Sunday, October 8, 2023

 7அறிந்து கொள்ளவேண்டிய அறிவியற் செய்திகள்

 

 தலைப்பு : அறிந்து கொள்ளவேண்டிய அறிவியற் செய்திகள்

வெளியீட்டாளர் : ஸ்டார் பிரசுரம்

ஆண்டு பிப்ரவரி  1989

மொழி : தமிழ்

கருப்பொருள்அறிவியல் செய்திகள்  

பக்கங்கள் 168 விலை: Rs.16

 


 தலைப்பு : அறிந்து கொள்ளவேண்டிய அறிவியற் செய்திகள்

வெளியீட்டாளர் : கண்ணப்பன் பதிப்பகம்

ஆண்டு: ஆகஸ்ட்  2007

மொழி : தமிழ்

கருப்பொருள்: அறிவியல் செய்திகள்  

பக்கங்கள்:144 விலை:Rs.50

    பல ஆண்டுகளாக அறிவியல் தொடர்பான செய்திகளை துணுக்குச் செய்திகளாக விஞ்ஞானச் சுடர், முத்தாரம் போன்ற இதழ்களில் வெளியிட்டு வந்தேன். எனக்கு மூலமாக இருந்தவை சயன்ஸ் டுடே சயன்ஸ் ரிப்போர்ட்டர்  மட்டுமின்றி பிரிட்டிஷ் தூதரும் வெளியிடும் ஸ்பெக்ட்ரம்  ,ஹிந்து நாளிதழின் வார இணைப்பு போன்றவை களாகும் .ராஜா சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இந்தச் செய்திகளை வெளியிட்டு மற்றவர்களுக்கும் பயன்படுமாறு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நிறமாலை என்ற தலைப்பில் ஒரு கையெழுத்து இதழை சில மாத காலம் வெளியிட்டு வந்தேன். இந்த இதழை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மூதறிவியல் மாணவர்கள் மட்டும் படிக்க ஏற்படும் செய்துவந்தேன்.                                                   -

          எதையாவது எழுதி மற்றவர்களுக்குப் பயன்படுமாறு வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் என்னுடன் கூடப் பிறந்தது போல  வளர்ந்திருந்தது.நான் பணிபுரிந்தபல இடங்களில் இதழ்களின் வெளியீட்டில் ஆர்வம் காட்டினேன் . அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆண்டு மலர்களை வெளியிடும் குழுவில் இருந்தேன்.கோவிலூர் மடாலயத்தில் திருநெல்லை என்ற இதழுக்கு கட்டுரைகள் எழுதுவதோடு ஆலமரம் என்ற தலைப்பில் உள்சுற்றுக்கான இதழ் வெளியிட்டேன் .பின்னர் பணிபுரிந்த உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரியில்  URCW -NEWS Bulletin உருவாக்கினேன். விஞ்ஞானச் சுடர் மற்றும் அறிக அறிவியல் இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்தேன்

 

        .இந்தச் செய்திகளையெல்லாம் தொகுத்து அறிந்து கொள்ளவேண்டிய அறிவியற் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டேன்இதில் 50 அறிவியற் தொடர்பான செய்திகள் உள்ளன. .அடுத்தடுத்து புத்தகங்கள் எழுதியதால் நியூ  செஞ்சுரி புக் ஹவுஸ் தவிர்த்த வேறு புத்தக வெளியீட்டாளர்கள் தேவை என்பதை உணர்தேன் ..இந்த நூல் ஸ்டார் பிரசுரம் வெளியிட்டது .              

        இந்நூலை என்னுடைய அனுமதியின்றி கண்ணப்பன் பதிப்பகம் 2007 ஆம் ஆண்டில் ஒரு புதிய வெளியீடு போல வெளியிட்டது ..இது நீண்ட காலத்திற்குப் பிறகே தெரிய வந்தது . இதில் 45 செய்திகளை மட்டும் இணைத்திருந்தார்கள் ..இது பற்றி கண்ணப்பன் பதிப்பகத்திடம் விசாரித்த போது , அவர்கள் வருத்தம் கூடத் தெரிவிக்காமல் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆசிரியர் அன்பளிப்பை மட்டும் வழங்கினார்கள்

No comments:

Post a Comment