Wednesday, September 1, 2021

 மறைவொழுக்க  நடவடிக்கைகளைப் பிறருக்குத் தெரியாமல் செய்யவேண்டியிருப்பதால் அவற்றை எப்போதும்  நினைத்த பொழுதில் செய்யமுடிவதில்லை. தகுந்த காலநேரம் ,சூழ்நிலை பார்த்து செய்யவேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுவது  தவிர்க்கயியலாததாக இருக்கின்றது சமுதாய எதிர்ப்புக்களையும் , சட்டத்தையும்  மீறிச் செய்யவேண்டியிருப்பதால் எதையும் சிந்தித்து செயல்படவேண்டியிருக்கின்றது  .இதில் அவசரம் காட்டுபவர்கள்  குற்றச் செயல்கள் புரிந்ததற்கான ஆதாரங்களை தவறவிட்டு  மாட்டிக்கொள்கிறார்கள் .

 

தீய பழக்கங்கள் பெரும்பாலும் எல்லோருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருப்பதால் , மக்களிடம் ஒழுக்கமின்மை சமுதாயம், சட்டங்களுக்குத் தெரியாமல் பெருக்குத் தொடரில் பெருகி வருகிறது..தொடக்க நிலையில் அது மெதுவாகப் பெருகுவது போலத்  தோன்றினாலும், இடைவிடாத தொடர் பெருக்கத்தினால்  சட்டெனெக் கட்டுப்படுத்தமுடியாத ஆபத்தான நிலையை எட்டிவிடும் . மக்களிடையே கிளர்ச்சிநிலையை  ஏற்படுத்தி மீட்டுப்பெறமுடியாத , தீவிரமான  சமுதாயச்  சீர் குலைவை  நிலைப்படுத்தி விடுகின்றது முன்னோர்களும் , நன்னெறி நூல்களும் வற்புறுத்திக் கூறும் நல்ல பழக்க வழக்கங்கள் அப்படியில்லை .அது சமுதாயத்தில்  கூட்டுத் தொடரில் கூடப் பெருகுவதில்லை. மக்களிடம் ஓங்கி வளர்ந்துவிட்ட தீய எண்ணங்களுக்கு முன்னே அவை ஏறக்குறைய முற்றுமாக அழிந்துவிட்டன என்றே கூறவேண்டும். பெரும்பாலும் தீயவை மறைவொழுக்கமாகப்  பின்பற்றுவதற்கும் , நல்லவை மாற்றானுக்கு அறிவுரை கூறுவதற்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன                 

No comments:

Post a Comment