மக்களுக்கு என்னென்ன இலவசம் எப்போது கொடுக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்வேன் என்பதை ஒத்துக்கொள்ளலாம் . ஆனால் அரசு சார்ந்த எல்லாப் பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை இறுதி முடிவு செய்யலாம் .ஆனால் பட்டியலையே நான்தான் செய்வேன் என்பது தவறு. பொதுத் தேர்தலுக்கு தொகுதிகளில் நிறுத்தவேண்டிய வேட்பாளர்களை குழுவின் உதவியின்றி நானே முடிவு செய்வேன் என்பது தவறு . பரிசும் விருதும் வழங்கும் விழா நீங்கள் ஒருவரே முடிவு செய்யலாம் ஆனால் பரிசுக்கு ம் விருதுக்கும் உரியவரைத் தேர்வுசெய்வது ஒரு தகுதியான குழுவேயன்றி தனியொருவர் இல்லை. அரசின் அணைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளிலும் ஒருவரின் முடிவால் மட்டுமே நிகழும் என்றால் அரசு ஊழியர்களை அடிமைகளாக மட்டுமே செயல்படமுடியும். உயர் அதிகாரிகரிகள் கண்காணிக்கலாம். பணிக்கு அவர்களைத் தேர்வு செய்துவிட்டு அவர்களுடைய அடிப்படை வேலையையே தானே செய்வது எதோ உள்நோக்கம் இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது
No comments:
Post a Comment