Friday, October 7, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

உலகின் சிறந்த முதல் 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில்
இந்தியப் பலகலைக் கழகம் ஒன்று கூட இடம்பெறவில்லை.
இது இந்தியர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை தரக் கூடிய
விஷயமே.பட்டியலைத் தயாரித்த குழு இந்தியப் பல்கலைக்
கழகத்தை தேர்வு செய்யாதது அவர்கள் குற்றமில்லை .
அதற்குத் தகுதியாக இல்லாததும் அதைப் பெறுவதற்கு முயற்சி
செய்யாததும் நம் குற்றமே .

பொதுவாக நாம் நம்மைப்பற்றி எப்போதும் மிகைப் பாடாகவே
மதிப்பிட்டுக் கொண்டுவிடுகிறோம் .நம்முடைய பேச்சில்
இருக்கும் வீரமும் விவேகமும் செயல்பாடுகளில் இருப்பதில்லை.
நாமே திறமையானவர்கள் என்றும் எதிரிகள் நம்மை விட
திறமைக் குறைவானவர்கள் என்றும் நாமாகவே கற்பனை
செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் .
நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக
இருக்கிறோம்.நம்மைக் குறைத்து மதிப்பிட நாம் தயாராக
இல்லாத போது இதை நாம் ஒருபோதும் உணர்வதுமில்லை .
இந்தியப் பலகலைக் கழகங்கள் ஏன் 200க்கு 1 மதிப்பெண் கூட
வாங்காமல் போனது ?

பொதுவாக கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிப் போனது.
அதனால் கல்விக் கூடங்கள் இலாப நோக்கிலேயே செயல்பட
துவங்கியுள்ளன. .இது ஒரு வளர்ச்சித் தடைக்கு காரணமாக
உள்ளது.

கல்விக் கூடங்களின் கட்டுமானம் மாணவர்களுக்கு போதிய
வசதி தரக் கூடியதாக இல்லை.மாணவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப வகுப்பறை இடவசதி ,நூலக வசதியோ, கழிவறை வசதி,
விளையாட்டு துறை வசதிகள் இல்லை.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருப்பதில்லை.
இருக்கும் ஆசிரியர்களும் கற்ப்பித்தல் தவிர்த்த பிற அலுவல்களில்
அதிகம் ஈடுபடுத்தப் படுகின்றார்கள் .

வகுப்புகளில் கணினி, LCD மூலம் presentation ,இன்டர்நெட் ,
மாணவர்கள் - ஆசிரியர் interaction ,question hour போன்றவை
பெரும்பாலும் இருப்பதில்லை.

செய்முறைப் பயிற்சி குறைவு. அதுவும் அவர்களின் செயலாற்றலை தூண்டுவதில்லை .

தங்கும் வசதி ,போக்கு வரத்து வசதி ,சுகாதாரமான சுற்றுச்
சூழல் போன்றவைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலேயே
இருக்கின்றன.

மாணவர்கள் கற்பதில் முழு அளவில் ஈடுபடவில்லை என்பது
ஒரு புறம் இருக்க ஆசிரியர்களும் முழு அளவில் கற்பித்தலில்
ஈடுபடுவதில்லை.எப்பொழுதும் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி
போராட்டம் என்று பணியைப் புறக்கணிப்பது.
இதனால் ஆசிரியர்களின் தகுதிப்பாடும் ஒரு கேள்விக்
குறியாகயுள்ளது

இவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள் .
அவர்களால் இன்னும் இந்தியப் பல்கலைக்
கலகங்கள் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில்
உலகத் தரமான ஒரு மாதிரிப் பலகலைக் கழகத்தை
உருவாக்க முன் வரலாமே . ஏனெனில் இது அவர்களால் தான்
முடியும் .தரமான கல்விக்கு உத்தரவாதம் இருந்தால்
கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனையே இல்லை.

1 comment:

  1. ஒரு சின்ன திருத்தம் சார், இருக்கும் பல்கலைக்கழகங்களை மேம்பாடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி இங்கிருப்போரும் முனைவோமேயானால் நிச்சயம் நம் பல்கலைக்கழகங்களும் சிறக்கும். மேலும் இது வெறும் ஆசிரியர்கள், அரசு,மக்கள் செயல்பாடுகளில் மேம்பட போவதில்லை, இதில் மாணவர்களின் பங்கு தான் மிக முக்கியம். அது மேம்பட்டால் ஒழிய பல்கலைக்கழகங்கள் சிறக்க வேறு வழியில்லை. இன்னும் இதனை விரிவாக அலசி ஆராய விரும்புகிறேன். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில். உங்கள் மாணவன் என்ற அடிப்படையில், சில கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    ReplyDelete