Wednesday, March 9, 2011

Arika ariviyal-44

கொதி நீரில் ஒரு பனிக் கட்டி






கொதிக்கும் நீரில் உருகாமல் ஒரு பனிக்கட்டித் துண்டை நிலைத்திருக்குமாறு செய்ய முடியும் .ஒரு சிறிய
சோதனைக் குழாயை எடுத்து அதன் கொள்ளளவில்
3 /4 பங்கு நீரை இட்டு நிரப்பி எடை கட்டிய ஒரு
பனிக் கட்டித் துண்டை உள்ளிடவும். இது அடியில்
போய் தங்கிவிடும். பின் சோதனைக் குழாயைச்
சரிவாகச் சாய்ந்து மெழுகுவர்த்தியின் சுடரால்
மேற்புற நீரைச் சூடுபடுத்தவும் .நீர் கொதித்து
ஆவியாகும் .எனினும் அடிப்பகுதியில் உள்ள
பனிக்கட்டி வெகு நேரம் நீராக உருகாமல்
நிலைத்திருக்கும்.இது எங்ஙனம் நிகழ்கின்றது ?
இதன் இயற்பியல் அடிப்படை என்ன ?

                              ******************

சோதனைக் குழாயின் அடிப்பகுதியில் உள்ள
நீர் குளிர்ச்சியாக இருப்பதால் பனிக்கட்டி மெதுவாக
உருகும் . மேற்பகுதியில் உள்ள நீர் சூடுபடுத்தப்பட்டு
அடர்த்தி குறைவாக இருப்பதால் ,வெப்பச்சலன
இயக்கத்தை அடிப்பகுதி நீரோடு மேற்கொள்வதில்லை .
மேலிருந்து ஆவியாகி வெளியேறுகிறது .
வெப்பக் கடத்தல் மூலம் வெப்பம் கடத்தப்படலாம் .
எனினும் தூய நீரின் கடத்து திறன் மிகவும் குறைவு .
இதன் காரணமாக அடிப் பகுதியில் உள்ள பனிக்கட்டி
மிக மிக மெதுவாக உருகுகின்றது

No comments:

Post a Comment