Friday, October 6, 2023

The Amazing world of numbers

 


தலைப்பு :The Amazing world of number

வெளியீட்டாளர்: தாமரைப் பதிப்பகம் ( மணிவாசகர் பதிப்பகம்) சென்னை  

ஆண்டு டிசம்பர்  2009

மொழி ஆங்கிலம்

கருப்பொருள் எண்கள் கணிதம்

பக்கங்கள் 192 விலைRs.60          

          நான் ஆங்கிலத்தில்  அதிகம் நூல்கள் எழுதியதில்லை.பாடத் திட்டத்தில் அதுவரை இரண்டு ஆங்கில நூல்களை மட்டுமே எழுதியிருந்தேன் .பொது அறிவியல் தலைப்பில் எதாவது நூல் எழுத வேண்டும் என்று நடித்த போது எனக்கு மிகவும் பிடித்த மற்றும் பரிச்சயமான பொழுதுபோக்குக் கணக்குகளே சிந்தனையைத் தொட்டன .எண்களை வகைப்படுத்தி அவற்றின் சிறப்பியல்புகளை விவரிக்குமாறு இந்நூலை ஆக்கியுள்ளேன் .இது பொது அறிவியல் தலைப்பில் நான் எழுதிய முதல் ஆங்கில நூலாகும் .இதில் ஒற்றை-இரட்டை எண்கள் ,இருமடி ,மும்மடி எண்கள் . ராமானுஜன் எங்கள் ,பகா எண்கள் ,வட்டச் சுற்று வடிவெண்கள் ,இருவழியொக்கும் எண்கள் ,முழுமை எண்கள் ,மந்தி எண்கள் , பாஸ்கரா எண்கள் ,விஜயா எண்கள் ஹர்ஷத் எண்கள் , பிபினோசி எண்கள் , காப்ரேக்கர் எண்கள் ,டாட்டாடிரே எண்கள் ,இருமா ன  எண்கள் என மொத்தம் 17 வகையான எண்களைப் பற்றிக்   கூறுகின்றது 

No comments:

Post a Comment