Wednesday, March 16, 2011

Arika iyarpiyal-43

இரு பாதரசத் துளிகள்



ஒத்த இரு பாதரசத் துளிகள் இரண்டும் சம
வெப்பநிலையில் ஒரு தனி வெளியில்
உள்ளன .அவை இரண்டும் இயல்பாக மோதி
ஒன்றிணைந்து ஒரு பெரிய துளியாக
மாறுகின்றது .அதன் வெப்பநிலையை மிகத்
துல்லியமாக அளவிட்டறிய முடியுமானால்
சிறிய துளிகளைவிடப் பெரிய துளி சூடாக
இருக்கும் என்பதை அறியலாம் .இது ஏன் ?
அதற்கு வெப்ப ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது ?

                                      ******************
 
ஒரு பாதரசத் துளி கோள வடிவத்தில்
நிலைத்திருப்பதற்குக் காரணம் நீர்மத்தின்
பரப்பு இழுவிசையாகும். (Surface tension) . நீர்மத்தின்
உட்புறமும், புறப் பரப்பிலும் இருக்கும்
மூலக்கூறுகள் அல்லது அணுக்களுக்கிடையே
ஒரு வேறுபாடு உண்டு . நீர்மத்தினுள் அவை
எல்லாத் திசைகளிலும் சம அளவில் பிற
அணுக்களால் கவரப்படுகின்றன .ஆனால்
புறப்பரப்பில் அப்படி இல்லை.பரப்பிற்கு மேல்
ஊடகம் இல்லாததால் புறப் பரப்பில் உள்ள
ஒவ்வொரு துகளும் உள்நோக்கி இழுக்கப்படுகிறது .
இந்த இழுவிசையால் துளியின் புறப் பரப்பு
எப்போதும் சிறுமமாக இருக்கிறது . பரப்பை
அதிகரிக்க வேலை செய்யவேண்டும் .இது
அதில் நிலையாற்றலாகத் தேங்குகிறது .
இரு பாதரசத் துளிகளின் பரப்பை விடப் பெரிய
பாதரசத் துளியின் பரப்பு குறைவு . எனவே
பரப்பு இழுவிசையின் பரப்பாற்றல் குறைகிறது .
இந்த ஆற்றல் வெளி ஊடகத்திற்குச் செல்லத்
தடை செய்யப்பட்டிருப்பதால்
பெரிய துளியின் ஆற்றல் அதிகரிக்கிறது .



No comments:

Post a Comment