Saturday, April 26, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம்


காந்தியை இனி யாரும் பார்க்க முடியாது என்றாலும் இந்த காந்தி தேசத்தில் காந்தியைப் போல ஓர் அரசியல் தலைவரைக் கூட இனி பார்க்க முடியாது என்பது தான் மிகத் துயரமானது .காந்திக்கு
ணையாக ஒரு சிலரை உலக நாடுகளில் பார்க்க முடிவதைப் போல இந்தியாவில் பார்க்க  முடிவதில்லை.இந்தியாவில் காந்தியைப் போல வேடமிட்டவர்கள், காந்தியைப் போல நடிப்பவர்கள்,காந்தியத்தை புறத்தே மட்டும் பேசுபவர்கள், காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் போல காட்டிக் கொள்பவர்கள், மொத்தத்தில் காந்தியை நேசிப்பவர்கள் போல உலகிற்குக் காட்டிக் கொள்பவர்கள் தான் இப்போது இந்தியாவில் அதிகம் இருக்கின்றார்கள்,இது காந்தி தேசமாக இருக்கலாம் ஆனால் காந்தியமில்லாத தேசமாக வளர்ந்து விட்டது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சியைத் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மாறி மாறி  ஒருவரையொருவர் குற்றம் கண்டார்கள் ,தரக் குறைவாகப் பேசினார்கள். தங்களைத் தாங்களே உயர்வாகப் பேசிக் கொண்டார்கள்.செய்யாத டமைகளையெல்லாம் தான் செய்த தொண்டாக வர்ணித்தார்கள்.

இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் சராசரி இந்தியனைப் போல வாழவில்லை.
தொண்டு உள்ளமும் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.நாட்டின் செல்வத்தை எப்படியெல்லாம் சுரண்டிப் பிழைக்கலாம் என்று கனவு கண்டு மக்கள் முன்னே நாடகமாடி பதவியில் அமருமாசையால் கடமைகளைச் செய்யத் தவறியவர்களாக இருக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்ய தான் மட்டுமே அரசாள வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.மேலை நாட்டுச் சரக்குகளை குடித்தும் ,அளவுக்கு மீறி உண்டும் பெரும்பாலான தலைவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றார்கள். குடித்து விட்டு கும்மாளம் போடும் இவர்களா ஏழை இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போகின்றார்கள்.மக்கள் இவர்களை இனமறியலாம் ஆனால் என்ன பயன். இவர்களுக்கு மாற்றாக வேறொருவரைக் கொண்டு வர இவர்களால் முடியவே முடியாது. ஏனெனில் இந்தியாவில் அப்படிப்பட்ட வேட்பாளர்கள் யாருமில்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment