Friday, October 12, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள்- டைட்டானியம் -தொடர்ச்சி பயன்கள்.
டைட்டானியம் டெட்ரா குளோரைடு அடர்த்தியான புகையை உண்டாக்கி காட்சியை மறைக்கின்றது. இது கலவரக் கூட்டத்தைக் கலைக்க அல்லது முன்னேற முடியாது தடுக்கப் பயன்படுகிறது. டைட்டானியம், ஆக்சிஜனுடன் தீவிரமாக வினை புரிவதால் இப் பண்பை இரும்பு ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை அகற்றப் பயன்படுத்திக் கொள்ளகின்றார்கள். இப் பண்புடைய சிலிகானை விட டைட்டானியம் 10 மடங்கு மேலானது.எக்கை வளிம வெளியேற்றத்திற்கு (degassing) உட்படுத்தினால் அதன் அரிமான எதிர்ப்பு அதிகரிப்பதுடன் பட்டறைப் பயன்படும் மேம்படுகின்றது. டைட்டானியம் அலுமினியத்தைவிட 12 மடங்கும் இரும்பை விட 4 மடங்கும் கடினத் தன்மை மிக்கது. இதனால் தேய்மானத்திற்கு டைட்டானியத்தால் செய்யப்பட்ட இயந்திர உறுப்புகள் அதிகம் ஆளாவதில்லை. டைட்டானியம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை என்பதால் மின் காப்புச் சாதனங்கள் மற்றும் பீங்கான் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. அலுமினியத்தைப் போல வெப்பங் கடத்தாததால் உயர் வேகத்தில் விமானம் பறக்கும் போது உராய்வினால் உண்டாகும் வெப்பம் உட்பகுதிகளுக்குக் கடத்தப்படுவதில்லை. ஒலியின் வேகத்தையும் விஞ்சிய வேகத்தில் இயங்கும் விமானங்களைக் கட்டமைக்க டைட்டானியம் துணை நிற்கிறது . விண்வெளிப் பயணம் டைட்டானியத்தின் துணை யின்றி பெரிதாக வளர்ந்து விட முடியாது. டைட்டானியத்தால் ஆன கலங்கள் நீர்ம எரிமங்களான நீர்ம ஹைட்ரஜன், நீர்ம ஆக்சிஜன் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.மிகத் தாழ்ந்த வெப்ப நிலையில் டைட்டானியம் சிதைவதில்லை. மாறாகத் தன் வலிமையை அதிகரித்துக் கொள்கிறது. இதனால் பீற்று வளி விமானங்கள் (Jet ).,ஏவூர்திகளின் கட்டமைப்பில் டைட்டானியம் பங்கேற்றுள்ளது. வெற்றிட வெளியில் டைட்டானியத்தை எளிதாக வெட்டவும்,பற்றவைத்துப் பிணைக்கவும் முடிகிறது டைட்டானியமும் நிக்கலும் சேர்ந்து உருவாக்கப் பட்ட ஒரு கலப்பு உலோகம் நிட்டினால் (Nitinol ) ஆகும். இது தன் பழைய உருவத் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. உருவமாற்றத்திற்கு உட்பட்ட பின்பு ,மீண்டும் பழைய தோற்றத்தை அதே சூழலில் இருக்கும் நிலையில் அடையப் பெறுகிறது. இதை நினைவு உலோகம் (memory metal ) அல்லது வடிவம் மறவா உலோகம் (shape memory metal ) என்பர். 1962 -ல் வில்லியம் ஜெ.பக்லர் என்ற அமெரிக்கப் பொறிஞரால் இது கண்டு பிடிக்கப்பட்டது .இப்பண்பு தொழில் நுட்பத் துறைகளில் பல புதிய பயன்களைத் தந்துள்ளது. .மின் கடத்தப் பொருட்களில் வலிமை குறைந்த புற மின் புலத்தில் மின் முனைவாக்கத் தூண்டலைப் பெறுவதுடன் அதைப் புற மின் புலம் நீங்கிய நிலையிலும் தக்க வைத்துக் கொள்கிறது.இம் முனைவாக்கம் (Polarization ) வெப்ப நிலையைச் சார்ந்திருக்கிறது என்பதால் வெப்ப நிலை மாற்றங்கள் முனைவாக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதை வெப்ப மின் முனைவாக்க விளைவு (Pyro electeric effect ) என்பர். இவ் விளைவை ஏற்படுத்தும் படிகங்களை வெப்ப முனைவாகுப் படிகம் என்றும்,பெரோ மின் படிகம் என்றும் கூறுவர் .இவற்றில் செறிவு மிக்க புற மின் புலத்தைத் தோற்றுவித்து இரு மின் முனைகளின் முனைவாகுத் திசையை 180 டிகிரி கூடத் திருப்பலாம் . பேரியம் டைட்டானேட்(BaTiO3 ) இத் தன்மையது .இவை வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் மாற்றிகளில் பயன்படுகின்றன. டைட்டானியக் கலப்புள்ள வேறு சில படிகங்களும் -லித்தியம் ஸிர்கோனியம் டைட்டானேட் ,கால்சியம் பேரியம் டைட்டானேட் போன்றவைகளும்- பெரோ மின் படிகங்களாகும்((Ferro electric crystals) இப்படிகங்கள் ஒலி-மின் விளைவுக்கு (piezo electric effect ) க்கும் உட்படுகின்றன.இப் படிகங்களில் ஒரு திசை அச்சு வழியாக அழுத்தம் கொடுக்க ,அதற்குச் செங்குத்தான வேறொரு திசை அச்சு வழியில் குறுக்கிடும் பக்கப் பரப்பில் மின்னூட்டம் செரிவுறுகின்றன.இதன் மறுதலையாக ஒரு திசை அச்சு வழியாக மாறு மின் புலம் செயல்படுமாறு செய்ய அதற்குச் செங்குத்தான வேறொரு திசை அச்சு வழியில் குறுக்கிடும் பக்கங்கள் அதிர்வுக்குள்ளாகின்றன . இந்த அதிர்வு கேளா ஒளியை (ultasonic) எழுப்புகின்றன என்பதால் பேரியம் டைட்டானேட் கேளா ஒலி உற்பத்தி செய்யும் கருவிகளில் பயன் படுகின்றது.

No comments:

Post a Comment