்தத்தின் தலைவன் உண்மையில் .எதுவும் அழிப்பதற்காக ஆக்கப்படுவதில்லை . புதிய இயற்கைச் சூழலுக்கு ஏற்ப ஆக்கப்படுவதற்காகவே அழிக்கப்படுகின்றன.பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதானே .சிவன் பொருளென்றால் பார்வதி ஆற்றல். சிவன் அறிவு என்றால் பார்வதி சக்தி. எப்படி பொருளும் ஆற்றலுமின்றி எதையும் ஆக்கமுடியதோ அது போல அறிவும் சக்தியுமின்றி  ஆக்கமுடியாது. அறிவும் சக்தியும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும், இனப்பெருக்கத்தின் மூல மந்திரத்தைச்   சுயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதையும்  மனிதர்களுக்கு அறிவுறுத்தவே அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார் போலும்.

இந்த அண்டத்தில் உயிர்களை உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவர் பிரம்மா ஆவார், ஒருவருடைய மனமே கற்பனை செய்கின்றது ,எண்ணுகின்றது ,சிந்திக்கின்றது, செயல்படுகின்றது. எதையொன்றையாவது படைக்கவேண்டும் என்றால் அதற்கான மூலம் மனமே. மனதின் படைப்புத்  திறனே பிரும்மம் ஆகின்றது. ஒன்றை உருவாக்குவதற்கு  திறமை மட்டும் போதாது அது தொடர்பான அறிவும் தேவை . பிரும்மாவும்  சரஸ்வதியும் இணையும் போது உருவாக்கம் மேம்படும் என்பதை உணர்த்துவது போல இருக்கின்றது  , அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவர் விஷ்ணு.,. படைப்பால் பயனீட்டுவது என்பது பொருள் சேர்ப்பதும் .அதைப் பாதுகாப்பாக வைத்துக்  கொள்வதும் , பயனுள்ளவாறு செலவழிப்பதுமாகும். இது மனதின் ஆளுமைத் திறனோடு தொடர்புடையது. ஆளுமைத் திறன் என்பது நேர்மையாகப் பொருளீட்டுவது மட்டுமில்லை அதை  நேர்மையாகச் செலவழிப்பதுமாகும் .இனிய வாழ்க்கைக்கு  உகந்த இரகசியத்தை மனதறியுமாறு எடுத்துரைப்பது விஷ்ணுவும் லட்சுமியுமாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது மக்கள் நம்பிக்கை.. உலகம் தீமை செய்பவர்களால் அழிவதைக்காட்டிலும் .தீமை செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களால்தான் விரைவாக அழிகின்றது என்ற உண்மையை உணர்த்துவது ஆளுமைத் திறனே . ஒவ்வொரு மனிதனும் சுமுதாயக் கேடுகளால் பாதிக்கப்படும்போது அதை எதிர்கத்  துணிவு கொள்வான் .அதையே விஷ்ணு அவதாரம் என்று குறிப்பிடுகின்றார்கள்

 மனமென்று  ஒன்று இருந்தால்தான் அங்கு படைப்புத் திறனும், ஆளுமைத் திறனும் இருக்கக் கூடும். தகுதியான  மனம், மனதின் படைப்புத் திறன், மனதின் ஆளுமைத் திறன் ஆகிய மூன்றும் இயல் வாழ்க்கையில் முதன்மைப் பொருளாகின்றன. இவற்றையே சான்றோர்கள் மும்மூர்த்திகளாக  உருவகப்படுத்தியுள்ளார்கள் . மனதின் மூலப்பொருட்கள் எண்ணங்கள் மட்டுமே.அவை நல்ல  எண்ணங்களாகவும்  இருக்கலாம் , தீய எண்ணங்களாகவும் இருக்கலாம் .வளத்தையும் நலத்தையும் கொடுக்கும் நல்ல  எண்ணங்களை தேவர்கள் என்றும் , அதைக் கெடுக்கும் தீய எண்ணங்களை அரக்கர்கள் என்றும் உருவாகப்படுத்தியுள்ளார்கள். .ஒவ்வொருவருடைய மனதிலும் இவ்விரு எண்ணங்களுக்கிடையே முடிவின்றி நடக்கும்  போராட்டத்தையே  தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடக்கும் போராட்டமாக சித்தரித்துள்ளார்கள். இந்த அடிப்படைக் கருத்துடன் தான் புராணங்களும் ,இதிகாசங்களும் கதையாக எழுதப்பட்டுள்ளன. அதன் நோக்கமே கருத்து வேறுபாடின்றி எல்லோரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனைதான்..  

Thursday, August 27, 2020

God-16

God-16 

தமிழ் இலக்கியங்களில் கடவுள் 

தமிழ் இலக்கியங்கள் யாவும், நூலின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும்  கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகின்றன. தான் சொல்லப்போகும் கருத்துக்கள் யாவும் சமுதாய நலனுக்காக நடுநிலையோடு அமைய தன்னைத் தானே தகுதிப்படுத்திக் கொண்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு ஒழுக்கநெறியாக கடவுள்வாழ்த்தை மேற்கொண்டனர் . இந்த வழக்கம் சங்க காலம் முழுவதும் (கி.மு.10ஆம் நூற்றாண்டி லிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை )  நிலைத்திருந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உருவமற்ற கடவுள் ஒருவராக இருந்தாலும் , மக்களின் மனநிலைக்கு ஏற்ப  உருவமுள்ள தெய்வங்கள் பலவாயின மக்களின் வாழ்வாதார த்திற்கு எது அடிப்படையாக இருக்கின்றதோ அதன் வளத்தை பாதுகாப்பதற்காக இப்படி உருவமுள்ள கடவுள்களை படைத்துக்கொண்டார்கள்  மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சிநிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் டத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத் திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இறைவணக்கம் என்பது நேர்மறையான சிந்தனை , நல்லொழுக்கம் ,சமுதாயக் கட்டுப் பாடு   இவற்றை மக்களிடையே அழிந்துபோய்விடாமல் நிலைப்படுத்துவதற்காகவே வலியுறுத்தப்பட்டது

 

செயற்கைக் கோள்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக்காலத்திலேயே தமிழர்கள் 9 கோள்களுக்கும் சிலைவடித்து வணங்கினர் . மக்களின் வாழ்க்கையில் அவை நேரடியான தொடர்பு எதையும் பெற்றிருக்க வில்லை என்றாலும் , பூமித் தாயின் கூடப்பிறத்தவர்கள் என்ற முறையில்  மதிப்புக்கொடுத்தனர் . சூரியக் குடும்பம் என்பது இயற்கையின் ஒரு அம்சம் .இயற்கையின் எந்த  படைப்பையும்  வணக்கத்திற்குரிய ஒரு வடிவமாகக் கொள்வது மரபு . இறந்து இயற்கையோடு இரண்டற க் கலந்தவர்களையும் வணங்குவது இந்த மரபின் அடிப்படைதான் , இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை நடு கல் என்பார்கள்.  இறந்தவர்களை நினைவுகூர்வதற்காகவும் , அவர்களுடைய நல்ல எண்ணங்களைக் கொண்டு செலுத்துவதற்காகவும் இந்த நடு கல்லை வணங்குவதை வழக்கமாக கொண்டார்கள் . உண்மையில் இப்படிச் செய்யும் போது பிறப்பு இறப்புடன் தொடர்புடைய  இயற்கை உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும் என்று நம்பினார்கள்    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவேஎன்ற புறநானூற்றுப் பாடல் (பா 335) இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும்


Wednesday, August 26, 2020

God-15

 ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்களில் கூட்டம் அலைமோதுகிறது.பணம் வசூலித்து கும்பாபிஷேகம் செய்கின்றார்கள். கடவுளுக்கு  நேர்த்திக்கடன் என்று கோயில் கோயிலாகச் செல்கின்றார்கள்.ஆன்மிகச் சுற்றுலா இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. கடிய நெடும் பயணத்தை மேற்கொள்ளக் கூடத்  தயங்குவதில்லை.நடைப் பயணமாக ஆன்மிகத் தளங்களுக்குச் செல்வது ,காவடி, பால்குடம் எடுப்பது தீ மிதிப்பது ,விரதம் இருப்பது ,எனக்  கடவுளை நண்பனாகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மெய்ப்பொருளை அறியாமல் கடவுளை நாடுபவர்கள் இரண்டு விதம். ஒரு வகையினர்  செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் என்று கடவுளுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுக்கின்றார்கள் மற்றொரு வகையினர் உழைப்பைத் துறந்து விட்டு தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்து வைப்பார், கேட்பதையெல்லாம் இலவசமாகத் தருவார் என்று ஒவ்வொரு  கடவுளாக வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்    இதனால் மக்களுக்கு ஆன்மிக உணர்வும் , உண்மையான கடவுள் நம்பிக்கையும் மேலோங்கி வருகின்றனவா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் வார்த்தையாக வெளிப்படாவிட்டாலும் ஒவ்வொருவருடைய மனதிலும் ஓங்கி ஒலிக்கவே  செய்கின்றது.

கடவுளை நம் முன்னோர்களுக்கு முன்னோர்கள் கடவுளை உண்டாக்கிச்  சமுதாய நலனுக்காக அறிமுகப்படுத்தினார்கள் .சிலர் மெய்ப்பொருளைத் தெரிந்து கொண்டு கடவுளை ஒப்புக்கொண்டார்கள்  பலர் சான்றோர் சொல் தவறக்கூடாது என்று   கடவுளை ஏற்றுக்கொண்டார்கள் .கடவுளால் தனிமனிதனுக்கு நேரடியாகப் பயன் கிடைக்குமோ இல்லையோ ஆனால் சாகாத சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று எல்லோரும் நம்பியதால் காலங்காலமாய் கடவுள் மக்களால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடவுள் வெறும் கடவுளாக மட்டும் இருந்த போது  எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலை இருந்தது. அவர் செல்வந்தராக நிலை மாறியபோது சுயநலவாதிகள் கடவுளைச்  சொந்தம் கொண்டாட முயற்சித்தனர். அச் செல்வத்தை அபகரிக்கவே இப்படி இவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று பகைமை ஏற்பட ஆரம்பித்தது . அப்பொழுது தொடங்கி ,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ,கடவுளை நம்பிக்கையற்றவர்கள் என்ற பிரிவினை தலையெடுத்தது. சிலர் பிரிந்து சென்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஒரு புதிய கடவுளை ஏற்படுத்திக் கொண்டார்கள் . உலகில் உள்ள எல்லோருக்கும் கடவுள் பொதுவானர் என்றால் பிரிவினைவாதிகள்  தங்களைக் கடவுளால்  முதன்மைப்படுத்திக் கொள்ள முடியாது போனது. அதனால் தனி மனிதர்களையே கடவுளாக்கிக் கொண்டு தனி மதத்தை தோற்றுவித்துக் கொடார்கள் . பிரிவினை அதிகரிக்க அதிகரிக்க கருத்து வேறுபாடு காரணமாக மக்களிடையே குழப்பம் மேலிட சண்டையும் சச்சரவும் இயல்பாகின. இரு வகையினருமே கடவுளின் மெய்ப்பொருளை அறியாமல் தொடர்ந்து கடுஞ் சொற்களால் சண்டைபோட்டுக் கொண்டு வருகின்றார்கள் .காலங்காலமாய்ப்  பின்பற்றி ஒழுகப்பட்ட ஒரு பழக்கம் திடிரென்று ஒருநாள் முட்டாள்தனமான பழக்கமாகிவிடாது. கடவுளின் மெய்ப்பொருளை அறியாமலேயே நீண்ட காலமாய் கடவுளை என்றுக்கொண்டதின் விளைவே இந்நிலை.

கடவுள் எப்பொழுது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஏன் அறிமுகப்படுத்தினார்கள் ?இதன் பின்னணியை நுட்பமாய் ஆராய்ந்தால் நாம் கடவுள் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது எவ்வளவு தவறானது என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது .கடவுள் நிச்சியமாக மனிதனின் படைப்பே,சமுதாயத்திற்கு நலம்பயக்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோற்றமே கடவுளானது .கடவுள்  கொள்கையை ஒருவர் பின்பற்றும்போது  அவர் தனக்குத் தானே கடவுளாகிவிடுகின்றார். வேற்று மதத்தினர் இப்படிப்பட்ட மனிதர்களையே கடவுளாக்கி வணங்குகின்றனர்.

கடவுள் பலவாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும் , மதம் சார்ந்து மதத் தலைவர்களாக இருந்தாலும் அடிப்படையான கடவுள் கொள்கையில்  மாற்றமில்லை . ஒவ்வொரு மனிதனும் தீய செயல்களைச் செய்யாமல். நல்வழியில் வாழ்ந்து, பிறருக்கு முடிந்த உதவிகளை செய்து  தானும் தான் வாழும் சமுதாயமும் வளமோடு நிலைத்திருக்க கடவுள் கொள்கை துணைபுரிகின்றது இது  உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தங்கள் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகும். இயற்கையோடு ஒன்றிணைந்து ஒத்ததிரத் தூண்டும் மனப்போக்கு.இயல்பாக வாழும் கலையை தன்வசப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே வழிகாட்டிக்கொள்ளும் எளிய அணுகுமுறை. ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக்கொள்ள உதவும் உன்னதமான வழிமுறை .சாகாத சமுதாயத்தின் மூல மந்திரம் . 

புரிதலின்மையால் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் , கடவுளை மறுப்பவர்களை சண்டைபோட்டுக்கொள்கின்றார்கள் .இவர்கள்   கடவுள் கொள்கையின் மறைபொருளை தாங்களும் அறிந்துகொள்ளாமல் மற்றவர்களும் அறியமுடியாமற்  செய்துவிடுகிறார்கள்.

God-14

 

கடவுள் -14

கடவுள் நம்பிக்கையும், கடவுள் அவநம்பிக்கையும் இன்றைக்கு மிகவும் போலித்தனமாகி வருகின்றது.  இந்த விஷயத்தில் ஏறக்குறைய எல்லோருமே வேஷமிட்டு  நடிக்கிறார்கள் என்று தான்  சொல்லவேண்டும். கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் மரபு வழியாகவே பின்பற்றப்படுகின்றது. அதனால் கடவுள் கொள்கையை உணர்த்தும் மெய்ப்பொருள் மெல்ல மெல்ல மனதை விட்டு அகன்று இன்றைக்கு அது மொத்தமாகக் காணாமற் போய்விட்டது. கடவுளை மறுப்பவர்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடவுள் நமபிக்கையை வளர்த்துக் கொள்வது  கடவுள் நம்பிக்கையாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வெல்வதை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு கடவுளை மறுப்பது கடவுள் அவநம்பிக்கையாகாது .இரு வகையினருமே ஒருவர் மற்றவரை வெல்வதற்காகவே கடவுளை ஒரு கருப்பொருளாக்கிக் கொண்டார்களே ஒழிய நம்பிக்கைக்காகவோ அல்லது அவநம்பிக்கைக்காகவோ இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதை விட , அறிந்து கொள்வதை விடப்  புரிந்து கொள்வதாகும் . கடவுள் கொள்கையின் மெய்ப்பொருள் கடுமையானதுமில்லை, விரிவானதுமில்லை .எல்லோராலும் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றத்தக்கவாறு மிகவும் எளிமையானது . ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வேலைகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் மனிதனையும் பிற உயிரினங்களையும் படைத்தான். மனிதனைத் தவிரப் பிற உயிரினங்களெல்லாம் இதை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் இன்னும் புரிந்து கொள்ளாததுபோல் நடிக்கிறான் .தான் விரும்பும் எதையும் தன்னால் பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு தன்னோடு தான் வாழும் சமுதாயத்தையும் வளப்படுத்தி அதன் மூலம் தன எதிர்காலச் சந்ததியினரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துபவனே உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவன் .இந்த மனப்பான்மை ஆன்மிக நூல்களைக் கற்பதால் மட்டுமே வருவதில்லை.இயற்கையைப் புரிந்து கொண்டு எண்ணங்களை வளப்படுத்திக் கொள்வதால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது .

கடவுள் நம்பிக்கை எவ்வளவு போலியானது என்பதை பெரும்பாலான மனிதர்கள் பின்பற்றும் ஒரு இயல்பான செயல்முறையைக் கொண்டே விளக்கமுடியும்

ஒருவர் இனம்புரியாத ஒரு வகை நோயால் அவதிப்பட்டார் .கைவைத்தியம், மந்திரித்தல். நேர்த்திக் கடன் முடித்தல் ,பூஜை செய்தல் போன்றவற்றோடு மருத்துவர்களையும் பார்த்தார் .குணமாவதில் முன்னேற்றம் இல்லாததால் அடுத்தடுத்து வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்து அவர்கள் தந்த பல்வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டார் . சில நாட்களில் அவர் கொஞ்சம் குணமானார். அடுத்தநாள் அவருடைய மனைவிக்கு அதே நோய் தொற்றிக் கொண்டது . ஆனால் அவரால் அந்த நோய் குணமாவதற்கான சரியான வழியைக் கூறமுடியவில்லை. எதிலாவது ஒன்றில் குணமாகும் என்ற நம்பிக்கையில்  ஒன்றில் கூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாததின் பின்விளைவே இது.  பொதுவாகப்  புரிதலின்மை பெரிய அளவில் இருக்கும் போது அவநம்பிக்கையும் அப்படியே இருக்கும் .

கடவுளே எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்கவேண்டும் .கடவுளே எனக்குத் தங்கச் சுரங்கம் போல புதையல் கிடைக்க வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு தேவதை வந்து பொன்னும் பொருளும் அள்ளித்  தரவேண்டும்.கடவுளே எனக்கு எது கேட்டாலும் அதைத் தரக்கூடிய அட்சய பாத்திரம் வேண்டும் . இப்படி கடவுளிடம் போய் கேட்பவர்கள் நிறையப் பேர். உழைப்பின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்களே தகுதியை வளர்த்தும் பயன்படுத்தாமல் வீணடிக்கின்றார்கள்.

Tuesday, August 25, 2020

God-13

கடவுள் -13

மீன்கள்   நீந்திச் செல்ல வேண்டும் என்று துடுப்புக்களைக் கொடுத்தான் . பறவைகள் பறந்து செல்ல வேண்டும் என்று இறக்கைகளைக்  கொடுத்தான். ஒவ்வொரு உயிரினமும் தங்களைத் தாங்களே எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் . எதிரிகளை வீழ்த்தவும் தேவையான உடல் வாகுவையும்  வலிமையையும் பெற்றிருக்கின்றன.  மனிதனோ ,மனிதனால் படைக்கப்பட்ட கடவுளோ இப் பணியைப் பேரளவிலான எண்ணிக்கையில்,தொடர்ந்து  செய்தால் நம்பமுடியாத அளவு  பிழைகளே  ஏற்படும் .ஒன்றுக்குரிய  தனிச் சிறப்பை மற்றொன்றுக்கு இடம் மாற்றி கொடுக்கும் தவற்றை இயற்கை ஒருபோதும்  , செய்வதில்லை..இயற்கையே கடவுள் எனக் கொண்டால் மட்டுமே உயிரினங்களின் தோற்றத்தை கடவுள் செய்தார் என்று நம்புவதற்குக் காரணமிருக்கும் . 

இறைவனும் இயற்கையும் வெவ்வேறா என்ன? இயற்கையை இறைவனாகப் பார்ப்பது ஆன்மிகம் ,இறைவனை இயற்கையாகப் புரிந்து கொள்வது  அறிவியல்.  இயற்கைக்கும் இறைவனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன . அவை கடவுளே இயற்கை, ,இயற்கையே கடவுள் என்ற உயரிய கருத்தை விளம்பரப்படுத்துகின்றன.

இயற்கைக்கு தொடக்கமும்  இல்லை முடிவும்  இல்லை . அதுபோல கடவுளுக்கும் ஆதியும் அந்தமும் இல்லை .இயற்கையின் பரிமாணம் , ஆற்றல் ,செயல்திறன் எல்லாம் கற்பனைக்குக்  கூட எட்டாத அளவிற்கு அளப்பரியது..  மனிதனுக்கு மீறிய  இந்தகைய பண்புகள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட  கடவுளுக்கும்   கற்பிக்கப் பட்டிருக்கின்றன இயற்கையை ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடமுடியாது என்பதால் அதை  ஒரு  குறிப்பிட்ட உருவத்தால் மட்டும்  அடையாளங் காட்ட  முடியாது.  சூரியோதயம் .சந்திரோதயம் .மலை ,ஆறுகளின் தொடக்கம்  .விளைந்த வயல் என இயற்கைக்குப் பல வடிவங்கள் இதே போல மனிதர்கள்  விருப்பம் போல கடவுளின் உருவத்தை வடித்துக்  கொண்டார்கள் .அவை கடவுளுக்கு மேலாடை போல இருந்ததே ஒழிய ,கடவுளின் அடிப்படைக் கொள்கையைப் புரிந்து கொள்ளும் படியான நிலையையோ அல்லது மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் முறையில் ஒரு முன்னேற்றத்தையோ தரவில்லை. எல்லாக் கடவுள்களும்,எம்மதத்தை, எவ்வினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தீயவைகளை அழித்து நன்மைகளைத் தந்து வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன என்ற அடிப்படைக் கொள்கையை நோக்கமாகக் கொண்டிருந்தன  -கடவுளை மனிதனாக உருவகப்படுத்தித் தொழுவதும் ,மனிதனைக் கடவுளாக்கி மகிழ்வதும் மதங்களில் காணப்படும் வேற்றுமை என்றாலும் அதன் அடிப்படை மக்களைச் சாகாத சமுதாயத்திற்காக எப்போதும் நன்மக்ககளாகவே இருக்கச் செய்வதுதான்.

இயற்கை எங்கும் எதிலும்  நிறைந்திருக்கின்றது . அது  உடலுக்கு வெளியில் மட்டுமில்லை  உள்ளுக்குள்ளும்  இருக்கின்றது.இந்தப் பண்பை  கடவுளுக்கும் கற்பித்துள்ளார்கள் நுணுகிய அணுவிலிருந்து ,பெரிய பேரண்டம்  வரை           எதிலும் இயற்கை  .  கடவுளும் அப்படியே , இயற்கையின் படைப்புக்கள் எல்லாவற்றிலும் அடங்கியிருக்கின்றார்   உடலுக்கு வெளியில் மட்டுமில்லை , உள்ளுக்குள்ளும் கடவுள் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்று ஆன்மிகவாதிகள் கூறுவார்கள் .வெளியில் கடவுளும் , உள்ளே கடவுள் இல்லாமையும் இருந்தால் , சமநிலைப் பாதிப்பால்  சமுதாயம் பாதிக்கப்படவே செய்யும். மனதில் கடவுள் நிறைந்திருக்கும் போது ஒவ்வொரு மனிதனும் கடவுளாகவே ஆகிவிடுகிறார்கள் .அது சமச்சீரான சமுதாயம் உருவாவதற்கு வழிவகுக்கின்றது. அங்கு ஒவ்வொருவருமே சமுதாயக் காவலர்களாக இருப்பதால் சமுதாயத்திற்கு உறுதியான பாதுகாப்பாக இறுதிவரை இருக்கின்றது.

இயற்கைக்கும், கடவுளுக்கும் மௌனமே பொது மொழி. தயக்கம் காட்டாமல்  செயல் புரிவதற்கு எப்போதும் தயாராக இருப்பவன் பேசிக்கொண்டே இருக்க மாட்டான். பேசுவதற்கு மொழி கூட அவனுக்குத் தேவைப்படாது .இயற்கையும் சரி, கடவுளும் சரி எதையும் செயலில் காட்டுவதையே இயல்பாகக்  கொண்டுள்ளன. இயற்கையைச்  சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்பவர்கள் நலம் பெறுகின்றார்கள். மாறாக மாசுபடுத்தி நாசப்படுத்துபவர்கள் துன்பப் படுகின்றார்கள் .பருவத்தே பயிர் செய்பவர்கள் நல்ல மகசூலைப் பெறுகின்றார்கள் . நீர் மண்டலத்தையும் , வளி  மண்டலத்தையும் நச்சூட்டுபவர்கள்  உடல் நலத்தை இழக்கிறார்கள். அதை போல கடவுளை ப் போற்றுபவர்கள் மன நலம் பெறுகின்றார்கள் தூற்றுபவர்கள் தானும் கெட்டு ,பிறரையும் கெடுக்கின்றார்கள்         

இயற்கை தானாக வலியவந்து உதவுவதில்லை. மனித முயற்சிகளினால் மட்டுமே இயற்கையின் பயனை நுகரமுடியும் .கடவுளுக்கும் இது பொருந்தும். கடவுளிடம் விண்ணப்பித்து விட்டு சும்மா இருப்பவர்களுக்கு எந்த பயனும் கிடைத்துவிடுவ தில்லை. மனித முயற்சிகளைக் கொண்டே கடவுள் மனிதர்களுக்கு உதவமுடியும் என்பதால் , ஒவ்வொரு மனிதரும் கடவுளின் ஏஜெண்டுகளே அல்லது கடவுளே. எனவே கடவுள் இயற்கை என்றால் உருவமில்லாத கடவுள்  உள்ளேயும் வெளியேயும், எங்கும் இருப்பதாகவும் , கடவுள் உருவமுள்ளவர் என்றால் உள்ளே இருப்பதாகவும், அப்போது கடவுள் ஒருவருடைய தோற்றத்தையே தன்  உருவமாகக் கொண்டுவிடுகின்றார் என்றும் கொள்ளலாம்.     

Monday, August 24, 2020

God-12

கடவுள் -12

இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் அவை உயிரற்றவையாக இருந்தாலும் உயிருள்ளவைகளாக இருந்தாலும் அடிப்படை மூலப்பொருட்கள் ஒன்றே, இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது.அவை யாவும் அணுக்களாலும், அவற்றின் கட்டமைப்பால் உருவாகும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்டவைகளாக இருக்கின்றன, மூலக்கூறுகளின் உணர்திறன் ,அணுக்களைவிடப்  பல மடங்கு அதிகமானது என்பதால் உயிரினங்களின் கட்டுமானத்தில் அவை முக்கியப் பங்கேற்கின்றன  ஆனால் இந்த அணுக்கள் அணுக்களாகவே உற்பத்திசெய்யப்படுவதில்லை. அணுக்கள் தொகுப்பாக்கம் மூலமும் ,  அணுக்களின் மூலப்பொருட்களான புரோட்டானும் ,எலெக்ட்ரானும் நேரடியாக ஆற்றலிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன, . ஆற்றலிலிருந்து பருப்பொருளாக்கம் (materialization) மூலம் புரோட்டானும், எலெக்ட்ரானும் ஆற்றல்மாறாக் கோட்பாட்டிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டாலும் , ஆற்றலிலிருந்து நேரடியாக அவை எப்படி உருவாகின்றன?. அப்படி உருவாகும் போது அவைகளுக்கு எப்படி மின்னேற்றம் (Charge) கிடைக்கின்றது?  என்பதெல்லாம் இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கின்றன .  .விஞ்ஞானத்தில் எவ்வளவு  விளக்கம் தேடியும் சரியான  விடை கிடைக்கவே இல்லை . அடைப்படைத் துகள்கள் யாவும் ஆற்றலிலிருந்து மின்னேற்றத்துடனும், குவாண்ட மதிப்புடன் கூடிய இயற் பியல்  பண்புகளுடனும்  இயற்கையால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மறுப்பின்றி ஏற்றுக்கொள்வது மட்டுமே இதற்குத் தீர்வாகின்றது.  . அணுவின் கட்டமைப்பை விவரிக்கும் போது நீல்ஸ் போர் (Niels Bhor) என்ற என்ற விஞஞானி  இந்த வழிமுறையைத் தான் கையாண்டார். அணுக்கருவைச் சுற்றி  வலம்  வரும் எலெக்ட்ரான் முடுக்கப்பட்ட இயக்கத்தின் காரணமாக ஆற்றலை உமிழாமால்  தொடர்ந்து  இயங்குகின்றது என்பது அறிவியல் விதிக்கு மீறியது என்பதை விட இயற்கையால் அனுமதிக்கப்படுகிறது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இவர் கூறுவார்

 இந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றியது என்று கூறுகின்றார்கள். இந்த பெரு வெடிப்பு  உண்மையிலேயே நிகழ்ந்திருக்குமா  என்பதற்கு  பெருவெடிப்புக்கு முன்னர்  இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது? காலத்தின் நிலை என்ன ? என்பதற்கான விளக்கம் கொடுக்க முடியாமல் போனதே ஒரு வலிமையான காரணமாக இருக்கின்றது . எல்லையற்ற வெளியையும் , ஆற்றலையும் இயற்கை பெரு வெடிப்பு நிகழ்ந்த அந்தக் கணத்திலேயே பெறுவது என்பது மந்திரத்தால் மட்டுமே முடியும். வெளியும் பொருளோடு சேர்ந்து விரிவடைகின்றதா இல்லை ஏற்கனவே இருக்கும் வெளியில் பொருட்கள்  மட்டும் விரிவடைகின்றனவா  என்பதற்கான விளக்கத்தை அறிவியல் பூர்வமாக அளிக்கமுடியாததால் பிரபஞ்சத்தின்   தொடக்கத்தைக்கூட அறிவியல் முரண்பாடு என்பதை விட இயற்கை அனுமதிக்கின்றது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. 

புரோட்டானும் எலெக்ட்ரானும் கூடும்போது மிகுந்த ஆற்றல் பெற்றிருக்கும் நிலையில் அவை ஒன்றிணைந்து நியூட்ரானாக மாறுகின்றன.நியூட்ரான் நடுநிலை மின்னூட்டம் கொண்ட துகள். அணுக்கருவிற்குள் நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள் விலகிச் செல்லாமல் ஒட்டியிருக்குமாறு செய்வது இந்த நியூட்ரான்களே. தாழ்ந்த ஆற்றல் நிலையில் அவை ஹைட்ரஜன் அணுவாக மாற்றம் பெறுகின்றன.இதில் எலெக்ட்ரான் புரோட்டானைச் சுற்றி ஒரு சில குறிப்பிலிட்ட இடைவெளியுடன் சுற்றி வருகின்றது..எலெக்ட்ரானின் இச் சீரிசைஇயக்கம் தானாக ஏற்படுமாறு செய்வது இயற்கையின் கட்டளை  இயற்கையைத் தவிர இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த யாராலும் முடிவதில்லை.

ஒரு சிறிய விதையில் ஒரு  மரத்தின் முழு எதிர் காலமும் எழுதப்பட்டிருக்கின்றது.எந்த மரத்திலிருந்து வந்ததோ அதைப் போலவே பூத்து, காய்த்து, அதே சுவையுடன் கூடிய காய்களையும் பழங்களையும் தருகின்றது விந்தணுக்களின்  மரபியல் ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றது. .மூலக்கூறுகளின் குறிமொழியை இயற்கையால் மட்டுமே இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியமைக்க முடியும் .மனிதர்களால் மாற்றியமைக்கவேமுடியாது. அப்படி மாற்றியமைத்தால் அது இயற்கைச் சமநிலையைப் பாதிப்படையச் செய்து எதிர்மறையான பின்விளைவுகளையும்   பரிணாம வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.       

அணுக்களில் எலெக்ட்ரான்கள் இயக்கத்தை பச்சைக் கொடி காட்டி துவக்கிவைத்தவர் யார் ? நுண்ணிய விதைகளில் அதன் எதிகாலத்தைத் திணித்து வைத்தவர் யார் ? விந்தணுக்களில் மூலக்கூறுகளின் குறிமொழி மாறாமல் தொடரும் படி செய்ததுயார் ? இதைச் சிலர் கடவுள் என்பர் வேறு சிலர் இயற்கை என்பர் .கடவுள் இயற்கையே என்பதை வலியுறுத்திக் கூறுவதற்கு இவை போதுமானதாக இருக்கின்றது


Sunday, August 23, 2020

God-11

 கடவுள் -11

இன்பங்கள் வந்தால் அது தன்னுடைய முயற்சியால் விளைந்தது என்று யாருக்கும் தெரிவிக்காமல் ,பங்களிக்காமல், முழுதாக அனுபவிக்கிறார்கள் ஆனால் துன்பம் வந்தால் உலகமே திரண்டு வந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இன்பம் கிடைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டு , துன்பம் வந்த போது கடவுளிடம் அடிக்கடி முறையிடுகிறார்கள் .கடவுளுக்கு நன்றி சொல்வது என்பது பலனில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும்படி பங்கீடு  செய்வதாகும். அதை எளிமைப்படுத்த கோயில் நிர்வாகம் எடுத்த முயற்சியே உண்டியல்.. ஆனால்  இன்றைக்கு உண்டியல் வருமான தவறான வழிமுறைகளில் களவாடப்படுவதால் ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சென்றடைவதில்லை..

கடவுளிடம் அடிக்கடி இது  வேண்டும் அது வேண்டும்   என்று கேட்கும் ஒரு மனிதன் முணுமுணுப்பதைக் கேளுங்கள். . "கடவுளே உனக்கு செவி இருக்கின்றதா ? நான் சொல்வது மட்டும் ஏன் உனக்கு கேட்கவில்லை? . அடுத்த வீட்டுக் காரனுக்கு மட்டும் கேட்டதெல்லாம் கொடுக்கின்றாயே, ஏன் இந்த ஓரவஞ்சனை ?"

கடவுள் கற் சிலைதான் . அதிலிருப்பது உயிரற்ற உடல் ,செயலாற்ற உறுப்புக்கள் . அதனால் கடவுளால் மனிதர்களை போல பார்க்க முடியாது , கேட்க முடியாது , பேச முடியாது. அவருக்குத் தெரிந்தெதெல்லாம் மௌன மொழிதான் . அதை மொழிபெயர்க்கத் தெரிந்தால் அவரிடம் நாம் பரிபூர்ணமாக உறவாடமுடியும் .

தன் சன்னதிக்கு வந்து முறையிடுவோர்க்கு கடவுள்  மௌன மொழியில் கூறிய வார்த்தைககள் எனக்குப் புரிகின்றது. உங்களுக்கும் புரியும் என்று நினைக்கின்றேன் .

" எதையெல்லாம் விருப்பிக் கேட்டாயோ அதையெல்லாம் முயன்று பெறுவதற்குத் தேவையான எல்லாவற்றையும்  நீ பிறக்கும்போதே அளித்துவிட்டேன். அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் காலப்போக்கில் அவற்றை நீ நிரந்தரமாகவே இழந்து விடுவாய். இந்த உறுப்புக்கள் எல்லாம் தேவையில்லை என்றால் அதை பயன்படுத்தக் கூடிய வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு அப்புறம்  என்னிடம் வந்து முறையிடு”.

“நான் உயிரற்ற கற் சிலை என்னால் மனிதர்களை போல செயல்களைச் செய்யமுடியாது. கற் சிலையான என்னால் காரியங்கள் செய்யமுடியும் என்று நீ எதிர்பார்க்கும் போது உயிருள்ள செயல்திறன் மிக்க உன்னால் எப்படி முடியாமற்  போனது ? 

கடவுளிடம் எதைக்கேட்டாலும் தருவான். எப்போது. அந்தக் கடவுள் நமக்குள் இருப்பதாக நாம் உணரும்போது.  உண்மைதான். நாம் எதை வென்றெடுக்க விரும்பினாலும் அதை நிச்சியமாக நம்முடைய ஈடுபாட்டினால் மட்டுமே பெறமுடியும். நம்முடைய தகுதிக்கு மீறிய எதையும் நம்மால் ஒருபோதும் பெறமுடியாது .அப்போதுதான் கடவுள் நம்முடைய குரலுக்கு செவிகொடுக்க  மறுப்பது போலத்   தோன்றும். அப்படி கடவுள் மறுப்பது கூட ஒருவரின் நலத்திற்குத்தான் . ஏனெனில் தகுதிக்கு மீறிய எதையும் ஒருவரால் நீண்ட நேரம் தாங்கிக்  கொள்ளவே முடியாது. அதனால் விரைவில் அதை இழக்க வேண்டிய நிலை வரலாம். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதற்காக த்தான் உலகில் மனிதனைத் தவிர பிற உயிரினங்க ளையும் படைத்திருக்கிறார்ன் .ஒரு மரம் காய்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையற்று இருந்தால் அது காய்ப்பதில்லை. தன்  தகுதியறிந்தே மரங்களெல்லாம் பூத்துக் காய்க்கின்றன. இயற்கையைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளாத மனிதர்களே தன் தகுதியை முன்னறிந்து கொள்ளத்  தவறிவிடுகிறார்கள்.