Sunday, December 25, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

தொழில் துறையில் முன்னணி நாடாக்கிக் காட்டுகின்றேன் என்றும் மாநிலமாக்கிக் காட்டுகின்றேன் என்றும்  பல ஆட்சியாளர்கள் வெளிநாட்டி லிருந்து முதலீட்டாளர்களை வரவழைத்து சில நாட்கள் அரசாங்கச் செலவில் கருத்தரங்கம் நடந்துவார்கள் .இதன் மூலம் நாட்டிற்குப்  பல இழப்புக்களே ஏற்படுகின்றது . முதலில் தொழில் தொடங்கவரும் வெளிநாட்டினருக்கு அளவில்லாத சலுகைகள் கொடுப்பதின் மூலம் நம் வளர்ச்சியில்  ஒரு பகுதியை முன் கூட்டியே அடகுவைத்து விடுகின்றோம் .நம்முடைய கனிம வளத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி ஆதாயத்தில் பெரும்பகுதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்க்குடன் கூட்டுச் சேர்ந்து எழுதப்படாத ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்களும் அவர்களுடைய கணக்குக் காட்டமுடியாத பணத்தை முதலீடு செய்ய எது சரியான தொழில் என்பதை இந்த ஆலோசனைக்கு கூட்டம் மூலம் முடிவு செய்கின்றார்கள் .வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளவும்  , எதிர்காலத்தில் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பலமுறை வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி சில தொழில்கள் தொடங்கப்பட்டாலும் அதனால் நாடு சரியான முறையில் வளர்ச்சி பெறவில்லை. மாறாக ஆட்சியாளர்கள் மட்டுமே முன்னேறியிருக்கின்றார்கள் ..ஒரே உழைப்பிற்கு வெளிநாட்டினர் அதிக ஊதியமும் இந்தியர்கள் குறைந்த ஊதியமும் பெறுவதும், இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ளப்படாத கனிமவளத்தை குறைந்த செலவில் பெற்று பயன்படுத்திக்கொள்ளவும், உற்பத்தியில் பெரும்பகுதியை மக்கள் தொகை மிக்க இந்தியாவில் எளிதில் சந்தைப்படுத்தவும் , இந்தியாவில் விற்பனை செய்யமுடியாத விலையுயர்ந்த பொருட்களை குறைந்த செலவு மற்றும் வரிகளுடன் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இங்கு தொழில் தொடங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது இதனால் இந்தியாவில் தொலாளிகள் கிடைக்கின்றார்கள் ஆனால் முதலீட்டாளர்கள் ,தொழில் முனைவோர்கள் கிடைப்பதில்லை .இந்தியர்களில் கல்வி ,உழைப்பு ,அனைத்தும் அவர்களுடைய சொந்த நாட்டிருக்கே பயன்தரவேண்டும். இந்தியர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொழில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெறுமாறு செய்து  இந்தியாவில் தொழில் தொடங்க முயற்சி மேற் கொள்ள வேண்டும். இதனால் இந்தியாவில் நிரந்தரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். இது கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சியை நிலைப்படுத்தும். இந்தியக் குடிமக்களின் மதிப்பும் .இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்த்தும் .இந்தக்கனவு நிஜமாக வேண்டுமானால் ,இந்தியாவிற்கு அப்துல் கலாம் போன்ற கொளகைப்பிடிப்புடன் கூடிய தகுதியான தலைவர்கள், தலைவர்களுக்குச் சரியாக வழிகாட்டலும் ஒத்துழைப்பும் தரக்கூடிய துணைவர்களும்  வேண்டும்           

No comments:

Post a Comment