Wednesday, October 4, 2023

.கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் (Methods in terminology)      

                             

                                 

     

 

தலைப்பு : கலைச் சொல்லாக்க நெறிமுறைகள்

வெளியீட்டாளர்: அழகப்பா அரசு கலைக் கல்லூரி

ஆண்டு : ஜனவரி 2003

மொழி: தமிழ்  

கருப்பொருள்அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்  தொகுப்பு நூல் )

பக்கங்கள் 171:  விலை குறிப்பிடப்படவில்லை. 

      அறிவியல் தமிழ் எனக்குப் படிக்கும் காலத்திலிருந்தே அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன் ..இது இன்றைக்கும் மங்காது பொங்கி வளர்ந்து வருகின்றது . 1972 ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை நடத்திய ஒரு அறிவியல் ஆய்வரங்கத்தில் கட்டுரை சமர்பித்து கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமான கொஞ்ச நாளிலேயே கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நானும் என் மனைவியும் அலகாபாத் சென்று கருத்தரங்கத்தில் கலந்து கொண்டுவிட்டு ,காசி சென்று காசி விஸ்வநாதரை த் தரிசித்தோம் . அதன் பிறகு நான் அதிகம் ஆய்வரங்கங்களில் கலந்து கொண்டதில்லை. காரைக்குடிக்கு மாற்றலாகி வந்தபின் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் மைய மின் வேதியியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய  கருத்தரங்கங்களில் பலவற்றில் தமிழில் ஆய்வுரைகளைச் சமர்பித்து கலந்துகொண்டேன் . அப்போது நானும் பல்கலைக் கழக நல்கைக் குழுவின் நிதி உதவியுடன் ஒரு ஆய்வங்கம் நிகழ்த்த வேண்டும் என்று விருப்பம் நீறு பூத்த நெருப்பாக என் நெஞ்சிற்குள் இருந்தது. அறிவியல் தமிழில் தொடர்ந்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வந்ததால் ,அதே தலைப்பில் ஒரு கருத்தரங்கம்  நடத்தினால் என்ன என்ற எண்ணம் என்னிடம் வலுத்தது . ஏற்கனவே ஒரு மாணவர் அறிவியல் தமிழில் என்னிடம் ஆராய்ச்சி செய்து வந்ததால் அந்த முயற்சி எனக்கு எளிமையாகவே இருந்தது. அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்த சொ.சுப்ரமணியக்கவிராயர் எனக்கு உறுதுணையாக இருந்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில். பல்கலைக் கழக நல்கை க் குழுவின் நிதி உதவியுடன்   கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் என்ற தலைப்பில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி விளாகத்தில்  2 நாட்கள் இந்த கருத்தரங்கம் நடந்தது . முதல் நாள் கருத்தரங்கம் முடிந்தவுடன்  கட்டுரையாளர்கள் அனைவரையும் காரைக்குடிக்கு அருகாமை யிலுள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்றது மன மகிழ்ச்சியைத் தந்தது . இந்த ஆய்வரங்கத்தில் என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் இரண்டுடன் மொத்தம் 16 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பொன்னம்பல அடிகளார் நிதியுதவியடன் சொல்லாக்க நெறிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நூலாகஅழகப்பா அரசு கலைக் கல்லூரியின் ஒரு வெளிஈடாக  வெளியிடப்பட்டது .இந்நூலுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருப்பது நூலின் சிறப்பாகும் .இதில் இறைவணக்கம் அறிவியல் இறைவணக்கமாக கூறப்பட்டுள்ளது அதன் சிறப்பிற்கு மற்றொரு காணரமாகும். இந்நூலை  வள்ளல்  அழகப்பச் செட்டியார் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி தனது நன்றிக் கடனைத் தீர்த்துக்கொண்டுள்ளது      

No comments:

Post a Comment