Tuesday, August 25, 2020

God-13

கடவுள் -13

மீன்கள்   நீந்திச் செல்ல வேண்டும் என்று துடுப்புக்களைக் கொடுத்தான் . பறவைகள் பறந்து செல்ல வேண்டும் என்று இறக்கைகளைக்  கொடுத்தான். ஒவ்வொரு உயிரினமும் தங்களைத் தாங்களே எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் . எதிரிகளை வீழ்த்தவும் தேவையான உடல் வாகுவையும்  வலிமையையும் பெற்றிருக்கின்றன.  மனிதனோ ,மனிதனால் படைக்கப்பட்ட கடவுளோ இப் பணியைப் பேரளவிலான எண்ணிக்கையில்,தொடர்ந்து  செய்தால் நம்பமுடியாத அளவு  பிழைகளே  ஏற்படும் .ஒன்றுக்குரிய  தனிச் சிறப்பை மற்றொன்றுக்கு இடம் மாற்றி கொடுக்கும் தவற்றை இயற்கை ஒருபோதும்  , செய்வதில்லை..இயற்கையே கடவுள் எனக் கொண்டால் மட்டுமே உயிரினங்களின் தோற்றத்தை கடவுள் செய்தார் என்று நம்புவதற்குக் காரணமிருக்கும் . 

இறைவனும் இயற்கையும் வெவ்வேறா என்ன? இயற்கையை இறைவனாகப் பார்ப்பது ஆன்மிகம் ,இறைவனை இயற்கையாகப் புரிந்து கொள்வது  அறிவியல்.  இயற்கைக்கும் இறைவனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன . அவை கடவுளே இயற்கை, ,இயற்கையே கடவுள் என்ற உயரிய கருத்தை விளம்பரப்படுத்துகின்றன.

இயற்கைக்கு தொடக்கமும்  இல்லை முடிவும்  இல்லை . அதுபோல கடவுளுக்கும் ஆதியும் அந்தமும் இல்லை .இயற்கையின் பரிமாணம் , ஆற்றல் ,செயல்திறன் எல்லாம் கற்பனைக்குக்  கூட எட்டாத அளவிற்கு அளப்பரியது..  மனிதனுக்கு மீறிய  இந்தகைய பண்புகள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட  கடவுளுக்கும்   கற்பிக்கப் பட்டிருக்கின்றன இயற்கையை ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடமுடியாது என்பதால் அதை  ஒரு  குறிப்பிட்ட உருவத்தால் மட்டும்  அடையாளங் காட்ட  முடியாது.  சூரியோதயம் .சந்திரோதயம் .மலை ,ஆறுகளின் தொடக்கம்  .விளைந்த வயல் என இயற்கைக்குப் பல வடிவங்கள் இதே போல மனிதர்கள்  விருப்பம் போல கடவுளின் உருவத்தை வடித்துக்  கொண்டார்கள் .அவை கடவுளுக்கு மேலாடை போல இருந்ததே ஒழிய ,கடவுளின் அடிப்படைக் கொள்கையைப் புரிந்து கொள்ளும் படியான நிலையையோ அல்லது மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் முறையில் ஒரு முன்னேற்றத்தையோ தரவில்லை. எல்லாக் கடவுள்களும்,எம்மதத்தை, எவ்வினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தீயவைகளை அழித்து நன்மைகளைத் தந்து வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன என்ற அடிப்படைக் கொள்கையை நோக்கமாகக் கொண்டிருந்தன  -கடவுளை மனிதனாக உருவகப்படுத்தித் தொழுவதும் ,மனிதனைக் கடவுளாக்கி மகிழ்வதும் மதங்களில் காணப்படும் வேற்றுமை என்றாலும் அதன் அடிப்படை மக்களைச் சாகாத சமுதாயத்திற்காக எப்போதும் நன்மக்ககளாகவே இருக்கச் செய்வதுதான்.

இயற்கை எங்கும் எதிலும்  நிறைந்திருக்கின்றது . அது  உடலுக்கு வெளியில் மட்டுமில்லை  உள்ளுக்குள்ளும்  இருக்கின்றது.இந்தப் பண்பை  கடவுளுக்கும் கற்பித்துள்ளார்கள் நுணுகிய அணுவிலிருந்து ,பெரிய பேரண்டம்  வரை           எதிலும் இயற்கை  .  கடவுளும் அப்படியே , இயற்கையின் படைப்புக்கள் எல்லாவற்றிலும் அடங்கியிருக்கின்றார்   உடலுக்கு வெளியில் மட்டுமில்லை , உள்ளுக்குள்ளும் கடவுள் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்று ஆன்மிகவாதிகள் கூறுவார்கள் .வெளியில் கடவுளும் , உள்ளே கடவுள் இல்லாமையும் இருந்தால் , சமநிலைப் பாதிப்பால்  சமுதாயம் பாதிக்கப்படவே செய்யும். மனதில் கடவுள் நிறைந்திருக்கும் போது ஒவ்வொரு மனிதனும் கடவுளாகவே ஆகிவிடுகிறார்கள் .அது சமச்சீரான சமுதாயம் உருவாவதற்கு வழிவகுக்கின்றது. அங்கு ஒவ்வொருவருமே சமுதாயக் காவலர்களாக இருப்பதால் சமுதாயத்திற்கு உறுதியான பாதுகாப்பாக இறுதிவரை இருக்கின்றது.

இயற்கைக்கும், கடவுளுக்கும் மௌனமே பொது மொழி. தயக்கம் காட்டாமல்  செயல் புரிவதற்கு எப்போதும் தயாராக இருப்பவன் பேசிக்கொண்டே இருக்க மாட்டான். பேசுவதற்கு மொழி கூட அவனுக்குத் தேவைப்படாது .இயற்கையும் சரி, கடவுளும் சரி எதையும் செயலில் காட்டுவதையே இயல்பாகக்  கொண்டுள்ளன. இயற்கையைச்  சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்பவர்கள் நலம் பெறுகின்றார்கள். மாறாக மாசுபடுத்தி நாசப்படுத்துபவர்கள் துன்பப் படுகின்றார்கள் .பருவத்தே பயிர் செய்பவர்கள் நல்ல மகசூலைப் பெறுகின்றார்கள் . நீர் மண்டலத்தையும் , வளி  மண்டலத்தையும் நச்சூட்டுபவர்கள்  உடல் நலத்தை இழக்கிறார்கள். அதை போல கடவுளை ப் போற்றுபவர்கள் மன நலம் பெறுகின்றார்கள் தூற்றுபவர்கள் தானும் கெட்டு ,பிறரையும் கெடுக்கின்றார்கள்         

இயற்கை தானாக வலியவந்து உதவுவதில்லை. மனித முயற்சிகளினால் மட்டுமே இயற்கையின் பயனை நுகரமுடியும் .கடவுளுக்கும் இது பொருந்தும். கடவுளிடம் விண்ணப்பித்து விட்டு சும்மா இருப்பவர்களுக்கு எந்த பயனும் கிடைத்துவிடுவ தில்லை. மனித முயற்சிகளைக் கொண்டே கடவுள் மனிதர்களுக்கு உதவமுடியும் என்பதால் , ஒவ்வொரு மனிதரும் கடவுளின் ஏஜெண்டுகளே அல்லது கடவுளே. எனவே கடவுள் இயற்கை என்றால் உருவமில்லாத கடவுள்  உள்ளேயும் வெளியேயும், எங்கும் இருப்பதாகவும் , கடவுள் உருவமுள்ளவர் என்றால் உள்ளே இருப்பதாகவும், அப்போது கடவுள் ஒருவருடைய தோற்றத்தையே தன்  உருவமாகக் கொண்டுவிடுகின்றார் என்றும் கொள்ளலாம்.     

No comments:

Post a Comment