Thursday, January 1, 2026

     

 . அரசியலில் பதவி என்பது மக்களுக்கு லாப நோக்கற்ற சேவை செய்வதாகும் . அவர்கள் ஊழல் செய்வதும் , சுயநலத்தால் குற்றங்கள் செய்வதும் கூடாது என்பதற்காக அரசாங்கம் தெரிந்த மற்றும் தெரியாத பல அனுகூலங்களை வழங்கியுள்ளது. நல்ல மனிதர்கள் மக்களுக்குச்  சேவை செய்ய விரும்புவார்கள் ஆனால் பிறரைத் தடுக்கமாட்டார்கள் .சேவை எல்லோராலும் செய்யப்படவேண்டும்  அது தன்னால் மட்டுமே செய்யப்படவேண்டும் என்று நினைப்பது தவறாகும். இன்றைக்கு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து போலியான சேவையை ச் செய்கின்றார்கள். அரசியலில் பதவிக்கு பெரிய அளவில் போட்டி இருக்கின்றது என்றால் பதவியால் கிடைக்கும் அனுகூலங்களை அபகரித்துக் கொள்ள போட்டி போடுகின்றார்கள் என்றே அர்த்தம் . பதவி பதவிக்காக இல்லை .சேவை சேவைக்காக இல்லை. அரசியல் வாதிகள் திருந்துவதாக இல்லை. அவர்களைத் திருத்தும் பொறுப்பு நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது. நாட்டில் நீதியை நிலைநாட்டுவது அவர்களுடைய கடைமையாகும் 

No comments:

Post a Comment