மக்களுக்கு நல்லது பண்ணப்போகின்றார்கள் என்று அவர்களை நம்பி அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக க் கொடுத்துவிட்டோம் . பதவிக்கு முன்பு அவர்களிடம் காணப்பட்ட அன்பான பேச்சும் மரியாதையான நன் நடத்தையும் நேர்மையான செயலும் பதவிக்கு பின்பு எல்லாம் எதிர்மறையாக ஆகிப்போயின மனித நேயத்தை மறந்துபோனனார்கள் . அரசியல் எதிரிகளை அவர்களாகவே தேர்வு செய்து கொண்டு அவர்களை அழிப்பதிலேயே அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார்கள் . . அவர்களுடைய போக்கை இனி யாராலும் கட்டுப்படுத்தவோ ,திருத்தவோ முடியாத நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது .காரணம் நாம் முன்பு அவர்களிடம் கொடுத்துவிட்ட அதிகாரமே. அதிகாரத்திற்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினால் மக்களுக்கு நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன் .
No comments:
Post a Comment