Tuesday, September 7, 2021

 தன்னிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்ன திறமைகள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.சிலர் குறைவாகவும்  வேறு சிலர்   மிகையாகவும் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள். அதனால்  மக்களில் எவரும்  அவர்களைப்பற்றி முழுமையாக அல்லது மிகச் சரியாக  அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாக இருப்பதற்குக் காரணம் பயன்படுத்திக் கொள்ளமுடியாத உரிமையற்ற திறமைகளாக இருப்பதும் ,முயற்சியின்மையால் அந்தத் திறமைகளில் நம்பிக்கையிழப்பதும் ,பிறருடைய தனித்திறமைகளைக் கண்டு தன்னிடம்  இருக்கும் திறமைகளை விட்டுவிட்டு இல்லாத திறமைகளுக்காக  காலமெல்லாம் ஏங்குவதும் ஆகும் .இதனால் அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தெரிந்து கொள்வதற்குக்  கூட நேரம் கிடைப்பதில்லை. காலப்போக்கில்  வளர்த்துக்கொண்ட திறமைகளையும் பயன்படுத்தாமலேயே  இழந்துவிடுவார்கள் .

 

பலருக்கு எதிரில் இருப்பதைவிடக்  கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகம் தெரிகின்றது.நல்லனவற்றை விட தீயனவே அதிகம் மனதைத் தீண்டுகின்றது.நன்மை செய்வதை விட அதிகம் தீமை செய்வதையே விரும்புகின்றார்கள். இனிய சொற்கள் இருக்க வன் சொற்களையே அதிகம்  பேசுகின்றார்கள்.இருப்பதை விட இல்லாததற்காகவும் , கிடைத்தைவிட கிடைக்காததற்காகவும் அதிக ஏங்குகிறார்கள் இனிய  வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியை இழந்து ஏக்கத்தினால் மிஞ்சும் வருத்தமும் கவலையும் தொடரும்படி வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றார்கள் . 

                      .                

Monday, September 6, 2021

 திறமையின்மை என்பது தகுதியின்மையின் ஒரு பிரிவேயாகும் ..முழுஅளவிலான திறமை வெறும் கல்வியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை..கல்வியால் திறமையை பரிபூரணமாக யாரும் பெற்றுவிடமுடியாது.  உண்மையில் அதைச்    சந்திக்கும் அனுபவங்களின் வாயிலாக  மட்டுமே மேம்படுத்திக் கொள்ள முடியும். அனுபவம் என்பது தொடர்ந்து ஈடுபடும் செயல்பாடுகளினால் வருவதாகும். யாரும் ஒரு செயலிலும் ஈடுபடாமல் பயனுள்ள அனுபவத்தைப் பெறமுடியாது.. ..பலவீனத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் போதுதான் பலவீனத்தால்  பாதிக்கப்படாத பலத்தை வசப்படுத்திக் கொண்டு வளப்படுத்திக் கொள்ள முடியும் .

 

திறமையின்மை வெளிப்படுவதற்குக் காரணம் உரிமையில்லாத கல்வியால் தங்களை பற்றித் தாங்களே உயர்வாக  நினைத்துக் கொள்வதாகும்  பயனற்ற, தவறான  திறமைகளைக் கூட ஒருவர் தனித் திறமையாகக் கருதலாம்.ஒருவர் தான் பெற்ற  திறமைகளை அவ்வப்போது  திருத்திக்கொண்டு புதிப்பித்துக் கொள்ளவேண்டும் . கால இடைவெளியுடன் தன்னைத் தானே சுய மதிப்பீடு  செய்து கொள்ளும்போது தனித் திறமைகளும் புதுப்பித்துக்கொள்ளப்படும் வாய்ப்பைப் பெறுகின்றன

 

சுயமதிப்பீடு செய்யும் வழிமுறைகள் பல உள்ளன. இதில் முக்கியமானது SWOT analysis ஆகும். இதன் மூலம் ஒருவர் தன்னுடைய பலத்தை மட்டுமின்றி பலவீனத்தையும் சேர்த்து  எடை போடமுடிகின்றதுபெரும்பாலானோர் அவர்களுடைய பலத்தை மட்டுமே அறிவார்கள் ,பலவீனத்தை சிறிதும் அறியமாட்டார்கள் .உண்மையில் பலத்தால் எவ்வளவு முன்னேற்றம் கண்டார்களோ அதைவிட அதிகமாகவே பலவீனத்தால் பின்னேற்றம் இருக்கும் .                       .               

Saturday, September 4, 2021

 நம்முடைய செயல்கள் எல்லோருக்கும் பயனளிக்கும் போது வரவேற்கப்படுகின்றது மக்களிடம் எதிர்ப்பு சிறிதும் இருப்பதில்லை ஆனால் .சிலருக்கு மட்டும் பயன் தரும் போது மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்.நன்மை -தீமை பெறுவோரின் சதவீதத்திற்கு ஏற்ப எதிர்ப்பு இருக்கும். நம்முடைய செயல்பாடுகள் தங்குதடையின்றி செய்யப்படுவதற்கு நம்முடைய செயலின் பயனுறு திறனை மதிப்பீடு செய்வது அவசியம். அதற்கு  சமுதாயத்தில் இணைந்திருக்கும் போது எப்போதும் இயல்பாக சிந்திக்கும் மனப் பக்குவத்தையும்   , இயல்பாக வாழும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும்     அது சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும்  செயல்படுவதற்கும்  சம உரிமையை வழங்குகின்றது செயல்பாடுகளில் எது எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது ,எது பிறருக்குத் தீமை செய்யக்கூடியது, எதைத் தேர்வு செய்து செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது போன்ற சிந்தனைகளைத் தந்து வழிகாட்டுகின்றது மறைவொழுக்கத்தினால் ஏற்படும் மனவழுத்தத்தை ஒழித்துக்கட்டிவிடுகின்றது .                         .               

Friday, September 3, 2021

 காலந்தாழ்த்துதல் என்பது ஒரு வகை அகத்தடையாகும் . செயலைச்  செய்து முடிக்க  உண்மையான விருப்பம் இல்லாமையே காலந்தாழ்த்துதலை த் தூண்டிவிடுகிறது .செம்மையாகச் செய்து முடிக்கச்  சரியான திறமையின்மை  . சோம்பேறித்தனத்தால் செயலில் ஆர்வமின்மை,பிற விருப்பச் செயல்களில் கொண்டுள்ள ஆர்வத்தின் குறுக்கீடு , பிறர் செய்து தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு .பிறருக்குக்  கூடுதல் அனுகூலம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் போன்றவற்றால் காலந்தாழ்த்துதல் தூண்டப்படுகிறது .

 

எந்த வேலையையும் நாளை நாளை என்று தள்ளிப்போடக்கூடாது .அப்படிச் செய்யும் போது அந்த வேலை செய்யப்படாமலேயே போய்விடலாம்  பயனுறுதிறனில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது உறுதியாகத் தெரியுமானால்   காலந்தாழ்த்துதலை ஒரு குறுக்கியகாலம்  மேற்கொள்ளலாம். அக்குறுகிய காலத்தில்  பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் காலந்தாழ்த்துதலைப்போல  அவசரம் காட்டுதலும் ஒரு வகை அகத்தடையே ஆகும்..பெரும்பாலான சூழ்நிலைகளில் அவசரம்  ஒரு செயலை விரைந்து முடிப்பதைக் காட்டிலும் .பாழ்படுத்திவிடுவதுடன் , புதிய சிக்கல்களையும்  ஏற்படுத்திவிடுகின்றது ..தெளிவான சிந்தனையுடன்  செயலை முன்திட்டமிட்டுத் தொடரும் போது   அவசரமோ அல்லது காலந்தாழ் த்துதலோ ஏற்படுவதில்லை .இது உண்மையில் ஒருவருடைய நுண்ணறிவை சார்ந்து இருக்கின்றது .செய்யவேண்டிய வேலையை எப்போது எப்படிச் செய்யவேண்டும்,, எதை முதலில் செய்து எதைப் பின்னர் செய்யவேண்டும் , இடைத்தடைகள் இருக்குமானால் அதை எப்படி எதிர்கொள்வது , கிடைக்கும் காலத்திற்குள் செய்து முடிக்க என்ன செய்வது போன்ற வற்றைத் தீர்மானிக்க முடிகின்றது                    .               

Thursday, September 2, 2021

வளரும் குழந்தைகளிடம் வளர்ந்துவரும் ஒழுக்கமின்மை  அவர்கள்  உண்மையான கல்வி பெறுவதில் போலித்தனத்தை ஏற்படுத்திவிடுகிறது. கல்வி   எப்படியோ அப்படியே வாழ்க்கை அமைவதால் , போலியான கல்வி் போலித்தனமான வாழ்க்கையை மட்டுமே அவர்களால் வாழ முடிகிறது  உண்மையில் .உணர்ந்து ஒதுக்காமல் விட்டுவிட்ட  ஒழுக்கமின்மை எது உண்மையான வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுப்பதில்லை.கல்வி கற்கும் போதே அதை உரிமையுள்ளதாக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் கற்கவேண்டும் உரிமையுள்ள கல்வி என்பது கற்றதைப்  பயனுறுதிறன் மிக்க வகையில் பயன் படுத்திக் கொள்ளும் பக்குவத்தையும் உடன் பெறுவதாகும் .ஆனால் இன்றைக்குப் பலரும் உயர் மதிப்பெண் பெறுதல் ,[பெற்றோரைத் திருப்திப்படுத்துதல் ,வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர் வகுப்பிற்குச் செல்லுதல் , கற்கும் காலத்தைக் கழித்தல்  போன்ற  குறுகிய குறிக்கோளுடனேயே படிக்கின்றார்கள் . 90 சதவீத மாணவர்களிடம் நிலைப்படுவது  வெறும் உரிமையில்லாத கல்வியே. பொதுவாக உரிமையில்லாத கல்வி பிற்காலத்தில் தோல்விகளை ஒப்புக்கொள்ள மனமின்றி குறுக்கு வழிகளைத் தேடும்  தேவையற்ற ஆசைகளை மனத்தில் வளர்த்துவிடுகின்றது சமுதாயத்தோடு இணைந்த வாழ்க்கையில் முன்னேறிச் செல்லத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும்  விருப்பத்தை இது முடக்கிவிடுகின்றது ..இது  மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் சமுதாயச் சீரழிவிற்கு அடிப்படையாகின்றது .தேவையான தகுதிகள் இல்லாது ,  இல்லாத தகுதிகளால் செயல்களைத் தொடரவேண்டியிருக்கின்றது. தேவையில்லாமல் வளர்த்துக்கொண்ட தகுதிகள் வாய்ப்புகளைத்  தேடாமல் தருவதில்லை. முன்னேற முடியாமல் தத்தளிக்கும் போது , குறுக்குவழியை த் தூண்டும் மறைவொழுக்கத்தை மிக இயல்பாக உட்புகுத்திவிடுகின்றது 

 

கல்வி மூலமாகவும் , தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதாலும் , தகுதிகளைப் பெறமுடியும். பொதுவாக கல்வியின் பெரும் பகுதி ஒருவர் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதிகளை மட்டுமே வழங்குகின்றது .எது நல்லது, எது கெட்டது , எது தேவை,  எது தேவையில்லை  அதைப் பெறுவது எப்படி , தவிர்ப்பது எப்படி எஎ்பதை அறிவுறுத்துவது கல்வியே. கல்வி என்பது முன்னேற்றத்திற்கான ஒரு பாதை. அதுவே சென்றடைய வேண்டிய இலக்கில்லை ..துறை சார்ந்த சிறப்புக் கல்வியும், தொழில் பயிற்சியும் ஆக்கப்பூர்வமான தகுதிகளை வழங்குகின்றது..எந்தக் கல்வியும் கல்விக்கானதாக மட்டுமே இருக்கவேண்டும்  என்பது ஒரு பொது நியதி. .அப்பொழுதுதான் அதன் பயன்பாடு சமுதாயம் தழுவியதாக இருக்கும். .சமுதாயம் என்பது கூட்டமாகக்  கூடியிருப்பதியில்லை .மக்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் மற்றவர்களைச்  சார்ந்திருக்க   சமுதாயத்தால் வரையறுக்கப்பட்டுள்ள  நட்பு  ரீதியிலான இடைத் தொடர்பு பாதுக்காக்கப் படவேண்டும்                 .