Wednesday, December 7, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-8 

அரசியல்வாதிகள் எதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அதை அதற்காகவே பயன்படுத்தப்படுவதேயில்லை. மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள், தவறுகள் செய்வதற்கு கொடுக்கப்படும் அனுமதியாகக் கருதுகின்றார்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கும்  அதிகாரத்தையே ஒரு கேடையமாகக் கொள்கின்றார்கள்  இதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான ஜனநாயக அமைப்பு ஜனநாயகத்தில் இல்லை..அப்படியொரு அமைப்பை நல்லோர் ஒருவர் முயன்றால் அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதில்லை ,அரசியல்வாதிகளும் தங்கள் அதிகாரத்தால் அதன் வளர்ச்சியைத்  தடுத்து நிறுத்திவிடுகின்றார்கள்  தீயவர்களைத் கட்டுப்படுத்தி  தீமைகளைத் தடுக்கக் கொடுக்கப்பட்ட அதிகாரம் வேண்டாத தீயவர்கள் பாதிக்கப்படவும் வேண்டிய தீயவர்கள் பாதுகாப்பாய் இருக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது இதனால் வேண்டாத நல்லவர்கள் தீயவர்களாக்கப்படுவதும் ,வேண்டிய தீயவர்கள் நல்லவர்களாக்கப்படுவதும் சட்டத்தையும் ஏமாற்றி வளர்ந்து சமுதாயத்தில்  எதிர்மறையான இழப்புக்களை   ஏற்படுத்து கின்றன   மறைவொழுக்கத்தால் தவறுகள் செய்வதற்கும், தீயோர்களின் கூட்டணியுடன் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் துணிவு கொள்கின்றார்கள் . கூட்டணி அவர்களுக்கு தைரியத்தையும் ,சமூகப்  பாதுகாப்பையும் தருகின்றது உழைப்பின்றிக் கிடைக்கும் பொருளைக் கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகின்றார்கள். கூட்டணியையும் சொந்தச் செலவின்றி தக்கவைத்துக் கொள்கின்றார்கள். பதவியால் தவறுகள் செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களுக்கு பொருளும் உயர் பதவியும் கொடுத்து கைப்பாவையாக வைத்திருப்பார்கள் . எதிராகச் செயல்படுபவர்களை அதிகராத்தல் பணி இடமாற்றம் , உயர்பதவி மறுப்பு ,அரசின் சலுகைகள் குறைப்பு போன்ற வற்றால் அச்சப்படுத்துவார்கள்

No comments:

Post a Comment