Saturday, March 19, 2011

vanna vanna ennangal

பூமித்தாய்






நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

சாகாத சமுதாயத்தின்

பொதுத் தாய்

அவளுக்கு வயது

ஆயிரம் கோடி ஆண்டுகள்

வயதாகி விட்டாள் என்று

அவள் நலனில்

அக்கறை கொள்ள

மறந்துவிடாதே



படர்திருக்கும்

பச்சைத் தாவரங்கள்

அவள் உடுத்தியிருக்கும்

அழகிய ஆடைகள்

பூத்துக் குளுங்கும் பூக்கள்

அவள் சிந்திவைக்கும்

புன்னகைகள்

அழகாய் என்றைக்கும்

இளமையாய் இன்றைக்கும்

அவள் இருக்கின்றாள்



உயர்தோங்கிய மலை

பூமித்தாயின் இதயம் போல

நிலத்தில் ஓடும் நீரோட்டம்

இந்த இதயத்தால்

நிகழும் இரத்தவோட்டம்



பரந்து விரிந்த கடல்

சுருங்கி விரியும் சுவாசப்பை போல

எங்கும் வீசும் காற்றோட்டம்

இதன் இயக்கத்தால்

நிகழும் மூச்சோட்டம்



நெடுந்தூரம் ஓடிச் சென்று

கடலில் கலக்கும்

கடியநீர்

சூரிய ஒளியை சுவாசித்து

ஆவியாக்கி மேகமாக்கி

மேட்டு நிலங்களில்

மலையாய் பெய்து

களைத்துப் போன

உலகை மீண்டும் மீண்டும்

உயிர்பூட்டுகிறது .



நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

பூமித்தாய்

தாயின் பரிவு

இல்லையென்றால்

தவிக்கப்போவது

சாகாத சமுதாயமே



No comments:

Post a Comment