மக்களுக்காகத்தான் நாம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்று எண்ணாமல் ,நமக்காகத்தான் அவர்கள் என்று எண்ணும் போக்கு நம் அரசியல்தலைவர்களிடம் மலிந்திருக்கின்றது . நாட்டின் வளத்தை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் . ஒளிமயமான எதிர்காலத்திற்கு திட்டமும் செயல்படும் இல்லை . கட்டமைப்பும் ,அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லை.போதிய வசதிகள் வாய்ப்புக்கள் இன்றி மக்கள் தொகைப் பெருக்கம் ,வாகனங்களின் அதிகரிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடின்மை, ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் , அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு , நிர்வாகச் சீர்கேடுகள், தீயவர்களின் வளர்ச்சி ,போன்றவற்றால் இந்திய நாட்டின் எதிர்காலம் இருட்டாக இருக்கின்றது
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, January 21, 2026
Friday, January 16, 2026
Tuesday, January 13, 2026
மறு பிறப்பு உண்டா என்ற கேள்வி கேட்டால் உண்டு என்று சொல்லும் தைரியத்தை அமெரிக்காவின் தற்போதைய ப்ரெசிடெண்ட் தந்துள்ளார். ஹிட்லர் மீண்டும் பிறந்து வந்துவிட்டவரைப்போல அவர் நடந்துகொள்கிறார் . ஹிட்லர்தான் உலக நாடுகள் அனைத்தையும் ஆள்வதற்கு ஆசைப்பட்டு போர் செய்தான் . சந்திரமுகி என்ற தமிழ் படத்தில் ஒரு வசனம் வரும் அதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது . எழுந்து நிக்கவே முடியலையாம் ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் .அதுபோல ஒரு நாட்டையே ஆளமுடியலையாம் ஒன்பது நாடு கள் வேண்டுமாம் . கனிம வளம் வேண்டும் என்று விரும்பினால் சந்திரனுக்கு போங்க ,செவ்வாய்க்கு போங்க யார் தடுத்தா ?
Sunday, January 11, 2026
இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு இருக்க வேண்டும் . அதற்கு பண்டமாற்றங்களோடு கல்வி ,தொழில் வளர்ச்சிகளில் கூட்டுறவு மேற்கொள்ளவேண்டும் . தேவையின்றி ஒரு நாட்டின் கலாச்சார மற்றும் மரபு வழியிலான நிகழ்வுகளில் குறுக்கிடுவதும், இயற்க்கை அவர்கள் வாழ்வதற்காக அளித்த இயற்க்கை வளங்களை அபகரிக்க நினைப்பதும் வல்லுறவை ஏற்படுத்தும். இது பிற நாட்டு மக்களிடமும் ,தலைவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறியும் தவறான தீய பழக்கங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள் என்று தமிழ் உலக முன்னோர்கள் கூறியதை ஏனோஇவர்கள் மறந்துவிட்டார்கள்.
Saturday, January 10, 2026
மாணவர்கள் அதிக விழுக்காடு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கு நாங்கள்தான் காரணம் . உலக அரங்கில் விளையாட்டில் வெற்றிபெற்றால் நாங்கள் தான் காரணம் , வெளிநாட்டில் CEO வாக வேலைசெய்வோர் எண்ணிக்கை மிகுந்தால் அதற்கு நாங்கள்தான் காரணம் , இப்படி இயல்பாக நடக்கும் எல்லா நல்லனவற்றிற்கும் தங்களை இணைத்துக் கொள்ளும் நம் அரசியல்தலைவர்கள் , சீனாவை விட இந்தியா பொருளாதாரதில் பின்தங்கி யிருப்பதற்கும் அவர்களே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றார்கள் . சீனாவை விட இந்தியா பொருளாதாரத்தால் பின்தங்கி இருக்கலாம் ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அவர்களைவிட பணக்காரர்க ளாக இருக்கின்றார்கள் .
Friday, January 9, 2026
கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்றும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம் என்றும் இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள் என்றும் தொட்டஇடமெல்லாம் அடுக்கடுக்காய் விளம்பரங்கள். இவை யாவும் போலித்தனமான ,மக்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்கின்ற அறிவிப்புக்கள். ஒரு விளம்பரத்தில் கூட உண்மையான முகவரி இல்லை என்பதே அதற்குத் சான்று கூறுகின்றது. மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பது மட்டும் போதாது . அரசாங்கமும் ஏமாற்றும் பேர்வழிகளிடமிருந்து ஏமாறும் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்
Wednesday, January 7, 2026
.உலகம் ஒரு நாடாக இருந்தபொழுது மக்கள் எல்லோரும் இன,மத வேற்றுமையின்றி ஒருங்கிணைந்த சமுதாயமாக இருந்தனர். போட்டி பொறாமை வளர்ந்தபோது ஒருவர் மற்றொருவரை அழித்துவிட்டு முன்னேற நினைத்தனர். ஒன்று பலவானது. பல மதங்கள் . மதத்திற்குள் பல பிரிவுகள் பிரிவுக்குள் பல இனங்கள் . பல இனங்களுக்குள் பல ஏற்றத் தாழ்வுகள். பல ஏற்றத்தாழ்வுகளுக்குள் பல மொழிகள். பல நாடுகள் .எல்லாமே இயற்கைக்கு அப்பாற்பட்டு மனித மனத்தால் வளர்ச்சிபெற்று வருகின்றன.அழிவு ஆயுதங்களினால் இல்லை பொல்லாத இந்த மனதினால் தான் நிகழப்போகிறது
.அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்கள் பிற அரசியல்வாதிகளுக்குத் தெரியவரும் நிலையில் அதை எப்படி அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள் . சமுதாய நலனுக்காகத் தடுக்க நினைப்பதேயில்லை . ஆட்சியாளர்களாக இருந்தால் எதிரிகளை அச்சமூட்டி அடிபணிய வைக்கின்றார்கள் .முடியாவிட்டால் சட்டத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றார்கள். எதிராணியிராக இருந்தால் கூட்டணியில் இணைந்து தப்பித்து விடுகின்றார்கள் . அரசியல் இங்கே அரசியலாக இல்லை என்பது எனக்குள் வளர்ந்து வரும் ஒரு கவலையாகி வருகின்றது
Saturday, January 3, 2026
. ஓர் அரசியல்வாதியின் உண்மையான முகத்தை பிற அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தாலும் போதிய ஆதரமில்லாததால் அதை வெளிப்படுத்திக்காட்டுவதில்லை. அரசின் உயர் அதிகாரிகளுக்கு அரசியவாதிகளின் முழு ஜாதகமும் தெரியும் .என்ன சொல்கின்றார்கள் என்ன செய்கின்றார்கள் அதில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். இருந்தும் குற்றம் புரியும் அரசியல் வாதிகள் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவதில்லை.. நீதிமன்றமும் மக்களுக்காக வாதாடுவதில்லை .
Thursday, January 1, 2026
. அரசியலில் பதவி என்பது மக்களுக்கு லாப நோக்கற்ற சேவை செய்வதாகும் . அவர்கள் ஊழல் செய்வதும் , சுயநலத்தால் குற்றங்கள் செய்வதும் கூடாது என்பதற்காக அரசாங்கம் தெரிந்த மற்றும் தெரியாத பல அனுகூலங்களை வழங்கியுள்ளது. நல்ல மனிதர்கள் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவார்கள் ஆனால் பிறரைத் தடுக்கமாட்டார்கள் .சேவை எல்லோராலும் செய்யப்படவேண்டும் அது தன்னால் மட்டுமே செய்யப்படவேண்டும் என்று நினைப்பது தவறாகும். இன்றைக்கு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து போலியான சேவையை ச் செய்கின்றார்கள். அரசியலில் பதவிக்கு பெரிய அளவில் போட்டி இருக்கின்றது என்றால் பதவியால் கிடைக்கும் அனுகூலங்களை அபகரித்துக் கொள்ள போட்டி போடுகின்றார்கள் என்றே அர்த்தம் . பதவி பதவிக்காக இல்லை .சேவை சேவைக்காக இல்லை. அரசியல் வாதிகள் திருந்துவதாக இல்லை. அவர்களைத் திருத்தும் பொறுப்பு நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது. நாட்டில் நீதியை நிலைநாட்டுவது அவர்களுடைய கடைமையாகும்