Friday, October 6, 2023

உறைம இயற்பியல் - I

 

 தலைப்பு : உறைம இயற்பியல் - I

வெளியீட்டாளர் : தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

ஆண்டு 2011

பதிவு எண்

மொழி : தமிழ்

கருப்பொருள் திண்மப் பொருள் இயற்பியல்

பக்கங்கள்284 விலை. Rs.74

 .உறைம இயற்பியல் –II

 


 தலைப்பு  : உறைம இயற்பியல் -II

வெளியீட்டாளர் : தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

ஆண்டு 2011

மொழி : தமிழ்

கருப்பொருள் திண்மப் பொருளியல்

பக்கங்கள் 412  விலை 98

         நான் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்த போது அழகப்பா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக முனைவர் இரா.சபேசன் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்றபோது எனக்கு ஆசிரியராகவும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகவும் இருந்தவர் .என்னுடைய அறிவியல் தமிழில் எழுத்தாற்றலைப் பற்றி நான்கு அறிந்தவர் .2009 ல் தமிழ்நாடு மாநில உயர் கலவி மன்றம் மூதறிவியல் பாடதிட்டத்திற்கான நூல்களைத் தமிழில் எழுதும் முயற்சியில் இறங்கியது . சபேசன் அவர்கள் தலைமையில் ஒரு குழு இயற்பியல் பிரிவிற்கு அமைக்கப்பட்டது  அவர்களும் நானும் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றிருந்தாலும் என்னுடைய படைப்பாற்றலை தெரிந்த சபேசன் அவர்கள் நூல் எழுதும் வாய்ப்பை எனக்கு அளிக்கத் தவறவில்லை உறைம இயற்பியல் condensed matter Physics என்ற படத்திற்கான நூல் எழுத்து வாய்ப்பு எனக்குக்  கொடுக்கப்பட்டது    நான் இராஜா சரபோஜி அரசுக் கல்லூரியில் 10 ஆண்டுகள் PG மாணவர்களுக்கு பாடம் நடத்தினேன் . அழகப்பா கல்லூரி அழகப்பா பல்கலைக் கழகமாக அமைக்கப்பட்ட போது மூதறிவியல் பிரிவை மட்டும் இணைத்துக்கொண்டு இளமறிவியல் பிரிவுகளை மட்டும் அரசு கலைக் கல்லூரியாக மாற்றினார்கள். நான் இங்கு மாற்றலாகி வந்த பிறகு முதல் வேலையாக மீண்டும் அரசுக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில்  M.Sc    கொண்டு வந்தேன் அதற்கு அழகப்பா பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தராக்க இருந்த P.ராமசாமி அவர்கள் ஆதரவு தந்தார்கள் .நான் பல ஆண்டுகள் மூதறிவியல் மாணவர்களுக்கு பல பாடங்களை நடத்திய அனுபவம் இருந்ததால் உறைம இயற்பியல் என்ற நூலை மிகக் குறுகிய காலத்தில் எழுதி முடித்தேன்  இந்நூலை சபேசன் அவர்கள் சரிபார்த்து திருத்தம் செய்தார்கள் .இந்நூல் இரு பகுதிகளாக 2011 ல் வெளியிடப்பட்டது அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல், ஒளியியல் , மின் காந்தக் கொள்கை, வெப்ப இயக்கவியல் போன்ற தலைப்புக்களில் மூதறிவியல் பாடத்திட்டத்தில் நூல்கள் எழுதவேண்டும் என்ற ஆசை..அதற்கான வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை

          பொதுவாக எந்த அமைப்பும் அறிவியல் தமிழின் வளர்ச்சியை அறிவியல் தமிழுக்காகச் செய்வதில்லை. வளர்ச்சி என்பது தேவையோடு தொடர்புடையயதாக இருந்தால் மட்டுமே அது மக்களுக்குப் பயன்தரும் .அடுத்த கட்டத்தை நோக்கி விரிவடையும் .மாணவர்களிடம் அறிவியல் தமிழின் தேவையை ஏற்படுத்தாமல்  திட்டம் தீட்டி அதற்காகச் செலவு செய்வதால் மட்டும் அறிவியல் தமிழ் வளம் பெறுவதில்லை. இப்படி ஆக்கப்படும் நூல்கள் எல்லாம் பரணியில் கேட்பாரற்று கிடக்கின்றன . யாரும் தேடுவதில்லை. வேலை வாய்ப்பு திறமையின் அடிப்படை யிலும் , திறமை கல்வியில் புரிதலின் காரணமாகப் பெறும் உரிமையாலும் புரிதல் தாய் மொழிக்கு கல்வியாலும் இருப்பதால் கல்வி-வேலைவாய்ய்ப்புக்கும் உள்ள தொடர்பை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்

           விற்பனையாகாத புத்தகங்களை யாரும் அச்சிட்டு வெளியிட விரும்புவதில்லை .விற்பனையை அதிகரிக்க அப்பொருளின் மீது தேவையும் சுய விருப்பமும் ஏற்படுமாறான சூழலை த் தூண்ட வேண்டும் .இதற்கு விளம்பரமும் விளக்கவுரையும் பயன்தரும் .இந்த நூல்களை ஒரு சிற்றுந்து வண்டியில் எடுத்துக்கொண்டு மூதறிவியல் பாடம் நடத்தும் அரசுக் கல்லூரிகளில் புத்தகக் காட்சி நடத்தலாம். பொதுவாக வகுப்பு தொடங்கும் நாட்களில் இந்த புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்வது பலன்தரும்

 


No comments:

Post a Comment