Monday, March 7, 2011

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் -21



இந்திய நாட்டின் மீது அளவில்லாத பற்றும்,இந்திய
மக்களிடம் அளப்பரிய பாசமும் கொண்டு
உங்களுடைய வாழ்க்கையை இந்திய மக்களுக்காகவே அர்பணித்துவிட்டதாக மக்களை நினைக்க வைத்து
அதை நிலைப்படுத்திக்கொள்ள தொடர்ந்து
விடாமல் நாடகமாடிக்கொண்டு வரும் இந்திய
அரசியல்வாதிகளே ,

சாதாரண குடிமக்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு
ஒவ்வொருநாளும் ஏதேதோ சொல்ல நினைக்கிறார்கள்.
சரியாக நினைத்திருந்தாலும் அவர்களில் யாருமே
சொல்ல வந்ததை சரியாகச் சொன்னதில்லை .
ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப்
போராட்டத்தை விட்டு வேறெதையும் சிந்திக்க
முடியாத சூழ்நிலையிலேயே தொடர்ந்து இருப்பதால்
இதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் இதையே அனுகூலமாக எடுத்துக்கொண்டு
அரசியல்வாதிகள் மனம் திருந்தாதிருப்பது கவலை
அளிக்கிறது. நீங்கள் எவ்வளவு பொய் சொன்னாலும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு ஊழல்
புரிந்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
வற்றாத வறுமையாலும், அநாகரிகக் கொடுமைகளினாலும் ,
மனம் திருந்தாத அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தினாலும்,
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலும் ,தங்கள்
திறமையை வெளிக்காட்டி முன்னேற முடியாத இடைதடைகளினாலும் ,பெரும்பாலான மக்கள்
மனதில் இனம் புரியாத ஒருவித பயமே நிலவுகிறது.

மேலும் ,நேர்மையாக இனி வாழ முடியாது என்ற
மனநிலையே பரவலாகி வருகிறது. இந்த மோசமான நிலை நிலைப்படுமானால் .இந்தியாவை ஆயிரம்
மகாத்மா காந்திகள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.
அப்புறம் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டே இருக்கவேண்டியதுதான் .

இந்த நிலைமையை மாற்றும் தகுதியும்,பொறுப்பும்
உங்களிடம்தான் இருக்கிறது . இனிமேலாவது உங்கள்
கடமைகளை நிறைவாகச் செய்யுங்களேன் .

அன்புள்ள

இந்தியக் குடிமகன்

No comments:

Post a Comment