Monday, January 9, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 அரசு அலுவலகங்கள்  மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக உண்டாக்கப்பட்டன .ஒரு வேலைக்காக அலுவலகத்தை ஒருவர் நாடி வந்தால் ,முதலில் அவர் வந்ததற்கான பதிவு இருக்கவேண்டும் .அதில் அவரது தேவை பற்றி குறிப்பிடப்படப்பட்டிருக்கவேண்டும் . அப்பொழுதுதான்  அவர் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்கப்படுகின்றார் என்பதை ப் பிறர் அறிந்து கொள்ளமுடியும். அப்படி எந்த அலுவலகமும் செய்வதில்லை. செய்யுமாறு கட்டாய ப்படுத்தப்படுவதுமில்லை.இலஞ்சம்  கொடுப்பது குற்றம் இலஞ்சம் வாங்குவது பெரிய குற்றம் .இலஞ்சம் கேட்டால் மறுங்கள் , இலஞ்சம் கொடுத்தல் மறுங்கள் . இங்கே இலஞ்சம் யாரும் வாங்குவதில்லை. எனவே இலஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க நினைக்காதீர்கள் என்ற விளம்பரம் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் கட்டாயம் விளம்பரம் வைக்கப்படவேண்டும்   பொதுவாக சரியான வேலைக்கு மக்கள் யாரும் இலஞ்சம் கொடுக்க விரும்புவதில்லை. தவறான வேலைகளுக்குச் சிலர் இலஞ்சம் கொடுக்க முன்வருவார்கள் .வேலை முடியாமல் இழுத்தடிக்கப்படும்போது ,காலதாமதத்தை விரும்பாமல்  மக்கள் இலஞ்சம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத்  தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் காலதாமதம் இல்லமால் பார்த்துக்கொள்ளவேண்டும் . இதைக் கவனித்து ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பை எல்லோரும் தட்டிக் கழிப்பதால் ஒழுக்கமின்மை  சமுதாயத்தில் விரிவடைந்து கொண்டே வருகின்றது. சிங்கப்பூரின் சரித்திரத்தையே மாற்றியமைத்த லீகுவான் யூ போன்ற வலிமையான தலைவர்கள் இந்தியாவில் இல்லாதது ஒரு பெரிய குறை          

No comments:

Post a Comment