Wednesday, October 10, 2012

Kavithai


யார்?

இன்றும் என்னென்னவோ நடக்குது இந்நாட்டில்

இதற்கெல்லாம் காரணம் யார் யார் ?

இதையறிந்து துணிந்து சொல்வது யார்?

அதைப்புரிந்து   திருந்துவது யார் ?

திருந்தாவிட்டால் திருத்துவது யார் ?

தேர்தலுக்குமுன் பணத்தை  அள்ளி வீசுவது யார் ?

தேர்தலுக்குப்பின் பணத்தை அள்ளிக் கொள்வது யார்?

நட்புஅரசியல்வாதி பகையானால் நண்பனைக் குற்றவாளியாக்கியது யார்?

பகைஅரசியல்வாதி நட்பானால் குற்றவாளியை விடுவித்தது  யார் ?

இலவசப்பொருளால் மக்களை சோம்பேறியாக்குவது யார்?

இல்லாதோர் அதிகமாகி வறுமையை வளரவிட்டது யார்?

அரசுக்கு வருமானமென்று எல்லோரையும் குடிகாரர்களாகக்கியது யார் ?

அந்நிய நாட்டு வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியது யார் ?

கொலையையும் மிகுந்து வரும் களவையும்  தடுப்பது யார் ?

கலப்பட வியாபாரிகளைக் கண்டும் காணாமல் இருப்பது யார் ?

அரசு அலுவலகங்களில் ஊறிப்போன ஊழலைத் தடுப்பது யார்?

நேர்மையாய் நடக்க காவலருக்குக் கட்டளையிடுவது யார் ?

பெருகிவரும் பாலியல் குற்றங்களை தடுப்பது யார் ?

பான்பாரக் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது யார் ?

குவாரிகளில் முறைகேடு நடக்கக் காரணம் யார் ?

குறுகிய காலத்தில் பெரும் பொருள் குவித்தது யார் ?

வேலையிலாத் திண்டாட்டத்தைக் கொடுத்தது யார் ?

வெளியே நல்லவனாய் நடிப்பதும் உள்ளே கெட்டவனாய் நடப்பதும் யார் ?

நாட்டின் வளத்தையெல்லாம் சிலருக்கே தாரை வார்த்தது யார் ?

நாள்தோறும் கேட்டும் யாரும் சொல்லவில்லையே

உருப்படியாய் ஒரு தீர்வும் காணவில்லையே

ஒருவழியாய் என்காலம் முடிந்துவிட்டது என்றாலும்

வழிவழியாய் வரும் வாரிசுகளின் எதிர்காலம்

உருவமின்றி அருவமின்றி கேள்விக்குறியாய் நிற்குதே

கத்தியின்றி இரத்தமின்றி மனம்வலியால் துடிக்குதே

இன்னும் என்னென்னவோ நடக்குது இந்நாட்டில்

இதற்கெல்லாம் காரணம் யார் யார் ?

இதையறிந்து துணிந்து சொல்வது யார்?

அதைப்புரிந்து   திருந்துவது யார் ?

திருந்தாவிட்டால் திருத்துவது யார் ?

No comments:

Post a Comment