Wednesday, December 21, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

உலகில் இந்தியா பல மதங்கள்,பல இனங்களைச் சேர்ந்தவர்களும்  ,பல மொழிகள் பேசுபவர்களும் ஒற்றுமையாக வாழும் ஒரே நாடு  அதனால் அரசியல்வாதிகளுக்கு அரசியலோடு  மதம் ,இனம் மொழி பற்றிய தெளிவான அறிவு அவசியம். மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதனால் அரசியல் வாதிகளுக்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் .அப்பொழுது தான் நாட்டின் பல பகுதிகளில் .வாழும் மக்களின் தேவைகளையும் மனநிலை யையும் புரிந்துகொண்டு சேவையாற்றமுடியும். அடசியல்வாதிகளுக்கு நாட்டின் இறையாண்மை பற்றிய அறிவு அவசியம்.  நாட்டு மக்களின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு பணியாற்ற இது முக்கியம்  .ஒரு அரசியல்வாதிக்கு ஒரே யொரு மொழி மட்டுமே தெரிந்திருக்குமானால் அவர் ஓராண்டு காலத்திற் குள் மற்றொரு    மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இல்லை யென்றால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும்

 

          ஒரே  அரசியல்வாதி ஒரேசமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிக்கும் வாய்ப்பை அளிக்கக்கூடாது .மனிதவளம்மிக்க நாட்டில் ஆட்களுக்குப் பற்றாக் குறை இல்லை. ஜனநாயக  நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்கள் தலைவனாகவே ஆகலாம் என்று சொல்லப்பட்டாலும் அரசியலில் வருவாய்த் துறைகளை ஒரு சிலர் மட்டுமே தங்கள் ஆளுமைக்குள் வைத்துக்கொள் கின்றார்கள் . இந்த மனப்போக்கு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கு அனுகூல மிக்கதாக இருக்கின்றது. மக்கள் தவறு செய்யாமலிருக்க அரசாங்க அமைப்புக்கள் இருப்பதைப்பைபோல அரசியலவாதிகள் தவறு செய்யாமலிருக்க மக்கள் அமைப்புக்கள் இருக்கவேண்டும். அரசாங்க அமைப்புக்களை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளையே அவை கண்காணிப்பதுமில்லை தண்டிப்பதுமில்லை .

No comments:

Post a Comment