Thursday, September 2, 2021

வளரும் குழந்தைகளிடம் வளர்ந்துவரும் ஒழுக்கமின்மை  அவர்கள்  உண்மையான கல்வி பெறுவதில் போலித்தனத்தை ஏற்படுத்திவிடுகிறது. கல்வி   எப்படியோ அப்படியே வாழ்க்கை அமைவதால் , போலியான கல்வி் போலித்தனமான வாழ்க்கையை மட்டுமே அவர்களால் வாழ முடிகிறது  உண்மையில் .உணர்ந்து ஒதுக்காமல் விட்டுவிட்ட  ஒழுக்கமின்மை எது உண்மையான வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுப்பதில்லை.கல்வி கற்கும் போதே அதை உரிமையுள்ளதாக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் கற்கவேண்டும் உரிமையுள்ள கல்வி என்பது கற்றதைப்  பயனுறுதிறன் மிக்க வகையில் பயன் படுத்திக் கொள்ளும் பக்குவத்தையும் உடன் பெறுவதாகும் .ஆனால் இன்றைக்குப் பலரும் உயர் மதிப்பெண் பெறுதல் ,[பெற்றோரைத் திருப்திப்படுத்துதல் ,வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர் வகுப்பிற்குச் செல்லுதல் , கற்கும் காலத்தைக் கழித்தல்  போன்ற  குறுகிய குறிக்கோளுடனேயே படிக்கின்றார்கள் . 90 சதவீத மாணவர்களிடம் நிலைப்படுவது  வெறும் உரிமையில்லாத கல்வியே. பொதுவாக உரிமையில்லாத கல்வி பிற்காலத்தில் தோல்விகளை ஒப்புக்கொள்ள மனமின்றி குறுக்கு வழிகளைத் தேடும்  தேவையற்ற ஆசைகளை மனத்தில் வளர்த்துவிடுகின்றது சமுதாயத்தோடு இணைந்த வாழ்க்கையில் முன்னேறிச் செல்லத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும்  விருப்பத்தை இது முடக்கிவிடுகின்றது ..இது  மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் சமுதாயச் சீரழிவிற்கு அடிப்படையாகின்றது .தேவையான தகுதிகள் இல்லாது ,  இல்லாத தகுதிகளால் செயல்களைத் தொடரவேண்டியிருக்கின்றது. தேவையில்லாமல் வளர்த்துக்கொண்ட தகுதிகள் வாய்ப்புகளைத்  தேடாமல் தருவதில்லை. முன்னேற முடியாமல் தத்தளிக்கும் போது , குறுக்குவழியை த் தூண்டும் மறைவொழுக்கத்தை மிக இயல்பாக உட்புகுத்திவிடுகின்றது 

 

கல்வி மூலமாகவும் , தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதாலும் , தகுதிகளைப் பெறமுடியும். பொதுவாக கல்வியின் பெரும் பகுதி ஒருவர் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதிகளை மட்டுமே வழங்குகின்றது .எது நல்லது, எது கெட்டது , எது தேவை,  எது தேவையில்லை  அதைப் பெறுவது எப்படி , தவிர்ப்பது எப்படி எஎ்பதை அறிவுறுத்துவது கல்வியே. கல்வி என்பது முன்னேற்றத்திற்கான ஒரு பாதை. அதுவே சென்றடைய வேண்டிய இலக்கில்லை ..துறை சார்ந்த சிறப்புக் கல்வியும், தொழில் பயிற்சியும் ஆக்கப்பூர்வமான தகுதிகளை வழங்குகின்றது..எந்தக் கல்வியும் கல்விக்கானதாக மட்டுமே இருக்கவேண்டும்  என்பது ஒரு பொது நியதி. .அப்பொழுதுதான் அதன் பயன்பாடு சமுதாயம் தழுவியதாக இருக்கும். .சமுதாயம் என்பது கூட்டமாகக்  கூடியிருப்பதியில்லை .மக்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் மற்றவர்களைச்  சார்ந்திருக்க   சமுதாயத்தால் வரையறுக்கப்பட்டுள்ள  நட்பு  ரீதியிலான இடைத் தொடர்பு பாதுக்காக்கப் படவேண்டும்                 .                

No comments:

Post a Comment