Monday, October 9, 2023

 வேதகணிதம்

 


தலைப்பு : வேதகணிதம்

வெளியீட்டாளர் : மணிவாசகர் பதிப்பகம் சென்னை

ஆண்டு அக்டொபேர் 2006

மொழி: தமிழ் 

கருப்பொருள் கணிதம்

 பக்கங்கள்:104 விலை:Rs.30

  

            இந்திய கணித ஆசிரியர்கள் சங்கத்துடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. ஸ்ரீனிவாசன் சங்கத்தின் ஒரு பொறுப்பாளராக்க இருந்தார். சயன்ஸ் டுடே சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழாகளில் வெளிவந்த  என்னுடைய சில கட்டுரைகளைப் பார்த்து விட்டு கும்பகோணத்தில் இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் பொதுமக்களுக்கான சொற்பொழிவில் மாயக்கட்டங்கள் பற்றி பேச வாய்ப்புக் கொடுத்தார்.அந்தச் சங்கம் சில கணித நூல்களை வெளியிட்டிருந்தது .எனக்குதான் பொழுதுபோக்குக் கணக்கு என்றால் பிடிக்குமே. இராமானுஜனின் படைப்புகள் பற்றி சில நூல்கள், கணக்கு வினா விடை ,போன்ற புத்தகங்களை வாங்கினேன் .வேதகாணிதம் பற்றிய ஒரு நூலை ஆர்டர் செய்து வாங்கினேன் .வேத கணிதம் பற்றி உண்மையில் இந்த நூலைப் படித்துத்தான் ஓரளவு தெரிந்து கொண்டேன்.  நம் முன்னோர்கள் அறிவியல் வசதிகள் இல்லாத அந்தக்காலத்திலேயே பல அரிய ண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்கள் என்பதற்கும் செயல்  வல்லவர்கள் என்பதற்கும் வேதகாணிதம் ஓர் எடுத்துக்காட்டு .

       வேதகணிதம் பற்றி நம் மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்று விரும்பினேன். நான் புரிந்துகொண்டதை என்னுடைய சிந்தனைகளோடு கலந்து வேத கணிதம் என்ற இந்த நூலை எழுதி வெளியிட்டேன்..ஒரு முறை டாக்டர் உமையாள் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் கணிதப் பேரவையில் வேதகணிதம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினேன் .அது மாணவிகளிடையே பெரிய அளவில் உற்சாகத்தைத் தூண்டியது.

          இந்த நூலில் வேத கணிதம் மூலம் உயர் இலக்க எண்களாலான பெருக்கல்களை மனத்திற்குள்ளாகவே எப்படிச் செய்வது என்ற வழிமுறையைத் தெரிவிக்கின்றது .மேலும் வகுத்தல் முறைகள் பகா எண்களும் ,வட்டச்சுற்று வடிவெண்களும் போன்றவைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

 

No comments:

Post a Comment