Wednesday, October 11, 2023

 என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

.

 

தலைப்பு : என் புத்தகங்கள் என் வாழ்க்கை

வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு  October 2023

பதிவு எண் ASIN 80CKPNSKLK

மொழி : தமிழ்

கருப்பொருள்: எழுத்தாளரின் நினைவலைகள்   

பக்கங்கள் 92 விலை 2 USD

 

இதுநாள் வரை நான் எழுதி வெளியிட்ட 77 தமிழ் மற்றும் 7 ஆங்கில நூல்களைப் பற்றிய குறிப்புடன் என் வாழ்க்கையின்  படைப்பாற்றலை  இந்நூல் தெரிவிக்கின்றது. தமிழ் தாய்க்கு என்னால் இயன்ற காணிக்கையை செலுத்திவிட்டோம் என்ற பரிபூரண மனத் திருப்தி இன்னும் எழுத வேண்டும் என்ற பேராசை இருக்கின்றது . இறைவனின் அருள் இருந்தால் எழுதுவேன் .எழுதிக்கொண்டே இருப்பேன்.

 

Tuesday, October 10, 2023

 எண்ண எண்ண மலரும் வண்ண வண்ண எண்ணங்கள்

 

 

 தலைப்பு : எண்ண எண்ண மலரும் வண்ண வண்ண எண்ணங்கள்

வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு  2023

பதிவு எண் ASIN

மொழி : தமிழ்

கருப்பொருள்: நன்னெறிகள் ,இனிய இல்வாழ்க்கை     

பக்கங்கள் விலை 5 USD

       இது போன்ற செய்திகளை நான் ஏற்கனவே பொன்மொழிச் சிந்தனைகள் என்ற நூலாகவும்  திருமண விழாவில் விழா மலர்களாகவும் வெளியிட்டுள்ளேன். அவையாவும் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும் பின்னர் சேகரித்த  புதியபுதிய பொன்மொழிகளையும் இணைத்து இந்நூல்களை முழுமைப்படுத்தி ஒரே  நூலாக  எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து இத்தருணத்தில் தொகுத்து முடித்தேன் மகிழ்ச்சிகரமான சமுகாய வாழக்கையோடு இனிய ,  இயல் வாழ்க்கைகுத் தேவையான சுயவொழுக்கம் , அற நெறிகளை பல்வேறு தலைப்புக்களில் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தில் உற்சாகம் தரக்கூடிய நன்மொழிகளை  இந்நூல் கூறுகின்றது  .ஒவ்வொரு பொன்மொழியும் சிந்தையைத் தூண்டி எண்ணத்தையும் செயலையும் ஒருசேர செம்மைப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில் இந்த நூலை முழுமைப்படுத்தி எழுதவேண்டும் என்ற முயற்சியில் எழுதினேன் உதவுகின்றது  கடவுள்,இயற்கை ,சமுதாயம், வாழ்க்கை மனம் , கடமை ,நம்பிக்கை ,கடமை முயற்சி வெற்றி ,அன்பு நட்பு  போன்று 20 தலைப்புக்களில் பொன்மொழிகளின் கருத்துக் குவியலாக உள்ளது.

       மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாத எதுவும் செயலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது சிந்தனையைத் தீண்டும் எண்ணங்களை புரிந்து கொள்வதால் ஏற்படுவதாகும் .புரிதல் என்பது சட்டென வந்துவிடுவதில்லை. சிலருக்கு சில நிமிடங்களில் வேறு சிலருக்கு பல் ஆண்டுகளில் பலருக்கு வருவதுமில்லை. அடிக்கடி இது போன்ற அறிவுரைகளைப் படிக்கும் போது புரிதல் தூண்டப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது

 

எண்களோடு விளையாடுவோம் - 2 பிதகோரஸ் எண்கள்

 


தலைப்பு : எண்களோடு விளையாடுவோம் - 2 பிதகோரஸ் எண்கள்

வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு  2023

பதிவு எண் ASIN

மொழி : தமிழ்

கருப்பொருள்: கணிதம்   

பக்கங்கள் விலை 3 USD

                2007 ல் அமெரிக்க சென்ற போது அங்கு நூலகங்கள் மூலம்  பொழுதுபோக்குக் கணிதம் பற்றி அதிகம் படித்தேன்.நான் இந்தியா திரும்பியவுடன் நான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த  பொழுதுபோக்குக் கணிதம் பற்றிய விஷயங்களையும் ஒன்று கலந்து நான்கு நூல்களை  தமிழில் எழுதினேன் பின்னர் அவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வைத்துக்கொண்டேன்.அவற்றை இந்திய கணித ஆசிரியர்கள் சங்கம் முன்வராததால் நீண்ட காலம்  வெளியிடாமல் வைத்திருந்தேன். கோவிலூர் ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளிடம் ஒருமுறை வெளியிட வேண்டி அந்த நான்கு நூல்களையும் கொடுத்தேன். அது வெளியிடப்படவும் இல்லை அதன் நிலை தெரிவிக்கப்படவும் இல்லை.. இதில் எண்கள் பற்றிய ஒரு நூலை கணித மேதையாக எண்களோடு விளையாடுவோம் -1 எண்கள் என்ற தலைப்பிலும் மற்றொரு நூலை ,Fun with numbers - prime numbers என்ற தலைப்பிலும் அமேசான் KDP மூலம் சுய வெளியீடாக வெளியிட்டேன் இதுவரை வெளியிடாமல் கையில் வைத்திருந்த பிதகோரஸ் எண்கள் பற்றிய தொகுப்பை ,கணித மேதையாவோம்  எண்ணி விளையாட எண்கள் -2 .பிதகோரஸ் எண்கள் என்ற தலைப்பில் எழுதிய தற்பொழுது அமேசான் KDP மூலம் வெளியிட்டுளேன் 

 விண்  இயற்பியலின் சில அம்சங்கள்

 


தலைப்பு :: விண்ணியற்பியலின் சில அம்சங்கள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை

ஆண்டு  முதற் பதிப்பு டிசம்பர் 2008

பதிவு எண்A 139

மொழி  தமிழ்

கருப்பொருள்: விண்ணியற்பியல் 

பக்கங்கள்: 132 விலை: Rs.60

 

        

 

தலைப்பு :: விண் இயற்பியலின் சில அம்சங்கள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை

ஆண்டு : இரண்டாம் பாதிப்பு செப்டம்பர் 2011

                   மூன்றாம் பதிப்பு ஜுலை 2013

பதிவு எண் ISBN 978-93-8089-210-1

மொழி  தமிழ்

கருப்பொருள்: விண்ணியற்பியல் ;

பக்கங்கள்:132 விலை: Rs.90

 

     இயற்பியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டதால் விண்ணியற்பியலில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்தது. தொடக்கத்தில் பூமி மற்றும் சூரியக் குடும்பத்தைச் சுற்றி வந்த ஆர்வம்  அருகாமையிலுள்ள விண்மீன்கள் , பால்வளி மண்டலம், அண்ட்ரோமெடா அண்டம் என எல்லையை விரித்துக் கொண்டே சென்றது .விண்ணியற்பியலில் எனக்கு ஆர்வம் ஏற்பட வேறு சில காரணங்களும் இருந்தன. முதலாவது மதுரை அமெரிக்கன் கல்லூரியில்  சார்புக் கொள்கையும் அண்டவியலும் என்ற தலைப்பில் 1984 ல் நடந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டது அப்போது முதன் முதலாகத் துறை வல்லுனர்களின் அறிவார்ந்த சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சில நூல்களை அன்பளிப்பாகப் பெற்றேன். இரண்டாவது நான் அமெரிக்காவில் மகனுடன் தங்கியிருந்த போது நூலகங்களில் படித்து சேகரித்த புள்ளிவிவரங்கள்.

இந்தப் புள்ளிவிவரகளைத் தொகுத்து நூலாக எழுதிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  இந்நூலை எழுதி நிறைவு செய்து கொண்டேன் . உண்மையில் நூல்வடிவம் பெறாத வேறு சில விவரங்கள் இன்னும் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன .

     விண்ணியற்பியலில் சொல்லப்படும் கருத்துக்களை  கணிதவியற் சமன்பாடு களைத் தீர்வு செய்து சரிபார்ப்பேன். அந்தப்பழக்கத்தால் அறிந்து கொண்ட விஷயங்களையே இந்நூலில் எழுதியுள்ளேன் .பூமியின் ஆரம் . சுற்று வேகம் , சுற்றுங் காலம் ,நிறை, பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு போன்றவற்றை மதிப்பிட்டறியும் வழிமுறையைத் தெரிவித்துள்ளேன் .சூரிய மண்டலத்தின் எல்லை ,ஒரு விண்ணுறுப்பின் விடுபடு வேகம், விண்மீனின் ஆற்றல் மூலம், ,விண்மீன்களின் ஒளிப்பொலிவெண், ,தொலைவு, விட்டம், நிறை, வெப்பநிலை போன்றவற்றை கணக்கிடும் வழிமுறையம் விவரித்துள்ளேன்ஒரு விண்ணுறுப்பின் இயற்பியல் பண்புகளை மதிப்பிட்டறியும் வழிமுறையைத் தெ ளிவாக விளக்கிக் கூறுவதால் இந்நூல் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பதிப்பிற்குப் பிறகு எத்துணை பதிப்புக்களை வெளியிட்டார்கள் என்ற விவரம் எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை,இதற்குத்  தமிழக அரசு சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கு வழங்கவேண்டிய பரிசைக் கொடுக்கத் தவறிவிட்டது . 

 

 

                  -

   

1984 ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சார்புக்கொள்கையும் அண்டவியலும் என்ற தலைப்பில் நிகழ்ந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இது உண்மையில் எனக்கு அண்டவியலில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது