Sunday, October 8, 2023

 ஞாயிறு போற்றுதும்

 


தலைப்பு : ஞாயிறு போற்றுதும்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை

முதல் பதிப்பு -செப்டம்பர் 1994

இரண்டாம் பதிப்பு மே 1996

மூன்றாம் பதிப்பு அக்டோபர 1998

நான்காம் பாதிப்பு பிப்ரவரி 1999

பதிவு எண் :A.770 ISBN 81-234-0322-4

மொழி : தமிழ்

கருப்பொருள் : சிறுவர்க்கான அறிவியல்- சூரிய ஆற்றல்

பக்கங்கள்:51 விலை: Rs.10

 

       இந்தியாவில் கல்வி கற்றோர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால் முதியோர் கல்வித் திட்டத்தை அரசு செயல்படுத்தியது .என்றாலும் தொடர்ந்து அதில் ஆர்வம் காட்டவில்லை.  இருமுறை NCBH நிறுவனத்தார் முதியோர்களுக்காக எளிய தமிழில் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் 80 பக்கங்களுக்கு மிகாமல் பொதுமக்களுக்கான அறிவியல் தலைப்புக்களில் நூல் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். சூரிய ஆற்றல் மக்களின் எதிர்கால ஆற்றல் மூலமாக இருக்கும் என்பதால்  அதைப்பற்றி மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்   ஏற்கனவே சூரிய ஆற்றல் பற்றி இரண்டு நூல்களை எழுதியதாலலும்  இளமறிவியல் மற்றும்  மூதறிவியல் மாணவர்களுக்கு சூரிய ஆற்றல் பயன்பாடு பற்றி  பாடம் எடுத்த அனுபவத்தாலும்  சூரிய ஆற்றல் பற்றி எழுத வேண்டும் என்றே நினைத்தேன் பெரிய எழுத்தில் போதிய படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது முதியோர் கல்வியை ஒரு சமுதாயப் பணியாக மேற்கொள்ள அறிவுறுத்துவதோடு அதற்கு ஒரு சிறு காணிக்கையாக இச்சிறு நூலை படைத்து கல்வி கற்க விரும்பும் முதியோர்களுக்காக வெளியிட்டுள்ளேன்.1991-1000 வரையில் நான்கு பதிப்புகளைக் கடந்தது . அதன் பிறகு எத்துணை பதிப்புக்கள் வெளிவந்தன என்ற விவரம் எனக்கு இன்றுவரை தகவல் இல்லை..

 

No comments:

Post a Comment