Monday, August 17, 2020

God-4

 கடவுள் -4

 நம்முடைய கடவுள்கள் எல்லாம் எப்படி மெய்ப்பொருளற்ற கறபனைப் படைப்பாக மாறிவருகின்றதோ அது போலவே கடவுள் நமபிக்கையும்  போலித்தனமானதாக வளர்ந்து வருகின்றது. .இதை வேடிக்கை என்னவென்றால் கடவுள் நம்பிக்கை மட்டுமன்று , கடவுள் மறுப்பும் அவநம்பிக்கையும் கூட போலித்தனமாக இருப்பதுதான். .

கடவுளுக்கு காணிக்கை செலுத்துவோர் அதிகமாகி இருக்கின்றார்கள் . சிலர் கட்டுக் காட்டாக  உண்டியலில் பணத்தைப் போடுகின்றார்கள். சிலர் விலையுர்ந்த நகைகளை கடவுளுக்கு வழங்குகின்றார்கள். தங்கத் தேர் செய்து வள்ளல் போலக்   கொடுக்கின்றார்கள்.எந்த நற்பணியும் நற்பணிக்காகச் செய்யப்படாமல் தன் சுய கௌரவத்தையும் சுய மதிப்பையும் உயர்த்திக்கொள்வத ற்காகச் செய்யப்படுவதால் அங்கே கடவுள் காணாமற் போய்விடுகிறார், கடவுள் கொள்கையும் மறக்கப்படுகின்றது. பெரும்பாலும் மனிதர்களைப் பற்றிய விளம்பரமே மேலோங்கி இருக்கின்றது . உயிரற்ற சிலைவடிவான கடவுளிடம் காட்டப்படும் அந்தத் தாராள மனம் சக மனிதர்களிடம் காட்டப்படாதபோது அவர்களுடைய கடவுள் நம்பிக்கை போலியானது மட்டுமல்ல ,தவறானதுமாகும். உண்மையான கடவுள் நம்பிக்கை என்பது சுய ஒழுக்கத்தையும் , மனித நேயத்தை உள்நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும்.சாகாத சமுதாயத்தின் நலத்தைக் காப்பதாக இருக்க வேண்டும் , செய்யும் பாவங்களுக்கு சுயபரிகாரமாக இருக்கக் கூடாது..

கடவுள் மனிதர்களிடமிருந்து எதையும் கேட்பதில்லை. அதற்கு அவர்க்கு தேவையுமில்லை. கடவுள் மனிதர்களை விட ஆற்றல் மிக்கவர், பரந்த பிரபஞ்சத்தையே ஆள்பவர் என்பதால் மனிதர்கள்  தான் கடவுளிடமிருந்து தேவையிருக்கோ இல்லையோ எப்போது ம்   எதையாவது கேட்டுக் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறார்கள்  .தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிகொள்ளத் தேவையான கருவிகளை பிறக்கும் போதே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் பாகுபாடின்றி கொடுத்திருக்கின்றார் என்றாலும், அதையெல்லாம் பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் கடவுளிடம் இலவசம் கேட்கும் பழக்கம் மக்களிடையே மிகுந்து வருகின்றது .இப்படி யாசிக்கும் மனிதர்களுக்கு உழைத்துப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட உடலுறுப்புக்கள்  தேவையில்லாமல் போய்விடுகின்றன.          

, பால்குடம், தீச்சட்டி . பூ மிதித்தல் ,நடைப்பயணம் என ஆண்டுதோறும் கூடுதலான மக்கள் மேற்கொள்கிறார்கள் . சிறுவர்கள் கூட நேர்த்திக்கடன் என்று இதில் பங்கேற்பதில் விருப்பம்கொள்கின்றார்கள். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமில்லாமல் வாய்ப்புக்களை த் தட்டிக் கழிப்பவர்களே வேலையில்லாதவர்கள் பொழுதைக் கழிப்பதற்காகச் செய்யும் வெட்டி வேலை போல  இது வளர்ச்சி பெற்று வருகின்றது .இதனால் தனக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பும் கௌரவமும் கிடைப்பதாக எண்ணிக் கொள்கின்றார்கள் . உண்மையில் போலித்தனமான செயலுக்கு போலித்தனமாக வழங்கப்படும் தாற்காலியமான மதிப்பே இது என்பதை அவர்கள் அறிவதில்லை .

கோயில்கள் அதிகரித்துள்ளன,  நடைபாதைக்   கோயில்கள்  பல்கிப் பெருகியுள்ளன. பக்தர்கள்  , துறவிகள்,  தொண்டர்கள் ,     பெருகியுள்ளார்கள்  ஆன்மிகப் பயணம் விரிவடைந்துள்ளது. உண்டியல் வருமானம்  மிகுந்துள்ளது . கோயில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், உற்சவங்கள்  ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. இருந்தும் அதிக அளவிலான மக்கள் நலிவடைந்துள்ளார்கள்.வறுமை மிகுதியால் கடவுளிடம் முறையிடும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . சமுதாயத்தின் நலத்திற்காகத்தான்  கடவுளேயன்றி கடவுளுக்காகச் சமுதாயம் படைக்கப் படவில்லை என்பதை உணராத போது  கடவுளால் ஆதாயம் தேடுபவர்களும்,கடவுள் மறுப்பால் அந்த ஆதாயங்களைத் தட்டிப் பறிப்பவர்களும் சமுதாயத்தில் ஆதிக்கம் பெறவே செய்வார்கள் .

No comments:

Post a Comment