Tuesday, September 7, 2021

 தன்னிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்ன திறமைகள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.சிலர் குறைவாகவும்  வேறு சிலர்   மிகையாகவும் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள். அதனால்  மக்களில் எவரும்  அவர்களைப்பற்றி முழுமையாக அல்லது மிகச் சரியாக  அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாக இருப்பதற்குக் காரணம் பயன்படுத்திக் கொள்ளமுடியாத உரிமையற்ற திறமைகளாக இருப்பதும் ,முயற்சியின்மையால் அந்தத் திறமைகளில் நம்பிக்கையிழப்பதும் ,பிறருடைய தனித்திறமைகளைக் கண்டு தன்னிடம்  இருக்கும் திறமைகளை விட்டுவிட்டு இல்லாத திறமைகளுக்காக  காலமெல்லாம் ஏங்குவதும் ஆகும் .இதனால் அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தெரிந்து கொள்வதற்குக்  கூட நேரம் கிடைப்பதில்லை. காலப்போக்கில்  வளர்த்துக்கொண்ட திறமைகளையும் பயன்படுத்தாமலேயே  இழந்துவிடுவார்கள் .

 

பலருக்கு எதிரில் இருப்பதைவிடக்  கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகம் தெரிகின்றது.நல்லனவற்றை விட தீயனவே அதிகம் மனதைத் தீண்டுகின்றது.நன்மை செய்வதை விட அதிகம் தீமை செய்வதையே விரும்புகின்றார்கள். இனிய சொற்கள் இருக்க வன் சொற்களையே அதிகம்  பேசுகின்றார்கள்.இருப்பதை விட இல்லாததற்காகவும் , கிடைத்தைவிட கிடைக்காததற்காகவும் அதிக ஏங்குகிறார்கள் இனிய  வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியை இழந்து ஏக்கத்தினால் மிஞ்சும் வருத்தமும் கவலையும் தொடரும்படி வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றார்கள் . 

                      .                

No comments:

Post a Comment