1.ஒட்டிக் கொண்டிருக்கும் பனிக்கட்டிகள்
ஒரு பனிக் கட்டியில் உப்பைத் தூவி மற்றொரு
பனிக் கட்டியை அதன் மீது வைத்தால் ஒட்டிக்
கொள்வதேன் ?
2. பனிக் கட்டி உருகினால் நீர்மட்டம் உயருமா ?
வாய் வரை நீருடன் கூடிய ஒரு பீக்கரில் உள்ள நீரில்
பனிக் கட்டித் துண்டு மிதக்கிறது .புற வெப்பநிலை
அதிகமாக இருப்பதால் பனிக்கட்டி உருகத்
தொடங்குகிறது .உருகிய நீர் வழிந்து வெளியேறுமா?
அல்லது பனிக்கட்டி உருகவே உருகாதா?
* * * * * * * * * * * *
1.பனிக்கட்டியின் மேற்புரப்பரப்பில் ஒரு மெல்லிய
நீர்ப் படலம் இருக்கும். உப்பை பனிக்கட்டியின் மீது
தூவினால் அது இந்த நீரில் கரைகிறது. இது
பனிக்கட்டியின் உருகுநிலையைக்
குறைத்து விடுகிறது. அதனால் உப்புக் கரைந்த
நீராலான பனிக்கட்டியின் வெப்பநிலை 0 டிகிரி C க்கு
கீழே குறைந்து விடுகிறது . எனினும்
அந்நிலையிலும் கூட பனிக்கட்டியின் புறப்
பரப்பில் உருகவே செய்கின்றன . மற்றொரு
பனிக்கட்டியை அதன் மீது வைக்க அவற்றில்
உள்ள நீர் படலங்களால் ஒருங்கிணைகின்றன .
எல்லா உப்பும் கரைந்து முடிந்த பின்பு ,
பனிக்கட்டியின் உருகு நிலை 0 டிகிரி C க்கு
உயருகிறது . இதனால் பனிக்கட்டிகளிடையே
உள்ள நீர்ப்படலம் உறைந்து விடுகிறது .
அதனால் இரு பனிக்கட்டித் துண்டுகளும்
ஒட்டிக் கொள்கின்றன .
2.நீர் மட்டம் மாறாதிருக்கும் . ஏனெனில்
பனிக்கட்டியின் எடை மிதப்பு விசையினால்
ஈடுசெயயப்படுகிறது . அதாவது பனிக்கட்டியினால்
வெளியேற்றப்பட்ட நீரின் எடைக்குச் சமமாக
அப் பனிக்கட்டியின் எடை இருக்கிறது .எனவே
பனிக்கட்டி உருகும் போது அதனால்
இடம் பெயர்த்தப்பட்ட நீரின் கனஅளவிற்குச்
சமமான கன அளவுள்ள நீராக மாறுகிறது .
இன்றைக்குதான் முதல் முதலாக உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன்.. பல சிறப்பான இடுகைகளை எழுதியிருக்கிறீர்கள்..
ReplyDeleteதொடருங்கள் சார்.
நல்ல பதிவுங்க சார்
ReplyDelete