Wednesday, January 21, 2026

 மக்களுக்காகத்தான் நாம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்று எண்ணாமல் ,நமக்காகத்தான் அவர்கள் என்று எண்ணும் போக்கு நம் அரசியல்தலைவர்களிடம் மலிந்திருக்கின்றது . நாட்டின் வளத்தை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் . ஒளிமயமான எதிர்காலத்திற்கு திட்டமும் செயல்படும் இல்லை . கட்டமைப்பும் ,அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லை.போதிய வசதிகள் வாய்ப்புக்கள்  இன்றி  மக்கள் தொகைப் பெருக்கம்   ,வாகனங்களின் அதிகரிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடின்மை, ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் , அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு , நிர்வாகச் சீர்கேடுகள், தீயவர்களின் வளர்ச்சி ,போன்றவற்றால் இந்திய நாட்டின் எதிர்காலம் இருட்டாக இருக்கின்றது        

No comments:

Post a Comment