God-16
தமிழ் இலக்கியங்களில் கடவுள்
தமிழ் இலக்கியங்கள் யாவும், நூலின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகின்றன. தான் சொல்லப்போகும் கருத்துக்கள் யாவும் சமுதாய நலனுக்காக நடுநிலையோடு அமைய தன்னைத் தானே தகுதிப்படுத்திக் கொண்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு ஒழுக்கநெறியாக கடவுள்வாழ்த்தை மேற்கொண்டனர் . இந்த வழக்கம் சங்க காலம் முழுவதும் (கி.மு.10ஆம் நூற்றாண்டி லிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை ) நிலைத்திருந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உருவமற்ற கடவுள் ஒருவராக இருந்தாலும் , மக்களின் மனநிலைக்கு ஏற்ப உருவமுள்ள தெய்வங்கள் பலவாயின மக்களின் வாழ்வாதார த்திற்கு எது அடிப்படையாக இருக்கின்றதோ அதன் வளத்தை பாதுகாப்பதற்காக இப்படி உருவமுள்ள கடவுள்களை படைத்துக்கொண்டார்கள் மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சிநிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் நடத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத் திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இறைவணக்கம் என்பது நேர்மறையான சிந்தனை , நல்லொழுக்கம் ,சமுதாயக் கட்டுப் பாடு இவற்றை மக்களிடையே அழிந்துபோய்விடாமல் நிலைப்படுத்துவதற்காகவே வலியுறுத்தப்பட்டது
செயற்கைக் கோள்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக்காலத்திலேயே தமிழர்கள் 9 கோள்களுக்கும் சிலைவடித்து வணங்கினர் . மக்களின் வாழ்க்கையில் அவை நேரடியான தொடர்பு எதையும் பெற்றிருக்க வில்லை என்றாலும் , பூமித் தாயின் கூடப்பிறத்தவர்கள் என்ற முறையில் மதிப்புக்கொடுத்தனர் . சூரியக் குடும்பம் என்பது இயற்கையின் ஒரு அம்சம் .இயற்கையின்
எந்த படைப்பையும் வணக்கத்திற்குரிய ஒரு வடிவமாகக் கொள்வது மரபு .
இறந்து இயற்கையோடு இரண்டற க் கலந்தவர்களையும்
வணங்குவது இந்த மரபின் அடிப்படைதான் , இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை நடு கல் என்பார்கள். இறந்தவர்களை நினைவுகூர்வதற்காகவும் , அவர்களுடைய
நல்ல எண்ணங்களைக் கொண்டு செலுத்துவதற்காகவும் இந்த நடு கல்லை வணங்குவதை வழக்கமாக கொண்டார்கள்
. உண்மையில் இப்படிச் செய்யும் போது பிறப்பு இறப்புடன் தொடர்புடைய இயற்கை உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும் என்று
நம்பினார்கள் “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவே” என்ற புறநானூற்றுப்
பாடல் (பா 335) இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும்