Friday, December 9, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-10 

           ஆட்சியாளர்கள் மக்கள் குற்றம் புரியாமல் இருக்க அரசாங்கத்தின் பொது அமைப்புக் களை ப் பயன்படுத்துகின்றார்கள் என்று சொல்வதை விட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களே ஏற்படுத்திக்கொண்ட அமைப்பை  மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்பதற்காக நிலைத்திருக்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக் கின்றார்கள். மக்களைக் குற்றம் புரிய அச்சப்படுத்தும் இந்த அமைப்புக்கள் ஆட்சியாளர்கள் தங்களுடைய  தவறான செயல்பாடுகளை மட்டுப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகைகளைக் கூடுதலாக அளித்தும், ,உயர்பதவியை வழங்கியும்,  மறைபொருளைக் கொடுத்தும்அவர்களே குற்றவாளியாகும் பொழுது அதிலிருந்து அவர்களை விடுவித்தும், அவர்களும ஊழல் புரிவதற்கான வாய்ப்புக்களை பிரகாசப்படுத்தியும் போன்ற இன்ன பிற செயல்களைச் செய்கின்றார்கள். குற்றம்புரிபவன் ஒரு சாதாரணக் குடிமகனாக இருக்கும் போது சரியான ஆதாரமில்லாமல் வெறும் வாய்மொழிக் குற்றச்சாட்டிற்கே  நிரூபிக்கப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே சொல் லொண்ணா தாக்குதலுக்கு உள்ளாகிறான். சில சமயங்களில் உயிரிழப்பும் ,உடல் ஊணமும் ஏற்படுகின்றது.. குற்றங்களை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த அம்மைப்புக்கள்  அதே குற்றத்தைப்  புரிந்து தண்டித்துவிட்டதாகக்   கூறுவதால் குற்றங்கள் தடுக்கப் படுவதில்லை. தவறான வழிமுறைகளால் குற்றங்கள் தடுக்கப்படும் போது அவை தொடந்து பெருகவே வாய்ப்பிருக்கின்றது. இதனால் அரசும் அரசாங்கமும்  மறைவொழுக்கமாகக்  குற்றச்செயல் களைச் செய்வதை வழக்கமாய்க் கொண்டுள்ளன .சாதாரணக் குடிமக்கள் செய்யும் குற்றங்களைத் தடுக்கும் எந்த பொது அமைப்பும் அரசாங்கம் செய்யும் குற்றங்களைத் தடுக்க ஒரு சிறு முயற்சிகூட எடுத்துக்கொள்வதேயில்லை. உண்மையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் நேர்மையன்னவர்கள் இல்லை. பதவியால் ஊழல் செய்வதற்காகவே பணம் செலவழிக்கிறார்கள் . ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்களுக்காக சேவை செய்ய யாரவது சண்டை போட்டுக்கொள்வார்களா. குற்றவாளிகளாலும் , குற்றம் புரிந்த ஆரசியல் வாதிகளாலும் தங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக பெரும்பாலான பாதுகாவலர்கள்  கடமை தவறிவிடுகிறார்கள். .உண்மையில் இதை எந்தவொரு தனி மனிதராலும் ,அமைப்பாலும் நிரூபிக்கவே முடியாது. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும் . அரசாங்கத்தில் நேர்மையானவர்கள் சங்கமித்தல் மட்டுமே இது நிகழும் . இப்படிப்பட்ட நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்குநாள் அருகிக்கொண்டே வருவது இருக்கும் ஒரு சில நல்லோரர்களை அச்சமூட்டிவருகின்றது

 

No comments:

Post a Comment