Wednesday, January 18, 2023

 

தாத்தா பாட்டிக்கு வயதான பிறகு கூட்டுக் குடும்பத்தின் பொறுப்பை அப்பாவும் அம்மாவும் எடுத்துக்கொண்டனர்.. குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்தால் அதை அப்பா தன் ஆளுமைத் திறனால் சரிசெய்துவிடுவார். சரி செய்யமுடியாத நிலையில் அனுபவமிக்க ,தாத்தாவிடம் போய் ஆலோசனை கேட்பார். அதைச் செயல் படுத்தும் போது எதிர்ப்பு வரலாம் என்ற நிலையில் எல்லோரையும் அழைத்து விளக்கம் கொடுப்பர்.  அவர்களும் புரிந்து கொண்டு எதிர்ப்பை விலக்கிக் கொண்டு விடுவார்கள் இது போன்ற நிலை குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்டவர் நேர்மையானவராகவும், ஆளுமைத்திறன்மிக்கவராகவும் ,சுயநலமற்ற வராகவும் இருக்கும்போதும், அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உறுதுணையாகச்  செயல்படும்போதும்  மட்டுமே இயல்பாக நடக்கின்றது  அப்பாவும் அம்மாவும் வரவு செலவுகளைத் திட்டமிட்டுச் செலவழித்தனர் .தேவையான செலவுகளை மட்டுமே அனுமதித்ததால் சேமிப்பு இருந்தது .இந்த சேமிப்பு எதிர்பாராமல் வரும் செலவினங்களுக்கு கைகொடுத்தது பற்றாக்குறை என்று ஒருநாளும் வந்ததில்லை அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்து செயல்பட்டதாலும் ,குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடாமல் முனைந்து செயல்பட்டதாலும்  குடும்பத்தின் இனிமை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது குடும்பத்திலுள்ள அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய  இனம் புரியாத அச்சமின்றி வாழ்க்கையை இனிமையாகக் கழித்தனர் . தான் எடுக்கும் முடிவு தவறாக இருக்குமோ என்ற குழப்பம் ஏற்படும்போது அனுபவம் மிக்க அனைவருக்கும் பொதுவான தாத்தாவிடம் கருத்துக் கேட்பார் .பொதுவாக இக் கருத்து அனைவருக்கும் இணக்கமானதாகவே இருக்கும் .

ஒருவரிடம் சுயநலம் மிகும் போது ,உழைப்பின்றி பொருள் சேர்க்கும் விருப்பம் ஏற்பட்டுவிடுகிறது. உழைப்பின்றி பொருள் சேர்க்கும் எந்த முயற்சிக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்யும் அப்போது  தனக்குக் கிடைக்க வேண்டிய வசதிகளுக்கு மற்றவர்கள் தடையாக இருக்கின்றார்களோ என்ற எண்ணம் மேலோங்கிவிடுகின்றது   மற்றவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க தவறான வழிமுறைகளை மேற்கொள்ளவும் . அச்சப்படுத்தி அடக்கவும் , அதிகாரத்தால் கட்டுப்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர். இவர்கள் எதிர்ப்பால் ஏற்படும் இழப்புக்களைத் தாங்கிக் கொள்ளமுடியாததால் வலிமையற்றவர்களாக இருப்பார்கள் சமாளிக்க முடியாத எதிராளிகளைச் சுயநலத்தில் பங்கு அளித்து எதிர்ப்பை ஒழித்து விடுகின்றார்கள் .உழைப்பின்றிக் கிடைக்கும் பொருளை இப்படி அள்ளிக் கொடுப்பதால் அவர்களுக்கு பெரிய இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை     

No comments:

Post a Comment