வண்ண எழுத்துக்கள்
  
வெவ்வேறு வண்ணங் களாலான எழுத்துக்கள் மீது ஒரு 
கண்ணாடிப்  பாளத்தைவைக்க,எல்லா எழுத்துக்களும் ஒரே 
மாதிரியாக விலக்கமுற்று மேலெழுந்தது போலத் 
தோன்றுவதில்லை. சிவப்பு வண்ண  எழுத்துக்கள் பிறவற்றைக் 
காட்டிலும் மேலெழுந்தது போலத் தெரிகிறது. 
இதற்கு யாது காரணம் ?
ஒளி அலையின் நீளம் அதிகரிக்க ஒளி விலகல் எண் 
குறைகின்றது. அதாவது வைலட் நிற ஒளிக்கு 
அலைநீளம் 4x10^-7 மீ) ஒளி விலகல் எண் அதிகமாகவும் 
செந்நிற ஒளிக்கு (அலைநீளம்8x10^-7 மீ) குறைவாகவும் 
இருக்கிறது. தோற்ற இடப்பெயர்வு t (1 - l /u ) என்பதால் 
(இதில் t என்பது கண்ணாடிப் பாளத்தின் தடிப்பு, u  என்பது 
ஒளி விலகல் எண் ), சிவப்பு நிறப் பொருளுக்கு 
அதிகமாகவும், வைலட் நிறப் பொருளுக்குக் குறைவாகவும் 
இருக்கிறது.
அலைநீளமும் திசைவேகமும்
 
ஒளி அலைகள் என்பன மின்காந்த அலைகளாகும். இது நீண்ட 
அலைநீள நெடுக்கைக்குட்பட்டது.எனினும் மிகச் சொற்ப  
நெடுக்கைக்குட்பட்ட அலைநீளங்களை மட்டுமே கண்களால் 
உணரமுடியும் .இது வைலட் முதல் (4x10^-7 மீ )சிவப்பு வரை 
(8x10^-7 மீ ) உள்ளது. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் 
2.997925x10^8 மீ/வி ,அல்லது 186281  மையில்/வி .அலை 
மூலம் ஒரு வினாடியில் ஏற்படுத்தும் அதிர்வுகள் 
அதிர்வெண் எனப்படும். கட்புலனறி ஒளிக்கு இது 
7.5x10௦^14 முதல் 3.75x10^14 வரையுள்ள நெடுக்கையில் 
உள்ளது. அலை இயக்கத்தின் ஒரு முக்கியமான தொடர்பு ,
அலைநீளம், அதிர்வெண் இவற்றின் பெருக்கல் பலன் 
திசைவேகம் என்பதுதான் .ஒளியின் அளிநீளத்தை இரு 
மடங்காக்கினால் ஒளியின் திசைவேகம் எவ்வளவு 
இருக்கும் ?
அலைநீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறையும். குறைந்தால் அதிகரிக்கும் .இவற்றின் மாற்றங்கள் ஒன்றையொன்று 
சார்ந்தவை.ஆனால் இவற்றின் பெருக்கல்பலன் வெற்றிட 
வெளியில்  மாறிலியாகும் மேலும் வெற்றிடத்தில் 
ஒளியின் திசைவேகம் பெருமம் மட்டுமில்லை ,வேகத்தில் 
அதைவிடக்  கூடுதலான வேகத்தோடு இயங்கக் கூடியது 
வேறெதுவும் இல்லை. எனவே அலைநீளத்தை அதிகரித்தாலும் ,
குறைத்தாலும்  அல்லது அதிர்வெண்ணை மாற்றினாலும் 
திசைவேகம் மாறுவதில்லை


i just came to know about your site, keep it going. good work. thanks by the way! :)
ReplyDelete