Wednesday, August 27, 2025

 இந்தியா சுதந்திரமடைந்தது 75 ஆண்டுகள் கடந்துவிட்டன . அரசியல் தலைவர்கள் இந்திய மக்கள் நலனுக்காக எவ்வளவோ சொல்லியிருக்கின்றார்கள். அப்படியிருந்தும் மக்கள் முன்னேற்றம் தடுமாற்றத்துடன் இன்றைக்கும் இருக்கின்றது . அன்றைக்கு எப்படி இருந்தததோ அதேதான் இன்றைக்கும் இருக்கும். ஏன் அதைவிடக் கூடுதலாகவே இருக்கும். . மாற்றத்திற்கான அறிகுறிகளை வெறும் வாய்மொழிகள் தந்துவிடுவதில்லை . அனைவரிடமும் நம்பிக்கை தரக்கூடிய செயல் வடிவம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மக்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும் .

Monday, August 25, 2025

 சம்பளம் வாங்கும் போது பாதி white பாதி கருப்பு என்று வாங்குபவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பார்களா ? ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் ஒழிப்புக்காக இருக்கவேண்டும். மக்கள் தேர்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு விளம்பரமாக இருக்கக் கூடாது.. மற்றவர் செய்யும் ஊழலைத் தடுத்து அதை த் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியாக இருந்தால் ஊழலால் பெருகவே செய்யும் . 

இலவசம் வேண்டாம் - வரியைக் குறையுங்கள், மக்களுக்கான வசதிகளை நிறைவாகக் கொடுங்கள். அபராதம் குற்றவாளிகளுக்கு விதியுங்கள் . தவறு செய்பவர்களுக்கு வேண்டாம். மக்களிடம் உழைப்பை ஊக்குவியுங்கள் . அதற்க்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள் . உங்கள் நேர்மைத்தனத்தை நீங்களே பாராட்டிக்கொள்ளமால் , மக்கள் மனமுவந்து பாராட்டும் படி நடந்து கொள்ளுங்கள் 

Thursday, August 21, 2025

 மக்களுக்கு நல்லது பண்ணப்போகின்றார்கள் என்று அவர்களை நம்பி அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக க் கொடுத்துவிட்டோம் . பதவிக்கு முன்பு அவர்களிடம் காணப்பட்ட  அன்பான  பேச்சும் மரியாதையான  நன் நடத்தையும்  நேர்மையான செயலும்  பதவிக்கு பின்பு எல்லாம் எதிர்மறையாக ஆகிப்போயின  மனித நேயத்தை மறந்துபோனனார்கள் . அரசியல் எதிரிகளை அவர்களாகவே தேர்வு செய்து கொண்டு அவர்களை அழிப்பதிலேயே அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார்கள் . . அவர்களுடைய போக்கை இனி யாராலும் கட்டுப்படுத்தவோ ,திருத்தவோ முடியாத நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது .காரணம் நாம் முன்பு அவர்களிடம் கொடுத்துவிட்ட அதிகாரமே. அதிகாரத்திற்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினால் மக்களுக்கு நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன் .    

 சட்டத்தை மீறும் ஆளுநர் அல்லது அமைச்சர்கள் இருந்தால் அவர்களை க் கட்டுப்படுத்த நீதி மன்றங்களால் முடியாது , நாடாளுமன்ற த்தால்மட்டுமே முடியும் என்றால்  அவர்களே தீயவர்களுக்கு முழுமையான பாதுக்காப்பாக இருக்க முடியும். மேலும் ஆட்சி மாற்றத்தின் போது இது எதிர் விளைவினை ஏற்படுத்தும் . இதனால் பாதிக்கப்படுவது மக்களே . சட்டமன்றத்திற்கு  ஒன்றில் அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு ஏதொன்றும் இல்லை. ஏனெனில் தொடக்கத்தில் அரசியல் சட்டங்களை ஏற்படுத்தியது சட்ட வல்லுநர்கள் ஒழிய நாடாளுமன்றம் இல்லை. 

Tuesday, August 19, 2025

 About my new book yet to be published

Bohr's Theory of hydrogen atom is very basic and beginning in the study of  modern atomic structure. It described a model for the atom where it is assumed as a miniature solar system .  The positively charged protons form a core called nucleus, the massive part of the atom and one or more  negatively charged electrons revolving round the nucleus in various specific and non-radiating orbits. Bohr suggested the quantum aspect of physical properties of particles in microworld . Bohr's model works well for single electron system like hydrogen and hydrogen-like ions. It drastically fails in multiple electron system . The failure is due to the unaccountability of perturbation caused by the additional electrons. In this book a pragmatic analysis in the optimization of Bohr's Theory of hydrogen atom is described elaborately. An attempt is made to study the spectral feature of atoms with atomic number greater than that of hydrogen particularly helium and lithium . As an accomplishment it is approximated to suit with multi-electron systems. By  proposing an ingenious technique called hyper ionization,  the quantized energy levels of the orbital electrons are derived and applied in the case of helium and lithium. The  energy radiated out in various electronic transitions  and the corresponding wavelengths are derived and compared with the experimental data to ascertain the validity of the new technique.

    The variation of ionization energy with respect to atomic number is discussed more elaborately. It explains the instability of  negative hydrogen ion with two electrons in its innermost orbit.. Semi empirical formulae for the ionization energy of helium -like and lithium-like ions are derived  and its exactness is verified by comparing with the available experimental data. I confide undoubtedly , this book will generate new panorama in the classical theory of atomic structure  


Saturday, August 16, 2025

                                        

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு காக்கப்பட மக்கள் மூலம் மக்களுக்காக  ஏற்படுத்த அனைத்து அமைப்புக்களும் மக்களுக்கு நலம் பயக்கவேண்டும் ஆனால் அந்த அமைப்புக்கள் அரசியல்வாதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன .அதனால் மக்கள் அந்த அமைப்புகளின் மீது நம்பிக்கையை இழந்துவருகின்றார்கள் . ஒரு முறை நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டால் அந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகிவிடும் . அதனால் அரசியல் செய்வோர் அறநெறி மீறியவர்களாகி தீயசெயல்களே எங்கும் நிகழும் . அப்படிப்பட்ட நாடு தானாகவே அழிந்துபோகும் . நம்முடைய அழிவை நாமே வரவேற்கலாமா ?                                          







Wednesday, August 13, 2025

  நான் அறிவியல் படித்து அறிவியலை கற்பித்த ஒரு ஆசிரியன். நான் படித்த அறிவியலில்  கடவுள் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை .கடவுள் மக்களால் கற்பிக்கப்படும் உருவமாக  இல்லை . பிரபஞ்சம் எங்கும் தேடினாலும் இதுதான் உண்மை . கடவுள் மனிதர்களின் மனதில் தான் இருக்கின்றார். கடவுள் என்பது ஒரு கொள்கை . ஒவ்வொரு மனிதனும் தன் மனதினைத் தானே தூய்மைப்படுத்திக்கொள்ள நம் முன்னோர்களால்  நிறுவப்பட்ட   அறிவுரை. மாயை போலத் தோன்றினாலும்   நிழல்வடிவ நிஜம்   நான் கடவுளுக்கு கற்பிக்கப்பட்ட  நம்பமுடியாத குணங்களை ஏற்றுக்கொள்வதில்லை . ஆனால் மனதை சத்தமின்றி  சுத்தப்படுத்தவும் கடவுள் கொள்கை வேண்டும் என்று விரும்புவேன் . இன்றைக்கு சமுதாய மேடையில் நிகழும் மனம் பொறுக்கமுடியாத  நிகழ்வுகளைக் காணும் போது அந்தக் கடவுள் நம் முன்னோர்கள் கற்பித்த மாதிரி  உண்மையிலே இருக்கக் கூடாதா  என்று நினைப்பேன். . கடவுளே நீ  எங்கே இருக்கின்றாய் ? ஒரு முறை அவதரித்து தர்மத்தையும்  மனித நீதியையும் அழிந்து போய்விடாமல் காக்கமாட்டாயா? இங்கே மனிதர்கள் ஈகோ வினால் ஒருவரை யொருவர் எதிரியாக நினைத்து மனித நேயத்தையே மறந்து வருகின்றார்கள் . சூரசம்காரம்  வரும் என்று எதிர்பார்த்த நிலையில் உலகப் பெரும் போர் வரலாமா ?              

கடவுள் - by Dr M மெய்யப்பன் .   e -book  from Amazon  KDP 

Saturday, August 9, 2025

      நில உச்ச வரம்பு, தேசிய உடமையாக்கம் போன்றவை போல கட்சி களுக்கு ம் உச்ச வரம்பு ஏற்படுத்தலாம். .ஒரு தனி நபர் சொத்துக்கும் உச்ச வரம்பு வைக்கலாம். .இதை புதிய சட்டத் திருந்தங்களினால் ஏற்படுத்தாவிட்டால்  மக்கள் மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவதற்கான வாய்ப்பே மிகும் . ஒருவர்  பல கோடி கோடி கோடி கோடி கோடி  ரூபாய்க்கு அதிபதியாகவும் , ஒருவர் ஒன்று மின்றி அன்றாடங் காய்ச்சியாக்கவும் இருக்கின்றார் . இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவில் மட்டுமே அதிகம். மக்களுக்கான சட்டங்களை நீதிபதிகளின் குழு மட்டுமே நிறுவவேண்டும் ,மக்களால் புரிதல் இன்றி தேர்ந்தெடுக்கப்படும் அரசியவாதிகளால் அல்ல. ஏனெனில் அவர்களுடைய அடிப்படையான நோக்கமே வேறு .

Thursday, August 7, 2025

 பிறரால் பார் க்கப்படுமாறு வெளிப்படையச் செய்யப்படும் பணிகளில் மட்டும் பொறுப்பையும் ,நேர்மைத்தனத்தையும் காட்டும் பொதுமக்களுக்கான அதிகாரிகள்  மற்றும் அரசியல்வாதிகள் பிறரால் பார்க்கமுடியாத சூழ்நிலைகளில் அப்படியே இருப்பதில்லை . அவர்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு  அந்த நடத்தையை ஒரு விளம்பரமாகக் கொள்கின்றார்கள் 

Saturday, August 2, 2025

 ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில் நல்லாட்சி செய்ய இரண்டு கட்சிகள் போதும். அரசியலுக்கு வர விரும்பும் புதியவர்கள் இருக்கும் கட்சிக்குள் எதாவது ஒன்றில் சேர்ந்து சேவை புரியவேண்டும்.பணம் சாம்பாதித்து விடவேண்டும் என்ற எண்ணத்தால் அரசியலில் நுழைபவர்களுக்கு மூத்தவர்கள் வழி கொடுக்காததால் புதிய கட்சி தொடங்குகின்றர்கள் அல்லது வளர்ந்த கட்சியை விட்டுவிட்டு வளரும் கட்சியில் இணை கின்றர்கள். இன்றைக்கு பல நூறு கட்சிகள். தங்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் பொருள் சாம்பாதித்து விடலாம் என்று மக்களுக்கு சேவை செய்வதைவிட மாற்றான் கட்சியை குறை கூறுவதையே தொழிலாகாக் கொண்டுள்ளார்கள். அதிக எண்ணிக்கை யில் கட்சிகள் கொண்ட நாடு வளம் பெற்றதாக வரலாறு இல்லை.

Friday, August 1, 2025

 நான் நேற்று கண்டனூரில் நடந்த அக்கினி ஆத்தாள் படைப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் படைப்புப் பங்காளிகள் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் பேர் ஓவ்வொரு ஆண்டும்  கூடி மூதாதையருக்கு படைத்து மகிழ் கிறார்கள்.இது எனக்கு சமுதாய நலம் சார்த்த ஒரு சிந்தனையைத் தூண்டியது . ஒவ்வொரு ஊரிலும் , கிராமங்களிலும் , அங்குள்ள அணைத்து இன மக்களும் ஒன்று கூடி  படையல் விழா நடத்தலாம் 

இதற்கு பொறுப்பாளர்கள்  அப்பகுதி மக்களே. இவர்களில் மூன்று அல்லது  நான்கு பிரிவினராகப் பிரித்து  அவர்களுள்  ஒருவரைச் சுற்றுமுறையில்  தலைமை  ஏற்கச் செய்து  ஒரு பிரிவினர் சுற்றுமுறையில்  வரவு செலவுக் கணக்கு பார்ப்பது , ஒரு பிரிவினர்  உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, பந்தி பரிமாறுதல் , ஒரு பிரிவினர் சமைத்தல் , முன்னேற் பாடு செய்தல்  இப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்யலாம். இரவு ஒரு பெரிய நிலைக் கண்ணாடி முன்பு நின்று ஒவ்வொருவரும் ஜாதி மத மற்றும் இனப்பகுப்பாடின்றி பிரார்த்தனை செய்யலாம். அப்போது ஒவ்வொருவரும் அவரவர் வீடு மங்கள நிகழ்ச்சிகளை  மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி இனிப்புகளையும் பரிசப் பொருள்களையும் வழங்கலாம் .இப்படி கூடி மகிழும் போது மனிதநேயம் மேம்படுகிறது. ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இன்னும் நிறைய விதி முறைகள் இருக்கின்றன. இதை மக்களுக்கான  மக்கள் அறக்கட்டளையாக அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம்  கல்விக்கடன் , வழங்கலாம், கைத்தொழில் உற்பத்திப் பொருட் களை விளம்பரப்படுத்தலாம் , விவரம் தெரிந்தவர் கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் . இன்னும் இன்னும் எவ்வளவோ  இருக்கு .