Friday, December 30, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஆள விரும்பும் ஒருவன் அரசியலைப் பற்றி ஏதும் தெரியாமலே அரசியல்வாதியாகத் தன்னை தானே தேர்வு செய்து கொள்கின்றான். அவனுடைய விருப்பத்திற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது  ஏற்கனவே அரசியலில் சேர்ந்தவர்கள் எந்தத் தகுதியுமில்லாமல் பதவியும் ,அதன்மூலம் குறுகிய காலத்தில் அளவில்லாத பொருளும் சம்பாதித்து மேநிலையில் இருப்பது தான் .அவர்களைப்போல தாங்களும் சமுதாயத்தில்  முன்னேறிவிடவேண்டும் என்ற ஆசை உள்ளுறும் ஓர் உந்துசக்தியாக அமைந்துவிடுகின்றது. ஆனால் ஒருவரால் அரசியலில் இணைந்து உடனடியாக உயர்த்த பதவியைப் பெற்றுவிடமுடியாது..ஏனெனில் அவருக்கு முன்பாகவே பலர் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் சாகும் வரை பதவியை விட்டுக்கொடுப்பதே யில்லை .அவர்கள் கட்சித் தலைவருக்கு இணங்கித் தொடர்ந்து வேலை புரிந்து வருவதால் ,புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. அவர்கள் பெரும் பாலும் தொண்டர்களாகவும், வட்டாரச் செயலாளர்களாகவும் மட்டுமே வளர்வார்கள் சில சமயங்களில் உள்ளாட்சிப் பொறுப்பு வெகுமதியாகக்  கிடைக்கும் .பொதுத் தேர்தலின் போது கட்சிக் கூட்டங்களில் பங்கேற்றும் ,பரப்புரை,நோட்டீஸ் விநியோகம் செய்தும்  ஆளுங் கட்சியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சிலருக்கு ஆதரவாய்ப் பேசியும்  .எதிர்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தும் ,அதை மக்கள் அறியுமாறு விளம்பரப்படுத்தியும் மூத்த உறுப்பினர்களின் நன்மதிப் பைப் பெறுகின்றான்   .உறுப்பினராக இருந்த அவன் செயலாளராகக் கட்சியில் பதவி உயர்வுக்கு இது வழி வகுக்கின்றது

 

No comments:

Post a Comment