Monday, April 28, 2014

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாயகம் ஒடுக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டதாக ஏதோ சாதனை  செய்து விட்டதைப் போல பேசுவது வேதனை அளிக்கின்றது.வேட்பாளர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பொருள் குவிந்திருக்கின்து.அதனால்தான் மிகுதியாகச் சேர்த்த பொருளை அள்ளித் தெளித்து வெற்றியால் அதைவிட அதிகமாகப் பொருள் குவிக்க நினைக்கின்றார்கள். பணப்பட்டுவாடா செய்வதை தடுத்து விட்டால்,வேட்பாளர்களின் இப் போக்கு மாறிவிடுமா? எப்போது அரசியல்வாதிகள் தவறான வழிகளில் பொருள் சேர்க்க அனுமதித்து விட்டோமோ அப்போதே ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.
ஓட்டுப் போடும் மக்களிடம் பொருள் இல்லை. நேர்மையாகப் பொருள் சம்பாதிக்க நிரந்தரமான வழியும் இல்லை. இன்றைக்கு சரியாகச் சாப்பிடவே வழியில்லை. எதிர்காலம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.அங்கே ஜனநாயம் செத்து விட்டது.  

வர்கள் பொருள் கொடுத்தால் மீண்டும் பொருள் சேர்க்க வழி. இவர்கள் பொருள் வாங்கினால்தான் உயிர் வாழ வழி. அவர்களிடம் கொடுப்பற்கென்றே தவறான வழிகளில் ட்டிய பொருள் இருக்கின்றது. ஜெயித்தால் கிடைக்கும் ஆதாயத்தை நினைத்து அதில் ஒரு சிறு பங்கை மக்களுக்கு முன் கூட்டியே பகிர்ந்து கொடுக்கின்றார்கள் இது இந்திய ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியாக வளர்ந்து வந்திருக்கின்றது என்பதை மறுக்கமுடியுமா? இது இன்றைக்கு சட்டப்படி குற்றமாக வர்ணிக்கப்படலாம். ஆனால் பதவி ஏற்று தவறாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை சட்டப்படித் தடுக்க முடியாத போது இப் போக்கினால் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. .இயற்கையில் செயற்கையான பரிணாம வளர்ச்சியை அனுமதிக்கும் இந்திய ஜனநாயகத்தில் இதை ஒரு தர்மமாகவே கருதலாம். இதைத் தடுப்பதைவிட இப்படிச் செய்வதற்காகவே அப்படிப் பொருள்  சேர்த்த புண்ணியவான்களை அல்லவா சட்டம் தடுத்திருக்கவேண்டும்.குடிப்பது குற்றமில்லை. ஆனால் போதை கூடாது என்று சொல்வது போலல்லவா இருக்கின்றது. எளியோர் முன்பு வலியோர் போலக் காட்டிக் கொள்ளும் சட்டம் வலியோர் முன்பு எளியோர் போல இருப்பது ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ளமுடியாது.

No comments:

Post a Comment