Thursday, December 29, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 விளை பொருட்களுக்கு இயல்பாக நல்ல விலை இருக்குமாறு செய்ய அவற்றின் விலையை தன்னிச்சையாக உயர்த்திவிடமுடியாது .மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருக்கும் போது விலை உயர்த்தப்பட்ட விளை பொருட்கள் வாங்கப்படாமல் வீணாகி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது .மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க ,அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கலாம் .சம்பளத்தை அதிகரித்தால் ,திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லி  வீண் செலவுகளால் பற்றாக்குறையை மிகைப்படுத்தி விடுகின்றார்கள் .அரசாங்கத்தின் நிதி இவர்களால் எடுத்துக்கொள்ளப்படும் போது ,அது சுமுதாயத்திற்குப் பயன்படாமல் முடங்கிவிடுகின்றது ..நிதி இருந்தும் இல்லாத தோற்றத்தையே அது ஏற்படுத்துகின்றது .மக்களிடம் பணம் தாராளமாக இருக்கும் போது ,அது வர்த்தகத்தின் மூலம்  பொருள் உற்பத்தியாளர்களிடமும் ,உற்பத்தியாளர்களிடமிருந்து ,தொழிலாளர்களிடமும் , கூடுதல் வரி மூலம் அரசாங்கத்திற்கும்  பணம் ஒரு வட்டச் சுற்று முறையில் தொடர்ந்து தடையின்றி நடைபெறுகின்றது. இது உடலில் ஏற்படும் இரத்தவோட்டம் போல , பூமியில் ஏற்படும் இரவு பகல் போல, .பெய்யும் மழை போல. .இயற்கையில் எது வட்டச் சுற்று முறையில் நிகழ்கின்றதோ அது நிலையானது  மட்டுமின்றி பயனுறு திறன் மிக்கதுமாகும் .நம்முடைய பொருளாதார நிபுணர்கள் சரியான யோசனைகளை தன்னலமிக்க ஆட்சியாளர்களுக்குச் சொல்லி  நாட்டின் நலனைப் பாதுகாக்கவேண்டும் .இதனால் அவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ,நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் அதே நன்மைகள் கிடைக்கும் .

No comments:

Post a Comment