Wednesday, March 2, 2011

 நாச வேலை செய்தது யார் ?

பனி பெய்யும் கடுங் குளிர் காலத்தில் சில சமயங்களில்
குடிநீர் வரும் குழாய் அல்லது மேனிலை நீர்த்
தொட்டியிலிருந்து வரும் குழாய்கள் திடீரென்று தானாக
வெடித்து விடுகின்றன .இந்த நாச வெளிக்கு யார்
காரணம் ?
                                      ****************
  
 கடுங் குளிர்காலத்தில் சுற்றுப் புறத்தின் வெப்பநிலை 0 ௦
டிகிரி செல்சியெஸ்க்கும் கீழே சென்று விடுகிறது. அதனால்
குழாய் வழி வரும் நீர் குழாய்க்குள்ளேயே
உறைந்து விடுகிறது .உறைவதால் நீர் பனிக்கட்டியாக
நிலை மாற்றம் பெறுகிறது .பனிக்கட்டியின் அடர்த்தி
நீரை விடக் குறைவு.அதாவது நீர் உறைந்து
பனிக்கட்டியாக மாறும் போது அதன் கனஅளவு
அதிகரிக்கிறது இதுவே அதன் அடர்த்தி குறைவிற்குக்
காரணம் .நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பில்
(hydrogen bond) ஈடுபடுவதில்லை .பனிக்கட்டியில்
நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பால்
ஒரு சீராகப் படிந்து உறைவதால் அதிக வெளியை
எடுத்துக் கொண்டு கனஅளவை அதிகரித்துக் கொள்கிறது .
நிறை மிக்க பெரிய பாறையை உடைந்துப்
பொடியாக்குவதற்கு இயற்கை இந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறது .பாறைகளின் இடுக்கில்
தேங்கி இருக்கும் மழைநீர் உறையும் போது
விளையும் வெப்ப அமுக்கத்தால்  சிறு சிறு
துண்டுகளாக உடைந்து விடுகின்றது.

                                                   ***************
 
. துருவப் பிரதேசங்களில் வாழும் நீர் வாழ் உயிரினங்கள்
 



துருவங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மக்கள்
வாழ்வதற்கு ஏற்றவை அல்ல .கடுங் குளிர்,எங்கும்
பனி படர்ந்த பகுதி ,மரம் செடி கொடிகள் ஏதுமில்லாத
பனி வனம் . மக்கள் ஒதுக்கிய இப்பகுதிகளில் உள்ள
நீர் நிலைகளில் நீர் வாழ் உயிரினங்கள் மட்டும்
எப்படி நிம்மதியாக வாழ்கின்றன ? நீர் நிலைகள்
உறைந்து போனால் அவை மடிந்து போய் விடாதா ?

                                 ****************

 நீர் மாறுபட்ட சில தன்மைகளைப் பெற்றிருக்கின்றது .
நீர்ம நிலையில் ,திண்மநிலையை விட அதிக அடர்த்தியைப் பெற்றிருக்கிறது .இதனால் பனிக்கட்டிகள் நீரில்
மிதக்கின்றன, அப்படி மிதக்கும் பனிக்கட்டி அடியில்
உள்ள நீருக்கு ஒரு வெப்பக் காப்பாக இருப்பதால்
நீர் மேலும் குளிர்விக்கப்பட்டு பனிக்கட்டியாக
மாறுவதில்லை. புறவெப்பநிலை 0௦ டிகிரி செல்சியஸ்
ஆக இருப்பினும் உள்வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையில் இருக்கும். ஏனெனில் 4 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகம் .
மேலும் அடி நீர் உறையாதிருப்பதற்கு அதன் மீது
படந்திருக்கும் பனி செயல்படுத்தும் அழுத்தமும்
ஒரு காரணமாகின்றது .இதனால் பனி படர்ந்த துருவப்
பகுதிகளில் குளிர் காலத்திலும் நீர் வாழ் உயிரினங்கள்
எவ்வித இடையூறுமின்றி அடியில் உள்ள நீரில் வாழ
முடிகிறது. 4 டிகிரி செல்சியஸ் லிருந்து 0௦ டிகிரி
செல்சியஸ் வரை பருமப்பெருக்கம் அடைவதால் அடர்த்தி குறைகிறது .அதனால் அடர்த்தி குறைந்த மேல் மட்ட
நீர் அடர்த்தி மிகுந்த கீழ் மட்ட நீரோடு கலப்பதில்லை .

No comments:

Post a Comment