Monday, August 17, 2020

God-3

 கடவுள் -3

இயேசு ஒரு நாள் இந்த உலகில் மனிதனாகவே  பிறந்தார் .அவருடைய உயர்ந்த பண்புகள் அவருக்கு மக்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றுத்தந்தன .பொதுவாக சுயநலமின்றி வாழ்பவர்கள் , மக்களுக்க்காக்  வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது அவர்கள் கடவுளாகவே போற்றப்படுகிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளைப் போல  இயேசு இந்தப்பணிக்காக பதவியை நாடவில்லை.ஏனெனில் துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்ய பதவி ஒரு அவசியத் தேவையில்லை என்பதையும் , பதவியைப் பெற்று உதவியைச் செய்தால் அது உதவியேயில்லை என்பதையும்  அவர் நன்கு அறிந்திருந்தார். அவருக்குப் பின் மக்கள் கிருத்துவர்கள் என அழைக்கப்பட்டார்கள் .இயேசுவிற்குப் பின் தான் மக்களில் கிருத்துவர்கள் வந்தார்கள். அதற்கு முன் கிருத்துவம் உலகில் இல்லை. ஆனால் இயேசுவிற்கு முன்பு மக்கள் இருந்தார்கள் இந்த உண்மை இயேசு பிறப்பதற்கு முன்னர் அவர்களுக்கு கடவுளே இல்லை அல்லது அவர்கள் தாங்கள் வணங்கும்  கடவுளை மாற்றிக்கொண்டார்கள்  என்பதைத் தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மொழி , நிறம் நாகரிகம் போன்றவை காரணமாக இல்லாத நிலையில் மனிதர்கள், பிரிந்து செல்வதற்கு உண்மையான  காரணத்தை மறைத்துவிட்டு வேற்றுமைக்கு  ஒரு புறக்காரணமாக கடவுளை எடுத்துக்கொண்டார்கள் ஒரு பிரிவிலிருந்து பிரிந்து வேறொரு பிரிவினராக உருவாவதற்கு கடவுள் ஒரு காரணியாகவே மக்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. பிரிந்து செல்வதற்கு சுயநலம், மற்றும் பொதுநலம் எனப் பலவிதமான காரணங்கள் இருந்தன. அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று   புறக்கணிக்கப்பட்ட  மக்கள் நலத்தை மீட்டுப் பெறுவதற்காக  எதிர்பார்ப்பில்லாத ஒரு பொதுநல முயற்சியில் தன்னைத் தானே ஈடுபடுத்திக்கொண்டு ,அந்த ஒரு காரணத்திற்க்காக மட்டுமே தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்பணித்துக் கொண்ட நல்லோர்கள்  மட்டுமே அவர்கள் மறைவிற்குப் பின்னர் கடவுளுக்கு நிகராக  மதிக்கப்பட்டார்கள் . பௌத்த மதம் உருவாவதற்குக் காரணமாயிருந்த கௌதம புத்தர் , சீக்கிய மதம் உருவாவதற்குக் காரணமாயிருந்த குருநானக் போன்ற மகான்கள் இந்த வரிசையில் வருகின்றார்கள்.    

பெரும்பாலான மனிதர்களின் ஒருமித்த கருத்திற்கு ஏற்ப அவ்வப்போது கடவுள்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டன.அதுவரை இயற்கையை கடவுளாக மதித்தவந்த மனிதர்கள்,  மனிதர்களால்  மனிதர்கள் ஆளப்படும் காலத்தில் மனிதர்களையே கடவுளாக்கிக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டனர் . அப்போது அதிகாரத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் காலத்தால் மறைந்து போயின  ஆனால் அன்பால் விளைந்த மாற்றங்கள் மட்டுமே நிலைத்து நின்று எங்கும் பரவின

இதிலிருந்து நாம் கடவுள் பற்றிய ஒரு பேருண்மையை அறிந்துகொள்ள முடிகின்றது. உருவமுள்ள எந்தக் கடவுளும் மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே உலகத்தால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட து . இன்றைக்கு கடவுளுக்கு மதத்தின் சாயம் பூசப்பட்டாலும்    உண்மையில் கடவுள் என்பது நிச்சியமாக மதங்களுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் கடவுள் ஒற்றுமையின் சின்னம், அது இயற்கை ஆனால்  மதமோ வேற்றுமைக்கு ஒரு  காரணியாக்கப்பட்ட கோட்பாடுகள் திணிக்கப்பட்ட  கொள்கை. இது செயற்கை.

 கடவுளால் படைக்கப்பட்ட மனிதனால் கடவுளாக முடியவில்லை . மனிதனால் படைக்கப்பட்ட கடவுளுக்கு உயிரூட்ட முடியவில்லை.  என்று சொல்வார்கள். மனிதன் முயன்றால் கடவுளுக்கு நிகராக ஆக முடியும், கடவுளாகவே இல்லை. அதுபோல   மனிதன் மனிதர்களைத் தான் கடவுளாக்க முடியுமே தவிர கடவுளையே அல்ல.கற்பனை.ப் படைப்பானால் அதற்கு அவனால் உயிரூட்ட  முடிவதில்லை.

ஆதாம் ஏவாளுக்கு யார் கடவுள். ? மனிதர்களுக்கு மட்டும்தான் கடவுளா இல்லை பிற உயிரினங்களுக்கும் கடவுள் உண்டா ? போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு விடை தேடினால் ஒரு சில உண்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. கடவுள் பெரும்பாலும் மனித வடிவில் தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது .எனவே நமக்குத் தெரிந்த அனைத்துக் கடவுள்களும் மனிதன் தோன்றிய பிறகுதான் தோன்றி வந்திருக்க வேண்டும் .கடவுள் மனிதனை விட எல்லா நிலையிலும் மேலானவர், ஆற்றல் மிக்கவர் என்பதை உணர்த்துவதற்காக உருவங்களில் இயற்கைக்கு மீறிய  சில மாற்றங்களை உட்புகுத்தியிருக்கின்றார்கள் . இயற்கையைத் தவிர இயற்கைக்கு மீறிய சக்தி படைத்த மனிதர்கள் இருக்க முடியாது. இது மனிதர்களால் படைக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துக் கடவுளுக்கும் பொருந்தும்.

                                                                                             கடவுளைப்  புரிந்து கொள்வோம் .......

No comments:

Post a Comment