Wednesday, September 1, 2021

 தங்களைப் பற்றி முழுமையாகத் தாங்களே அறிந்து கொள்ளாதிருப்பது ஒரு வகை அகத் தடையாகும்.சிலர் குறைவாக எடைபோட்டுக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் .பிறர் இவர்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு .இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் வரை காத்துக்கொண்டிருப்பார்கள் ..வேறு சிலர்  தங்களைப்   பற்றி மிகையாக மதிப்பிட்டுக் கொள்வார்கள் .தங்களால் என்ன செய்ய இயலும் ,என்ன செய்ய இயலாது  என்பதை இவர்கள் எப்போதும் தவறாகவே முடிவு செய்கின்றார்கள். தங்களைப் பற்றி தங்களே   மிகச் சரியாக அறியாதிருப்பதும் ஒரு வகை  அகத்தடையாகும்.   .  .

 

ஒழுக்கமின்மையின் போதையில் பலரும் நல்ல , தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளத் தவறிவிடுகின்றார்கள். மேலும் மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபட தீய ,தேவையற்ற தகுதிகளை வளர்த்துக்கொண்டு விடுகின்றார்கள்.தவற விட்டுவிட்டோம் என்பதைக் காலங் கடந்தே உணர்ந்து கொள்வதால் மாற்று நடவடிக்கைளை மேற்கொள்ள போதிய பயனுறு காலம் கிடைப்பதில்லை..அப்படியே மேற்கொண்டாலும் முழுமையாகப் பயனளிப்பதில்லை . ..

 

மிகச் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு தோராயமாக தங்களுடைய எதிர்காலத்தை முன்திட்டமிடத் தெரியாதவர்களே என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் , என்னென்ன தகுதிகளை த்  கொள்ளவேண்டும் என்று புரியாமல்  எல்லாவற்றையும் அரைகுறையாகக் கற்றுக்  கொள்கின்றார்கள் .இது ஒன்றில் நம்பிக்கையின்றி எல்லாவற்றையும் இழப்பதற்குச் சமமான செயலாகும் .உண்மையில் திடமான சிந்தனையும் , முழுமையான நம்பிக்கையும் இல்லாத மனநிலையில் கற்றுக் கொள்ள முயற்சிக்கும்  போது கற்பவை  மனதில் தங்குவதில்லை .இதனால் தேவையில்லாமல் கற்றுக்கொண்ட  நல்ல தகுதிகளும் எந்தக்காலத்திலும் சிறு பயன்கூட நல்குவதில்லை, தேவைப்படும் என்று கற்றுக்கொண்ட தீய தகுதிகளும் செம்மையாகச்  செய்யப்படுவதில்லை ..இது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு இயற்கை  கொடுக்கும் அங்கீகாரமாகும் . நல்ல செயல்களை  எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய முடியும் . யாருக்காகவும்  அஞ்சி செய்வதை தாமதிக்க வேண்டிய நிலையில்லை..ஆனால் வெளிப்படைத்தன்மையில்லாத தீய செயல்கள்  அப்படி  இல்லை..   .               

No comments:

Post a Comment