Sunday, January 22, 2023

 

இந்தியா ஏன் இன்னும் வல்லரசு நாடாக வளரவில்லை ?

அங்கே மக்கள் திறமையானவர்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் .வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுகின்றார்கள்.

அங்கே நேர்மையானவர்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் . நேர்மை அவர்களுடனேயே உடன்கட்டை ஏறிவிடுகின்றது  

அங்கே ஆள்வதற்குத் தகுதியான ஆட்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் மக்களின் ஆதரவின்றி .

அங்கே  அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா ? இருக்கின்றார்கள் அரசியல் பற்றிய அறிவு சிறிதும் இல்லமால். இவர்களால் தான்  இந்தியா மேலும் மேலும் மோசமடைந்து வருகின்றது.இவர்கள் சுயநலக்காரர்களாக இருக்கின்றார்கள் , மக்கள் நலத்தைக் கருத்திற்கொண்டு சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை, பேராசைக்காரர்களாக இருக்கின்றார்கள் .எதிர்கட்சியினரையும் எதிர்ப்போரையும் அழித்துவிட்டு நீண்ட நாட்களுக்கு ஆட்சியில் அனுபவித்துத்தான் இவர்களது நோக்கம். தகுதியில்லாததால் நாட்டை ஆள விரும்பும் எவருமே தங்கள் தகுதியை முன்கூட்டியே காட்டுவதில்லை .அவர்கள் எல்லோரும் ஆள்பவர்களின் தவறுகளையும் குற்றங்களையும் குறைகூறுவதே தங்களின் தகுதி என்று நினைக்கின்றார்கள்

Saturday, January 21, 2023

 

 

லாட்டரி சீட்டுகளினால் நன்மைகளும் தீமைகளும் 

லாட்டரி சீட்டுகளினால் மக்கள் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் துறந்துவிடுவார்கள் .எல்லா வசதிகளும் உழைப்பின்றி கிடைக்கவேண்டும் என்று இயற்கைக்கு எதிரான  எண்ணம் மேலோங்கி விடுகின்றது கிடைத்த வசதிகளை அனுபவிக்காமல் கிடைக்காத வசதிகளையும் கிடைக்காமல் அனைத்தையும் இழந்துவிடுகின்றார்கள்  லாட்டரி சீட்டுக்களினால் தீமையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .அதனால் நன்மைகளும் உண்டு என்பதை யும் அதை மேம்படுத்தி நாட்டை வளப்படுத்த முடியும் என்பதையும் இப்பொழுது தெரிந்து கொண்டேன் , உண்மையில் குடிப்பழக்கத்திற்கு   இந்த லாட்டரி சீட்டு பரவாயில்லை .மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவும் ,கல்வியறிவு இல்லாதவர்காளவும் இருப்பதால்தான் லாட்டரி சீட்டு குடும்பங்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கின்றது. சிங்கப்பூர் , அமெரிக்கா ,அரேபிய நாடுகளில் மக்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள் . அவர்கள் லாட்டரி சீட்டு வாங்குவதை ஒரு பொழுதுபோக்காகவே கருதுகின்றார்கள் . அதற்காக குடும்பங்களை வறுமையில் வாட விடுவதில்லை. லாட்டரி சீட்டு நேர்மையாக நடத்தப்படும் போது மக்களின் நம்பிக்கை நிரந்தரமாகின்றது . எந்த நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றதோ அது தடையின்றி நடைபெறுகின்றது லாட்டரி சீட்டை நேர்மையான அரசாங்கம் நடத்துவது தவறில்லை. நேர்மையற்றதனியார்கள் நடத்துவதுதான் தவறு. பெரும்பாலும் சுயமாக சம்பாதிக்க முடியாத மக்கள் , சம்பாதித்து ஓய்ந்துவிட்ட முதியவர்கள் ,ஆடம்பரச் செலவுகளில் ஆர்வம் கொண்டவர்கள் லாட்டரியில் ஆர்வம் கொள்கின்றார்கள் .அரசாங்கம் சம்பளத்தைக் குறைவாகக் கொடுக்காமல் நிறைவாகக் கொடுக்கும் போது எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்துவிடாமல்  பொருள் வாங்கும் திறனைப் பெறுகின்றார்கள். அப்பொழுது லாட்டரி சமுதாயத்திற்குப் பயன்தருகின்றது .  அரசாங்கமும் பயனடைகின்றது . முதிவர்கள் குடும்பத்தினரால் வெறுக்கப்படாமல் ,முதியோர் இல்லங்களுக்குள் தள்ளப்படாமல் சுயமரியாதையுடன் வாழும் வாய்ப்பைப் பெறுகின்றார்கள். மக்களிடம் பணப் புழக்கம் தொடர்ந்து நிலைப்படுகின்றது. தொழில் முனைவோர்கள் வளம்பெறுகின்றார்கள்

Wednesday, January 18, 2023

 

தாத்தா பாட்டிக்கு வயதான பிறகு கூட்டுக் குடும்பத்தின் பொறுப்பை அப்பாவும் அம்மாவும் எடுத்துக்கொண்டனர்.. குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்தால் அதை அப்பா தன் ஆளுமைத் திறனால் சரிசெய்துவிடுவார். சரி செய்யமுடியாத நிலையில் அனுபவமிக்க ,தாத்தாவிடம் போய் ஆலோசனை கேட்பார். அதைச் செயல் படுத்தும் போது எதிர்ப்பு வரலாம் என்ற நிலையில் எல்லோரையும் அழைத்து விளக்கம் கொடுப்பர்.  அவர்களும் புரிந்து கொண்டு எதிர்ப்பை விலக்கிக் கொண்டு விடுவார்கள் இது போன்ற நிலை குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்டவர் நேர்மையானவராகவும், ஆளுமைத்திறன்மிக்கவராகவும் ,சுயநலமற்ற வராகவும் இருக்கும்போதும், அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உறுதுணையாகச்  செயல்படும்போதும்  மட்டுமே இயல்பாக நடக்கின்றது  அப்பாவும் அம்மாவும் வரவு செலவுகளைத் திட்டமிட்டுச் செலவழித்தனர் .தேவையான செலவுகளை மட்டுமே அனுமதித்ததால் சேமிப்பு இருந்தது .இந்த சேமிப்பு எதிர்பாராமல் வரும் செலவினங்களுக்கு கைகொடுத்தது பற்றாக்குறை என்று ஒருநாளும் வந்ததில்லை அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்து செயல்பட்டதாலும் ,குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடாமல் முனைந்து செயல்பட்டதாலும்  குடும்பத்தின் இனிமை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது குடும்பத்திலுள்ள அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய  இனம் புரியாத அச்சமின்றி வாழ்க்கையை இனிமையாகக் கழித்தனர் . தான் எடுக்கும் முடிவு தவறாக இருக்குமோ என்ற குழப்பம் ஏற்படும்போது அனுபவம் மிக்க அனைவருக்கும் பொதுவான தாத்தாவிடம் கருத்துக் கேட்பார் .பொதுவாக இக் கருத்து அனைவருக்கும் இணக்கமானதாகவே இருக்கும் .

ஒருவரிடம் சுயநலம் மிகும் போது ,உழைப்பின்றி பொருள் சேர்க்கும் விருப்பம் ஏற்பட்டுவிடுகிறது. உழைப்பின்றி பொருள் சேர்க்கும் எந்த முயற்சிக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்யும் அப்போது  தனக்குக் கிடைக்க வேண்டிய வசதிகளுக்கு மற்றவர்கள் தடையாக இருக்கின்றார்களோ என்ற எண்ணம் மேலோங்கிவிடுகின்றது   மற்றவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க தவறான வழிமுறைகளை மேற்கொள்ளவும் . அச்சப்படுத்தி அடக்கவும் , அதிகாரத்தால் கட்டுப்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர். இவர்கள் எதிர்ப்பால் ஏற்படும் இழப்புக்களைத் தாங்கிக் கொள்ளமுடியாததால் வலிமையற்றவர்களாக இருப்பார்கள் சமாளிக்க முடியாத எதிராளிகளைச் சுயநலத்தில் பங்கு அளித்து எதிர்ப்பை ஒழித்து விடுகின்றார்கள் .உழைப்பின்றிக் கிடைக்கும் பொருளை இப்படி அள்ளிக் கொடுப்பதால் அவர்களுக்கு பெரிய இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை     

Tuesday, January 17, 2023

 

நாட்டை ஆளாவிட்டாலும் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டை ஆளும் வாய்ப்பைப் பெறு கின்றார்கள் .வீட்டை ஆளும் போது  ஏற்படும் பிரச்சனைகளே நாட்டை ஆளும் போதும்  ஏற்படுகின்றன அளவில் காணப்படும்  வேறுபாடு அதற்கான தீர்வுகளை வேறுபடுத்துவ தில்லை  

நாட்டின் பிரச்சனைக்களுக்கான தீர்வுகள் வீட்டைக் கட்டி ஆளும் ஒவ்வொரு குடிமகனின் எண்ணங்களிலும் இருக்கவே செய்கின்றன நாட்டை ஆளாவிட்டாலும் வீட்டை ஆளும் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு குடும்பத்தின் இனிமை எப்படி சீர் கெட்டுப் போகின்றதோ ஏறக்குறைய அதே வழியில் தான் -நாட்டின் இனிமையும் சீர்கெட்டுப் போகின்றது என்று இதைச் சரியாகப்புரிந்து கொண்டவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தால் /இருப்பதால் வீட்டிலும் சரி நாட்டிலும் சரி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிவதில்லை  .புரிந்து கொள்ளாதவர்கள்  அது இறைவனால் விதிக்கப்பட  விதி என்றும் , மனிதர்களின் மதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அக்கறை கொள்வதில்லை . புரிந்து கொண்டவர் களும் ,புரியாமல் வாழ்பவர்களும் மக்களில் பெரும்பான்மையினர்..புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள்  மக்களில் சிறுபான்மையினர்தான் இவர்களே வீட்டிலும் சரி நாட்டிலும் சரி இனிமை மேலும் சீர்கெட்டுப் போக காரணமாக இருக்கின்றார்கள். இனிமை சீர்கெடக் காரணமாக இருப்பவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தால் அதன் பாதிப்பை அதிகாரமுள்ளவர்களால் சரி செய்யமுடிகிறது அவர்கள் அதிகாரமுள்ளவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு நியாயத்தை அறிவுறுத்தி நேர் படுத்தலாம் . பொதுவாக அதிகாரம் அறிவுரையை விரும்புவதில்லை .அதிகாரமுள்ளவர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும்  கல்வியாளர்களாகவும் இருக்கும் போதுதான் அவர்களுக்கு  புரிந்து கொள்ளும் தன்மை  இருக்கும். அறிவுரையின் நியாயத்தையும் புரிந்து கொள்வார்கள் . பொதுவாக அளவில்லாத ,கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் சுய முடிவைத்தவிர பிறரின் அறிவுரையை ஏற்றுக்கொள்வதில்லை     .     

Tuesday, January 10, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

நாட்டின் முன்னேற்றம் பல அகத்தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த அகத்தடைகளை அகற்றாமல் புறத்தடைகளைக் குறையளப்பதால்  சுதந்திரம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும் உண்மையான முன்னேற்றம் காணாத தூரம் தான் .நாட்டின் முதல் அகத்தடை ,வறுமையோ, எழுத்தறிவின்மையோ ,திறமையின்மையோ இல்லை. நாட்டைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாத அரசியல் வாதிகளே  இன்றைக்கு நேர்படுத்த முடியாத அகத்தடைகளாக இருக்கின்றார்கள் அவர்கள் நாட்டின் வளத்தை தனதுடைமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிக்கொள்கின்றார்களே ஒழிய உண்மையில் நாட்டு மக்களின் நலத்திற்காக இல்லை . அவர்களாகத் திருத்தவும் மாட்டார்கள். மக்களுக்கான காவல் மற்றும் நீதித் துறைகளுக்கும் கட்டுப் பட மாட்டார்கள் . இதற்கான மாற்றத்தை இனி வரும் எக்காலத்திலும் ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள் . மக்கள் தான் செய்யமுடியும் அவர்களுள் ஒரேயொரு உண்மையான நல்லவன் ,நேர்மையானவன் இருந்தால் .      

 பற்றற்று இரு என்பது ஆன்மீக இலக்கியங்களுக்கு  அழகு .ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது பற்றுக் கொள்ளாமல் இல்லவே இல்லை. இயற்கையின் கொள்கை உயிரற்றவைகளுக்கு வேறு உயிருள்ளவைகளுக்கு வேறு  என்று வலியுறுத்துவதேயில்லை ஆசைப்படு முயன்று பெறு ,அதற்காகப் பேராசைப்படாதே  என்பதை வலியுறுத்த பற்றற்று இரு என்றார்கள். எதையும் அதற்காகவே விரும் பவேண்டும் ,நம்முடைய சுகங்களுக்காக விரும்பக்கூடாது (உதாரணமாக மனைவியை மனைவியாக நேசிக்கவேண்டும் அவள் அழகுக்காகவோ , தரும் சுகங்களுக்காகவோ நேசிக்கக் கூடாது ) பற்றற்று இருந்தால் இந்த பிரபஞ்சம் இந்த அளவிற்கு உருவாகியிருக்காது. நான் விஞஞானத்தை ஓரளவு புரிந்து படித்திருக்கின்றேன். புரோட்டானும் எலெக்ட்ரானும் பற்றுக் கொண்டதால் அணு உண்டானது. அணுக்கள் பற்றுக்கொண்டதால் மூலக்கூறுகள் உண்டாகின. மூலக்கூறுகள் பற்றுக்கொண்டதால் பொருட்கள் உண்டாகின . பொருட்களின் காதலே  பூமியில் உயிரினமானது. பற்றற்று இருந்தால் இயற்கையே இல்லை  

Monday, January 9, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 அரசு அலுவலகங்கள்  மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக உண்டாக்கப்பட்டன .ஒரு வேலைக்காக அலுவலகத்தை ஒருவர் நாடி வந்தால் ,முதலில் அவர் வந்ததற்கான பதிவு இருக்கவேண்டும் .அதில் அவரது தேவை பற்றி குறிப்பிடப்படப்பட்டிருக்கவேண்டும் . அப்பொழுதுதான்  அவர் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்கப்படுகின்றார் என்பதை ப் பிறர் அறிந்து கொள்ளமுடியும். அப்படி எந்த அலுவலகமும் செய்வதில்லை. செய்யுமாறு கட்டாய ப்படுத்தப்படுவதுமில்லை.இலஞ்சம்  கொடுப்பது குற்றம் இலஞ்சம் வாங்குவது பெரிய குற்றம் .இலஞ்சம் கேட்டால் மறுங்கள் , இலஞ்சம் கொடுத்தல் மறுங்கள் . இங்கே இலஞ்சம் யாரும் வாங்குவதில்லை. எனவே இலஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க நினைக்காதீர்கள் என்ற விளம்பரம் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் கட்டாயம் விளம்பரம் வைக்கப்படவேண்டும்   பொதுவாக சரியான வேலைக்கு மக்கள் யாரும் இலஞ்சம் கொடுக்க விரும்புவதில்லை. தவறான வேலைகளுக்குச் சிலர் இலஞ்சம் கொடுக்க முன்வருவார்கள் .வேலை முடியாமல் இழுத்தடிக்கப்படும்போது ,காலதாமதத்தை விரும்பாமல்  மக்கள் இலஞ்சம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத்  தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் காலதாமதம் இல்லமால் பார்த்துக்கொள்ளவேண்டும் . இதைக் கவனித்து ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பை எல்லோரும் தட்டிக் கழிப்பதால் ஒழுக்கமின்மை  சமுதாயத்தில் விரிவடைந்து கொண்டே வருகின்றது. சிங்கப்பூரின் சரித்திரத்தையே மாற்றியமைத்த லீகுவான் யூ போன்ற வலிமையான தலைவர்கள் இந்தியாவில் இல்லாதது ஒரு பெரிய குறை          

Sunday, January 8, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஆட்சியாளர்கள் மக்களின் அறிவாற்றலை வளர்க்க,திறமைகளை மேம்படுத்த உரிய முயற்சி மேற்கொள்வதில்லை .  இருக்கும் அறிவாற்றலையும் ,திறமைகளையும்  பயன்படுத்தி நாட்டின் வளத்தை உயர்த்துவதில்லை. பொருள் உற்பத்தியைப் பெருக்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பும் வருவாயும்  கிடைக்க தொழிற்சாலைகளை உருவாக்குவதில்லை .அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து படைப்புக்களில் புதுமைகளை ஏற்படுத்தி உள்நாட்டு வர்க்கத்தையும்  மற்றும் ஏற்றுமதி மூலம் உலக வர்த்தகத்தையும் உற்சாகப்படுத்துவதில்லை .  மக்களிடம் வரி வசூலிக்க மட்டும் உயிர்ப்புடன் இருக்கும் திட்டங்கள் , வளர்ச்சித் திட்டங்களாகத்  தீட்டப்படுவதில்லை . திட்டச் செலவுகள் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்காக மட்டுமே செலவழிக்கப்படாமல் . ஒப்புக்கொள்ளமுடியாத நிர்வாகச் செலவுகளினால் பற்றாக்குறை யை ஏற்படுத்திவிடுகின்றார்கள் ,அதனால் எந்தத் திட்டமும் முன்திட்டமிட்ட பயன்களை மக்களுக்கு முழுமையாக வழங்குவதில்லை .ஒரு சில திட்டங்களையே முழுமைப்படுத்த மீண்டும் மீண்டும் திட்டச்செலவை அதிகரிக்க ,புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களாக வரும்போது அவர்களுக்கு விதிமீறிய வருவாய் கிடைக்க சட்டத்தின் கைகளை கட்டிப்போட்டு விட்டு  சட்டத்திற்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்கின்றார்கள் . இந்த வாய்ப்பு ஆட்சியாளர்களுக்கு மட்டுமே இருப்பதால் , எதிர் கட்சியினர் எப்போதும் ஆளும் கட்சியை எதிர்த்தே செயல்படும் போக்கை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .இவர்களால் ஆட்சியாளர்கள் நல்ல திட்டங்களைச்  செயல்படுத்த விரும்பினாலும், முடிவதில்லை. ஒரு தவறு திருத்தப்படவேண்டுமானால் ,திருத்துவதற்குத் தகுதியான நபர் அல்லது அமைப்பு இருக்கவேண்டும் .மக்கள் தவறு செய்தால் காவல் மற்றும் நீதித் துறைகள் உள்ளன. ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக நடந்து கொண்டால் இருக்கும் அமைப்புக்களே போதுமானது ஆனால் ஆட்சியாளர்கள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை  தவறுசெய்தால் அவர்களைத் திருத்த இப்பொழுது இருக்கும் அமைப்புக்களினால் இயலவில்லை . மாறாக சமுதாயத்திற்கான அமைப்புக்களை அவர்களுடைய பாதுகாப்பிற்கான அமைப்புகளாக மாற்றிக்கொண்டு வருகின்றார்கள் .இந்த நிலைமாற்றம் மேலும் மேலும் ஆட்சியாளர்களின் மறைவொழுக்க நடவடிக்கைகளையே அதிகரிக்கும்        

Wednesday, January 4, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 அரசு அலுவலகங்கள் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றாலும் அவை யாவும் மக்களின் நலனுக்காகச் செயல்படுவதில்லை.. சட்டத்தால்  ஒரு தோற்றத்தையும் செயல்பாடுகளினால்  மாறுபட்ட தோற்றத்தையும் கொண்டுள்ளனன. தவறுகளைக் கண்டால் சட்டெனப் பாயவேண்டிய சட்டம் அங்கே வேடிக்கை பார்க்கின்றது என்றால் சட்டத்தைக் கையாள்பவர்களே குற்றாவாளிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை. நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரன் போல நாமும்  சொல்லலாம் .ஆனால் சிவ பெருமான் போல நேர்மை யை உணர்ந்தவர்கள் இல்லாத போது அதனால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை

அரசு அலுவலகங்கள் வியாபாரக் கூடங்கள் இல்லை. அரசு அலுவலர்கள் வியாபாரிகளும் இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் முதலாளிகள் போலவும் , அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்குதாரர்கள் போலவும்  செயல்படுகிறார்கள் .ஒரு தனிமனிதன் சட்டப்படி பெறவேண்டிய சான்றிதழ்களை மிகுந்த பொருட் செலவுடன் பெறவேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றார்கள் ..சம்பளத்ததுடன் கூடுதல் வருமானம் தேடும் முயற்சியில் இது தொடர்ந்து நடக்கின்றது. இதற்காக அதிகமாகப் பொருள் கொடுத்து அரசு வேலையில் சேருகிறார்கள் . ஆட்சியாளர்கள் லஞ்சமாகப் பொருள் வாங்கிக் கொண்டு இது போன்ற தகுதியற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குகின்றார்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியாளர்களால் இல்லாமல் மக்களால்   நியமிக்கப்பட்ட 100 கௌரவ உறுப்பினர்களால் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களையே நியமிக்க வேண்டும்