Sunday, December 5, 2010

சின்னக் குமிழும் பெரிய குமிழும்






சோப்புக் கரைசலைக் கொண்டு குமிழ்களை ஏற்படுத்தும்
வித்தையை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் .இவை
சொற்ப நேரமே நிலைத்திருந்து பின்வெடித்து
விடுகின்றது .சில சிறப்பு வேதிப் பொருட்களை கலந்து
நெடுநேரம் நிலைத்திருக்குமாறு செய்ய முடியும். அப்படி
உண்டாக்கப்பட்ட இரு சோப்புக் குமிழிகளில்
ஒன்று சிறியதாகவும் மற்றொன்று பெரியதாகவும்
இருக்கின்றன. அவ்விரண்டுகுமிழ்களையும் ஒரு நுண்
புழைக் குழாய் மூலம் இணைக்கப் படுகின்றன .இச்
சோதனையில் என்ன நிகழும் என எதிர்பார்க்கலாம் ?
                                 *************
பொதுவாக எல்லோரும் தவறாக பெரிய குமிழில் உள்ள
பருமன் மிகுந்த காற்று சிறிய குமிழுக்குச் சென்று இரு
குமிழுகளும் சம அளவு பருமன் கொண்டதாக
இருக்கும் என்று கூறுவர். ஆனால் குமிழியில் உள்ள
காற்றின் பரிமாற்றம் அங்குள்ள அழுத்தத்தைப்
பொறுத்ததேயன்றி பருமனைப் பொறுத்ததில்லை .
குமிழியின் கோளவடிவம் என்பது கொடுக்கப்பட்ட
பருமனுக்கு இருக்கும் மிகக் குறைந்த புறப்பரப்பு .
இதற்கு சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையே
(Surface tension) காரணம். இதன்னால் உள்ளே உள்ள
காற்று பலூனில் அடைக்கப் பட்ட காற்று
போல இறுக்கப் படுகிறது . உள்ளே இருக்கும்
கூடுதல் அழுத்தம் பரப்பு இழுவிசைக்கு நேர்
விகிதத்திலும் ,கோளத்தின் ஆரத்திற்கு எதிர்
விகிதத்திலும் இருக்கிறது .இதனால்
பெரிய கோளத்தில் காற்றழுத்தம் குறைவாகவும் ,
சிறிய கோளத்தில் அதிகமாகவும் இருக்கும் .
அப்போது காற்று சிறிய கோளத்திலிருந்து பெரிய
கோளத்திற்குச் செல்லும் .அதாவது பெரிய கோளம்
இன்னும் பெரியதாகும், சிறியது இன்னும் சிறியதாகும் .
குமிழ் சிறியதாக உல் அழுத்தம் அதிகரிப்பதால் அது
வெடித்து விடலாம் .அல்லது ஒரு பகுதி
வளைவாரத்தை மட்டும் கொண்டு
பரப்பு இழுவிசையைக் குறைத்து எதிர் முனையில்
உள்ள பெரிய கோளத்தின் சொற்ப அளவு அழுத்தத்தை
ஈடுசெய்யலாம் .

1 comment:

  1. குமிழுக்குள் இத்தனை நடக்கிறதா ?

    பரப்பு இழுவிசைக்கு பக்கதிலேயே ஆங்கிலத்தில் கொடுத்தது நல்லதே.

    word verification -ஐ நீக்கவும். கமெண்ட்ஸ் தனி விண்டோவில் ஓப்பன் ஆகும் படி செய்வது நல்லது, இல்லாவிட்டால் ஏரர் மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கும்

    ReplyDelete