Thursday, March 10, 2011

Vanna Vanna Ennangal

காதல் என்றால் என்ன ?




காதலென்று சொன்னால் ஒருவர்க்கு

உள்ளம் சிறகடித்து விண்ணில்

உயர உயரப் பறக்கிறது

கடுங் கசப்பைக் குடித்தாலும்

கரும்பின் அடியாய் இனிக்கிறது



காதலென்றால் மற்றொருவருக்கு

இதயம் துடிதுடித்து மண்ணில்

உதிரம் உறையாமல் கொட்டுகிறது

விரைத் தேனை சுவைத்தாலும்

வேம்பின் வேராய்க் கசக்கிறது



ஒரு சொல்லுக்கு இரு அர்த்தமுண்டு

ஒரே காதலுக்கு இரு சுவையுண்டோ?



மனம் மயங்கும் இந்தக் காதல்

என்றால் என்ன ?



அது சுகமான் சொர்க்கமா ?

சொர்க்கம் போன்ற நரகமா ?





பாவையர் மீது கொண்ட பற்றா ?

பூவை நுகரப் பூத்த விருப்பமா?



அழகை அணைக்க விரும்பிய ஆசையா ?

மனதை அடக்க முடியா உணர்வா ?



மூத்தோர் வழி வந்த பண்பா ?

முடிவில்லாத உறவு தந்த பாசமா?



இருவர்மட்டும் பரிமாறிக்கொள்ளும் அன்பா ?

இல்லை இயற்க்கை நிலைபடுத்திய அறமா?



பழகப் பழக அரும்பிய நட்பா ?

பருவத்தில் புகுந்த காமமா?





அது நட்பும் இல்லை

அன்பும் இல்லை



அங்கே ஒளிந்திருப்பது

இனப்பெருக்க உணர்வுகளே !

அடிப்படையில் இந்த உணர்வில்லாமல்

ஆணுமில்லை பெண்ணுமில்லை

காதலுமில்லை,கத்திரிக்காயுமில்லை



காதலுக்கு மனிதன் வேண்டுமானால்

பல பொருள் கொடுக்கலாம்

இயற்கையில் இந்தக் காதல்

சாகாத சமுதாயத்திற்கு

இனப்பெருக்க உணர்வு மட்டுமே.

.



No comments:

Post a Comment